புதுச்சேரி
ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணி
- அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதிக்குட்பட்ட திருபுவனை பாளையம் பகுதியில் பெருமாள் நகர், ஜெயா நகர், வெங்கடா நகர் உட்புற விரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு கருங்கல் ஜல்லி சாலை அமைக்க மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து நிதியிலிருந்து 45 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடை பெற்றது. இதில் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.