செய்திகள்

ஸ்ரீரங்கம் சக்கரத்தாழ்வாருக்கு ஜேஷ்டாபிஷேகம் வருகிற 1–ந் தேதி நடக்கிறது

Published On 2016-06-29 09:12 GMT   |   Update On 2016-06-29 09:12 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார்–செங்கமலவள்ளி தாயாருக்கும், உபகோவிலான திருவானைக்காவல் காட்டழகியசிங்கர் பெருமாளுக்கும் வருகிற 1–ந் தேதி ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார்–செங்கமலவள்ளி தாயாருக்கும், உபகோவிலான திருவானைக்காவல் காட்டழகியசிங்கர் பெருமாளுக்கும் வருகிற 1–ந் தேதி ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது.

இதை முன்னிட்டு அன்று காலை 7 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடங்களில் புனிதநீர் எடுத்து வரப்படுகிறது. பின்னர் காலை 10 மணிமுதல் சக்கரத்தாழ்வார் மற்றும் செங்கமலவள்ளிதாயார் சன்னதிகளில் ஜேஷ்டாபிஷேகமும், மதியம் 12 மணிக்கு மங்களஆரத்தியும், திருப்பாவாடை எனப்படும் பெரிய தளி கை நைவேத்தியமும் நடைபெறுகிறது.

இதே போல காட்டழகியசிங்கர் பெருமாள் கோவிலுக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து காலை 9–30 மணிக்கு புனிதநீர் எடுத்து வரப்படுகிறது. பின்னர் 10 மணிமுதல் சிங்கர் பெருமாளின் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் எடை சரிபார்த்து சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.

12 மணியளவில் நகைகள் மீண்டும் கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின்னர் மங்களஆரத்தி நடைபெறு கிறது.இதைத் தொடர்ந்து திருப்பாவாடைஎனப்படும் பெரிய தளிகை நைவேத்தியம் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு அன்றுமுழுவதும் சக்கரத்தாழ்வார் சன்னதி, செங்கமலவள்ளிதாயார் சன்னதி, திருவானைக்காவல் காட்டழகியசிங்கர் பெருமாள் சன்னதிகளில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.

Similar News