புதுச்சேரி

பிம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற ஒணம் பண்டிகையை பேராயர் தேவசகாயம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த காட்சி. 

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

Published On 2022-09-10 05:27 GMT   |   Update On 2022-09-10 05:27 GMT
  • பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
  • விழாவில் மருத்துவ மாணவ-மாணவிகள் மற்றும் செவிலியர் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

புதுச்சேரி:

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவில் முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார்.பிம்ஸ் மருத்துவ கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக சென்னை தென்னிந்திய திருச்சபை முன்னாள் பேராயர் தேவசகாயம் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தார்.

விழாவில் மருத்துவ மாணவ-மாணவிகள் மற்றும் செவிலியர் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களை நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல், பேராயர்தேவசகாயம் பாராட்டி கவுரவித்தனர்.

பின்னர் மாணவ-மாணவிகளின் கலை–நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவேலி அரச வேடமணிந்து வந்த மருத்துவ மாணவர் அனைவருக்கும் ஒணம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மாணவிகளின் அத்தப்பூ கோலம் அனைவரையும் கவர்ந்தது.விழாவில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகர் பேராசிரியை டாக்டர் ரேணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News