செய்திகள்

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

Published On 2017-02-08 08:13 GMT   |   Update On 2017-02-08 08:13 GMT
திருவண்ணாமலையில் தை மாத கிரிவலம் செல்ல வரும் 10-ம்தேதி இரவு செல்வது உகந்தது என அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, தை மாதத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 10-ம்தேதி இரவு 8.01 மணிக்கு தொடங்கி, 11-ம் தேதி மாலை 6.51 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, வரும் 10ம் தேதி இரவு பவுர்ணமி கிரிவ லம் செல்வதற்கு உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், பவுர்ணமியை முன்னிட்டு, வரும் 10-ம் தேதி மற்றும் 11-ம்தேதி ஆகிய இரண்டு நாட்களும், அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. கட்டண தரிசனம், பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும்.

அண்ணாமலையார் கோவில் மகாகும்பா பிஷேகத்துக்கு பிறகு மண்டல பூஜை நடை பெறும் நாளில் பவுர்ணமி கிரிவலம் செல்வது மிகவும் சிறப்புக்குரியது. எனவே, வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

Similar News