பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
- பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதல்வர் மற்றும் இயக்குனர், மருத்துவ கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பதவிகாலம் முடிவடைந்தது.
- பிம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல் தலைமையில் புதிய நிர்வாகிகள் உறுதி மொழி எடுத்து பதவியேற்றனர்.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதல்வர் மற்றும் இயக்குனர், மருத்துவ கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பதவிகாலம் முடிவடைந்தது.
இதனை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.பிம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல் தலைமையில் புதிய நிர்வாகிகள் உறுதி மொழி எடுத்து பதவியேற்றனர்.
6 ஆண்டுகளாக பணிபுரிந்த மருத்துவ கல்லூரி முதல்வர் ரேணு நன்றி தெரிவித்து தம் பொறுப்புகளை புதிய முதல்வர் மற்றும் இயக்குனராக தேர்வு செய்யப்பட்ட சமுதாய மருத்துவ பேராசிரியர் அனில் பூர்த்தியிடம் ஒப்படைத்தார்.இவர் 20 ஆண்டுகளாக பிம்ஸ் மருத்துவமனையில் சமுதாய மருத்துவ துறையில் பேராசிரிய ராகவும் பதிவாள ராகவும் பணிபுரிந்தவர்.
மருத்துவ கண்காணிப்பாளராக அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றிவரும் தலைமை பேராசிரியர் டாக்டர் பீட்டர் மனோகரன் பதவி ஏற்றுக்கொண்டார்.
மேலும், துணைமுதல்வர்களாக டாக்டர் ஸ்டாலின் (முதுநிலை பிரிவு) டாக்டர் மேகி முருகன்(இளங்கலை மருத்துவ பிரிவு) செவிலியர் கண்காணிப்பாளராக கலைவாணி, மருத்துவ கல்வி ஒருங்கிணைப்பாளராக டாக்டர் நாயர் இக்பால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவி ஏற்ற அனைவரையும் கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் வாழ்த்தினார்.மேலும் மிகவும் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் முதல்வர் ரேணு உள்ளிட்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.