உளவு செயற்கை கோளை 3-வது முறையாக ஏவும் வடகொரியா
- தேசிய பாதுகாப்பை பெரிதும் பாதிக்கும் விஷயமாகும்.
- ஜப்பானிடம் வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா, கடந்த ஆகஸ்டு மாதம், உளவு செயற்கைக் கோளை ஏவியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின்னர் அக்டோபரில் 2-வது முறையாக ஏவிய உளவு செயற்கைக் கோளும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் 3-வது முறையாக உளவு செயற்கைக் கோளை விண்ணில் ஏவி உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஜப்பானிடம் வடகொரியா தெரிவித்துள்ளது.
அதன்படி வருகிற 30-ந்தேதிக்குள் உளவு செயற்கைக் கோளை ஏவுவதற்கான தனது திட்டத்தை ஜப்பானிடம் வடகொரியா கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இது தொடர்பபாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறும்போது, வடகொரியா செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதே நோக்கமாக இருந்தாலும், ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் தொடர் மீறலாகும்.
இது தேசிய பாதுகாப்பை பெரிதும் பாதிக்கும் விஷயமாகும். அமெரிக்கா, தென்கொரியா மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து செயற்கைக் கோள், ஏவுகணை ஏவுவதை தொடர வேண்டாம் என்று வடகொரியாவை ஜப்பான் வலியுறுத்தும் என்றார்.