புதுச்சேரி
- 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
- பேராசிரியைகள் அலமேலு மங்கை, மல்லிகேஸ்வரி, ஆசிரியைகள் பாரதி, திவ்யலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரியின் மனையியல் துறையின் கீழ் இயங்கும் மழலையர் பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ராஜி சுகுமார் தலைமைதாங்கினார். சிறப்பு விருந்தினராக உயர்கல்வி மற்றும் தொழில் நுட்பசார்பு செயலர் சவுமியா கலந்துகொண்டு மாறு வேடம், கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரித்தல், பாட்டு போட்டி உள்ளிட்டவைகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
விழாவில் மனையியல் துறை தலைவர் தனலட்சுமி, பேராசிரியைகள் அலமேலு மங்கை, மல்லிகேஸ்வரி, ஆசிரியைகள் பாரதி, திவ்யலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் ஆசிரியை தேவிபிரியா நன்றி கூறினார்.