உலகம்
null

கடற்கரையில் காதலர்கள் உல்லாசமாக இருக்க தடை- பொதுமக்கள் புகாரால் அதிரடி நடவடிக்கை

Published On 2023-06-12 04:05 GMT   |   Update On 2023-06-12 04:11 GMT
  • கடற்கரைக்கு பொழுது போக்குவதற்காக குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் காதலர்களின் செயல்களை பார்த்து முகம் சுழித்தனர்.
  • கடற்கரையிலும் இது தொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.

வீரேநகர்:

நெதர்லாந்த் வீரேநகரில் புகழ்பெற்ற கடற்கரை உள்ளது. காதலர்களின் சொர்க்கபுரியாக திகழும் இந்த கடற்கரைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். விடுமுறை நாட்களில் ஏராளமான காதல் ஜோடிகள் இங்கு திரளுவார்கள்.

காதலர்கள் தனிமையில் நெருக்கமாக அமர்ந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடுவது உண்டு. சில காதலர்கள் மெய்மறந்து அத்துமீறுவதும் உண்டு. பக்கத்தில் யார்? இருக்கிறார்கள் என்பதை மறந்து அவர்கள் நிர்வாணமாக உல்லாசத்திலும் ஈடுபடுவார்கள், கடற்கரைக்கு அருகில் இருக்கும் சிறு குன்றுகளை கூட காதலர்கள் விடுவது இல்லை. அங்கும் அவர்கள் ஜாலியாக இருப்பார்கள்.

இதனால் அந்த கடற்கரைக்கு பொழுது போக்குவதற்காக குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் காதலர்களின் செயல்களை பார்த்து முகம் சுழித்தனர்.

கடற்கரையை படுக்கை அறைகாக மாற்றும் இளசுகளின் இந்த அத்துமீறல் குறித்து வீரேநகர் மாநகராட்சிக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தது. இதையடுத்து வீரேநகர் கடற்கரையில் காதல் ஜோடியினர் உல்லாசமாக இருக்க தற்போது நெதர்லாந்து அரசு தடை விதித்துள்ளது. கடற்கரையிலும் இது தொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி யாராவது கடற்கரையில் உல்லாசமாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கபட்டு உள்ளது.

இந்த தடையால் கடற்கரையில் நிர்வாணமாக சன்பாத் எடுக்க வரும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொது இடங்களில் நாங்கள் உல்லாசமாக இருப்பதில்லை என்றும் உடல் ஆரோக்கியத்துக்காக சன்பாத் எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News