புதுச்சேரி

கோப்பு படம்.

பொது இடத்தில் தகராறு செய்த 6 பேர் கைது

Published On 2022-10-26 12:15 IST   |   Update On 2022-10-26 12:15:00 IST
  • கோவிந்த சாலையில் பொது இடத்தில் தகராறு செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • இதைத்தொடர்ந்து இரு தரப்பினரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

புதுச்சேரி:

கோவிந்த சாலையில் பொது இடத்தில் தகராறு செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுவை கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் தெருவில் இரு தரப்பினர் தகராறு செய்து ஒருவருக்கொருவர் தாக்கி கொள்வதாக பெரியகடை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இரு தரப்பினர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து இரு தரப்பினரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோவிந்தசாலை நேரு நகரை சேர்ந்த பழனிவேல் மனைவி தனலட்சுமி(வயது42), அவரது மகன் வசந்த்(24) மற்றும் கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் தெருவை சுப்பிரமணியன் மனைவி காயத்ரி(20) மற்றொரு தரப்பை சேர்ந்த கோவிந்தசாலை காமராஜர் வீதியை சேர்ந்த மணிகண்டன்(30) மற்றும் கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார்(38) மற்றும் அவரது சகோதரர் சுப்பிரமணியன்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News