உலகம்

'டேட்டிங்' செல்லும் ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு அறிவித்த நிறுவனம்

Published On 2024-11-24 09:29 GMT   |   Update On 2024-11-24 09:29 GMT
  • தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
  • சில பயனர்கள், அரசாங்கம் இதுபோன்ற சலுகைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என பரிந்துரைத்தனர்.

மக்கள் தொகை பெருக்கம் பெரும் பிரச்சனையாகி வரும் நிலையில், சீனாவில் குழந்தை பிறப்பு விகிதமும், திருமணம் செய்து கொள்வோரின் விகிதமும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சீன நிறுவனம் ஒன்று டேட்டிங் செல்லும் ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. சீன தொழில்நுட்ப நிறுவனமான இன்ஸ்டா 360 டேட்டிங் செல்லும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்திருந்தது.

பணிபுரியும் இடத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தில் பணியாளர்களுக்கு பல்வேறு வகைகளில் வெகுமதிகள் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

சில பயனர்கள், அரசாங்கம் இதுபோன்ற சலுகைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என பரிந்துரைத்தனர். ஒரு விமர்சகர், அன்பை பணத்தால் அளந்துவிட முடியாது என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News