புதுச்சேரி

கோப்பு படம்.

வீட்டில் விளையாடிய 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

Published On 2023-08-05 09:20 GMT   |   Update On 2023-08-05 09:20 GMT
  • உடனடியாக அவரது கணவருக்கு போன் செய்த மனைவி கடன் வசூலிக்க நபர் ஒருவர் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிப்-டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே கொடூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி வீட்டுக்கு தனியார் வாகன கடன் வசூலிக்க டிப்டாப் உடை அணிந்து வாலிபர் ஒருவர் சென்றார்.

அங்கு கட்டிட தொழிலாளி மனைவியிடம் உங்களது கணவர் வாகனம் வாங்கி இருப்பதாகவும் அதற்காக மாதத் தவணை கட்டவில்லை என கூறியுள்ளார்.

அதற்கு தொழிலாளியின் மனைவி அப்படி ஏதும் வாகனம் வாங்க வில்லையே என கூறியுள்ளார். உடனடியாக அவரது கணவருக்கு போன் செய்த மனைவி கடன் வசூலிக்க நபர் ஒருவர் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அப்படி ஏதும் கடன் வாங்கவில்லை உடனே வீட்டுக்கு வருவதாக அவர் தனது மனைவியிடம் கூறினார். அப்போது டிப்டாப் வாலிபருக்கும் தொழிலாளியின் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் வீட்டின் வெளியே விளையாட கொண்டிருந்த தொழிலாளியின் மகள் 8 வயது மகள் அவரது அம்மாவிடம் இதே வாலிபர் ஆடையை கலைந்து பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டதாக கூறினார்.

அதிர்ச்சி அடைந்த தொழிலாளியின் மனைவி அக்கம் பக்கத்தினரை அழைப்பதற்குள் ஆசாமி அங்கிருந்து பைக்கில் வேகமாக சென்று விட்டார். அந்த ஊர் வாலிபர்கள் அவரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற பொழுது அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிப்-டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News