படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
- படுகொலை விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
- உடலை வாங்க மறுத்த நிலையில், பெற்றோர் உடன் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை.
புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி காணாமல் போன ஆர்த்தி என்கிற 9 வயது சிறுமி கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்து சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சந்தித்து பேசினர்.
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியில் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் தரப்பில் கோரப்பட்டது.
உடலை வாங்க மறுத்த நிலையில், பெற்றோர் உடன் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் ரங்கசாமியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.