கணவர் மீது முன்னாள்அமைச்சர் சந்திரபிரியங்கா புகார்
- விசாரணைக்கு டி.ஜி.பி. உத்தரவு
- கடந்த 6 மாதமாக சந்திர பிரியங்கா தனது கணவர் சண்முகத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
புதுச்சேரி:
புதுச்சேரி போக்கு வரத்துதுறை அமைச்சர் சந்திரபிரியங்கா செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் பத வியை பறித்தார்.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ.வாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த 6 மாதமாக சந்திர பிரியங்கா தனது கணவர் சண்முகத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அரசால் சந்திர பிரியங்காவுக்கு வழங்கப்பட்ட வீட்டில் இருந்து தனது பொருட்களை எடுக்க சென்ற சண்முகத்தை பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த சண்முகம் காரைக்கால் திரும்பினார். தொடர்ந்து கணவன், மனைவி இடையே நிலவி வந்த குடும்ப பிரச்னை மோதலாக மாறியுள்ளது.
இதற்கிடையே சந்திரபிரியங்கா டி.ஜி.பி ஸ்ரீநிவாசனை சந்தித்தார்.
அப்போது தனது கணவர் சண்முகம், தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தொடர்ந்து அவதூறாக பேசுவதாகவும், அவர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்து அறிக்கை தரும்படி, காரைக்கால் சீனியர் எஸ்.பி. கவுகால் நிதினுக்கு (பொறுப்பு) உத்தர விட்டுள்ளார். தற்போது சீனியர் எஸ்.பி. விடுப்பில் சென்றுள்ளார். 5 நாட்கள் கழித்து விசாரணைக்கு வருமாறு சண்முகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புகார் குறித்து காரைக்கா லில் உள்ள சந்திர பிரியங்காவை தொடர்பு கொண்டு கேட்ட போது, எனக்கு கொலை மிரட்டல் அதிகம் உள்ளது. எனக்கு எதிராக சதி வேலை நடக்கிறது. எனவே இது தொடர்பாக சண்முகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்து உள்ளேன் என்றார்.