மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
- மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை கொண்டு உடனடியாக மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
- மீனவர்களின் தடைக்கால நிதி, படகு பழுது பார்க்கும் நிதியை இரட்டிப்பாக்க வேண்டும்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கூட்டம் நடத்தினர். கூட்டத்தின் முடிவில், மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை கொண்டு உடனடியாக மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். மீன்பிடி துறை முகத்தின் முகத்துவாரத்தை உடனே தூர்வார வேண்டும். மீனவர்கள் இட ஒதுக்கீட்டில் எம்.பி.சி -யில் இருந்து இ.பி.சி -க்கு மாற்றியதை மீண்டும் எம்.பி.சி -க்கு மாற்ற வேண்டும். டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மீனவர்களின் தடைக்கால நிதி, படகு பழுது பார்க்கும் நிதியை இரட்டிப்பாக்கவேண்டும்.
மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்க ளைச் சேர்ந்த மீனவர்களும் வருகின்ற 18-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது, மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்து, புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.