புதுச்சேரி

தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீரில் பொதுமக்கள் இருசக்கரவாகனங்களில் சென்ற காட்சி. 

தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்

Published On 2022-12-13 08:17 GMT   |   Update On 2022-12-13 08:17 GMT
  • திருபுவனை அருகே தமிழகப் பகுதியான குயிலா பாளையம் கிராமம் உள்ளது.
  • இந்த கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

புதுச்சேரி:

திருபுவனை அருகே தமிழகப் பகுதியான குயிலா பாளையம் கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்கள் குயிலா பாளையத்திலிருந்து செல்லிப்பட்டு வழியாக புதுவைக்கு செல்ல பம்பை ஆற்றின் தரைப்பாலத்தைக் கடந்தே சென்று வந்தனர்.

இந்நிலையில் தற்பொழுது பெய்த மழையின் காரணமாக பம்பை ஆற்றில் தரைபாலத்தை மூழ்கடித்தவரே தண்ணீர் செல்கிறது.

 ஆனால் இந்த ஆபத்தை உணராமல் அவ்வழியாக வாகனங்களிலும் நடந்தும் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

இந்நிலையில் அதிக தண்ணீர் வரத்து ஏற்பட்டால் பொதுமக்கள் வாகனத்துடன் ஆற்றில் அடித்துச் செல்லும் சூழல் உள்ளது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி அவ்வழியாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்பு அமைத்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவேண்டும்.

மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் பெய்த மழையின் காரணமாக தரை பாலத்தை இரு கரையிலும் தண்ணீர் மூழ்கடித்து சென்றது. இதனை அடுத்து கண்டமங்கலம் போலீசார் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்லாத வண்ணம் கழிகளால் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News