புதுச்சேரி

காட்டேரிக்குப்பம் இந்திராகாந்தி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் இலவச சீருடை மற்றும் அதற்கான தையல் கூலியை வழங்கினார்.

78 அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்

Published On 2023-05-16 14:00 IST   |   Update On 2023-05-16 14:00:00 IST
  • புதுவை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு லாஸ்பேட்டை ஆசிரியர் பயிற்சி மையத்தில் தொடங்கியது.
  • புதுவை, காரைக்கால் அரசு பள்ளிகளில் தமிழக அரசின் பாடத்திட்டம் பின்பற்றப்பட்டது.

 புதுச்சேரி, மே 16-

புதுவை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு லாஸ்பேட்டை ஆசிரியர் பயிற்சி மையத்தில் தொடங்கியது.

பயிற்சி வகுப்பை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்து பேசியதாவது:-

புதுவை, காரைக்கால் அரசு பள்ளிகளில் தமிழக அரசின் பாடத்திட்டம் பின்பற்றப்பட்டது. அரசின் முடிவின்படி 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம் நடைமுறை யில் உள்ளது. பிற வகுப்புகளையும் இத்திட்டத்தில் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப் பட்டது. முதல் கட்டமாக 127 பள்ளிகளை சி.பி.எஸ்.இ. திட்டத்துக்கு மாற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். இதில் எவ்வித ஆய்வுமின்றி 78 பள்ளிகளை மாற்ற அனு மதி கிடைத்துள்ளது. பிற பள்ளிகளுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சம்பளம், கல்வித்துறை மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரத்து 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம் சிறப்பாக இருந்தால்தான் மாநிலம் வளர்ச்சி பெறும். இந்த நிதி பயனுள்ளதாக மாற மாநில மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் சிரமப்பட்டு படிக்கும் மாண வர்களுக்கு அதிக முக்கியத்து வம் அளிக்க வேண்டும். கல்வியில் புதிய நுணுக்கங்களை பயன்படுத்தி மாணவர்களை திறமை மிக்கவர்களாக மாற்ற வேண்டும். தனியார் பள்ளிகளு டன் போட்டி போட்ட தேர்ச்சி விகிதத்தை ஆசிரியர்கள் பெற்றுத்தர வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட புத்தகம் வாங்கி நிதி ஒதுக்கி தலைமை செயலருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்டாக் புதிய கமிட்டி உருவாக்கி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் சேர்க்கை விண்ணப்பங்கள் வெளியி டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News