ஹிஜாப் விவகாரத்தில் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது- ஈரான் அதிபர் எச்சரிக்கை
- போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 76 பேர் பலியாகி உள்ளனர்.
- கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
ஈரானில் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி போலீசாரால் தாக்கப்பட்ட இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்தார். இதனால் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது.
ஹிஜாப்பை எரித்தும், தலைமுடியை வெட்டியும் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 76 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தநிலையில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஒரு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாஷா அமினியின் மரணம் துயரமானது. ஆனால் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். மக்கள் பாதுகாப்பு என்பது ஈரான் அரசின் சிவப்பு கோடு ஆகும். அதை மீறி குழப்பம் விளைவிக்க யாருக்கும் அனுமதி இல்லை. எதிரி (அமெரிக்கா) தேசிய ஒற்றுமையை இலக்காக கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.