உலகம்

VIDEO: நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு.. 2025 ஆம் வருடத்தை வரவேற்ற மக்கள்

Published On 2024-12-31 11:32 GMT   |   Update On 2024-12-31 11:40 GMT
  • கிரிபாட்டி, டோங்கா மற்றும் சமோவா ஆகியவை 2025 ஆம் ஆண்டு தொடங்கின.
  • இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் அங்கு புத்தாண்டு பிறந்தது

366 நாட்களை நிறைவு செய்து இன்றுடன் 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. 2025 புத்தாண்டை வரவேற்க உலகம் தயாராகி வருகிறது.

உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகள் முதலாவதாகவும், சில நாடுகள் தாமதமாகவும் புத்தாண்டை வரவேற்கின்றன.

இந்திய நேரப்படி (IST) இந்தியா இயங்குகிறது. இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்தை விட 5 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது (UTC +5:30).

பூமியின் 2025 புத்தாண்டை முதலில் மத்திய பசிபிக் பெருங்கடலில் கிரிபாட்டி குடியரசின் அங்கமான கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவு இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டை வரவேற்றது. தொடர்ந்து கிரிபாட்டி, டோங்கா மற்றும் சமோவா ஆகியவை 2025 ஆம் ஆண்டு தொடங்கின.

இந்நிலையில் அதைத்தொடர்ந்து 52 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் 2025 பிறந்துள்ளது.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் அங்கு புத்தாண்டு பிறந்தது. நகரின் மையப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர்.

தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் விருந்துகள் என அங்கு கொண்டாட்டங்கள் கலை கட்டியுள்ளது. நியேசிலாந்து தலைநகர் சிட்னியிலும் புத்தாண்டு பிறந்து, மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைதொடர்ந்து டோக்கியோ, ஜப்பானிலும் புத்தாண்டு பிறந்தது. 

Tags:    

Similar News