Recap 2024

ரீவைண்ட் 2024: இந்த ஆண்டில் கிரிக்கெட்டில் ஏற்பட்ட சர்ச்சை சம்பவங்கள்

Published On 2024-12-30 12:18 GMT   |   Update On 2024-12-30 12:18 GMT
  • ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதிய போட்டியில் டாஸ் போட்டது சர்ச்சையானது.
  • பிசிசிஐ முன்னாள் தலைவர் என். ஸ்ரீனிவாசன் மீது லலித் மோடி பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு உலகளவில் கிரிக்கெட்டில் கவனத்தை ஈர்த்த சர்ச்சையான சம்பங்களை இந்த செய்தியின் மூலம் காண்போம்.

1. வங்க தேச கிரிக்கெட் வீரர் சாகிப் அல் ஹசன் ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது வழக்கம் போல நிறைய ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செஃல்பி எடுக்க முயற்சித்தார்கள். அப்போது ஒரு ரசிகர் அவரை மிகவும் நெருங்கி புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சித்தார். ஆனால் அதற்காக கோபப்பட்ட சாகிப் அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என வேகமாக அறைந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இது மட்டுமல்லாமல் மற்றுமொரு தேர்தல் விழா மேடையில் அமர்ந்திருந்த சாகிப்பை நிறைய பெண் ரசிகர்கள் செஃல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். அப்போது வேண்டா வெறுப்பாக சாகிப் அமர்ந்திருந்தார்.

2. ஐபிஎல் தொடரில் வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதின. அப்போது ஹர்திக் பாண்ட்யா மற்றும் டு பிளெசிஸ் ஆகியோர் டாஸ் போடுவதற்காக மைதானத்திற்கு வந்தனர்.

டாஸ் போடும் நிகழ்வும் நடைபெற்றது. ஆனால் டாஸ் விழுந்த பின்னர் அந்த காயினை எடுத்த நடுவர் ஸ்ரீநாத் மும்பை அணிக்கு ஆதரவாக காயினை திருப்பி காண்பித்து டுபிளிசிஸ் டாசில் தோல்வி அடைந்ததாக ஏமாற்றினார். இந்த சம்பவத்தை அடுத்த போட்டியின் போது பேட் கம்மின்ஸ் உடன் டுபிளிசிஸ் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்த சில வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

3. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) முன்னாள் தலைவர் லலித் மோடி, இந்த ஆண்டு ஐபிஎல் குறித்து தெரிவித்த கருத்து உள்பட பல சர்ச்சைகள் வெடித்தன.

பிசிசிஐ முன்னாள் தலைவர் என். ஸ்ரீனிவாசன் மீது லலித் மோடி பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் என். ஸ்ரீனிவாசன் ஆதிக்கம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த லலித் மோடி, ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டார் என்பதால் ஆன்ட்ரூ ப்ளின்டாஃப்-ஐ மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை. அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அது தெரியும். அவருக்கு ஐபிஎல் பிடிக்காது அவர் இது தோல்வியை தழுவும் என்று நினைத்தார்.

அவர் அம்பயர்களை மாற்றத் தொடங்கினார். சிஎஸ்கே போட்டிகளின் போது அவர் சிஎஸ்கே அம்பயர்களை நியமித்தார். அது எனக்கு பிரச்சினையாக இருந்தது. அது நேரடியாக பிக்சிங் செய்வதை போன்றதாகும். அதை வெளிப்படுத்த நினைக்கும் போது, அவர் எனக்கு எதிராக திரும்பினார். என்று தெரிவித்தார். இது 2024-ம் ஆண்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

4. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமெரிக்காவில் தேசிய கிரிக்கெட் லீக்கின் (என்சிஎல்) எதிர்கால எடிஷன்களுக்குத் தடை விதித்தது. ஐசிசி விதிகளுக்கு என்சிஎல் இணங்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

5. டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் சர்ச்சையானது. அந்த போட்டியில் இறுதி ஓவரில் மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் பவுண்டரி லைனில் பிடிப்பார். அப்போது அவரது கால் பவுண்டரி லைனை பட்டதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

6. பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார்.

மேல்முறையீட்டிற்குப் பிறகு ஆன்-பீல்ட் அம்பயரின் நாட் அவுட் முடிவு மாற்றியமைக்கப்பட்டது, மூன்றாவது நடுவரான ரிச்சர்ட் இல்லிங்வொர்த், அல்ட்ராஎட்ஜ் தொழில்நுட்பத்தை நம்பியிருந்தார். இது பந்து பேட் மற்றும் பேட் இரண்டிற்கும் அருகில் சென்றபோது ஒரு ஸ்பைக்கைக் காட்டியது.

ராகுலின் பேட் ஒரே நேரத்தில் மோதியதாகத் தோன்றினாலும், மூன்றாவது நடுவர் ஸ்பைக் ஒரு எட்ஜைக் குறிப்பிட்டு, ஆன்-பீல்ட் அம்பயரின் முடிவை மாற்றினார். உறுதியான ஆதாரம் இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பொதுவாக, இதுபோன்ற சூழ்நிலைகளில் சந்தேகத்தின் பலன் கள நடுவரின் முடிவை உறுதிப்படுத்துகிறது. ராகுல் வெளியேறுவதற்கு முன்பு நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோவுடன் சில நொடிகள் பேசிவிட்டு பெவிலியன் சென்றார்.

6. அபுதாபி டி10 லீக்கின் முன்னாள் துணை பயிற்சியாளர் சன்னி தில்லானுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் 6 ஆண்டுகள் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டது.

2021 அபுதாபி டி10 லீக்கின் போது போட்டிகளில் முறைகேடு செய்ய முயன்றதற்காக ஊழல் தடுப்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மீறல்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டன.

7. ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலின் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2-வது இன்னிங்சின் 70-வது ஓவரை வீசிய கம்மின்ஸ் ஜெய்ஸ்வாலுக்கு பவுன்ஸ் பந்தை வீசினார். இதனை அடிக்க ஜெய்ஸ்வால் முற்பட்ட போது பந்து கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. உடனே நடுவரிடம் அவுட் என ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் கேட்டனர். இதனை நடுவர் நிராகரித்தார். உடனே கம்மின்ஸ் ரிவ்யூ கேட்டார்.

இதனையடுத்து 3-ம் நடுவர் இதனை சோதித்தார். அப்போது அல்ட்ரா எட்ஜ்-ல் பார்க்கும் போது அவுட் இல்லை என வந்தது. ஆனால் பந்து பேட்டை நெருங்கும் போது பேட்டிலும் கையுறையிலும் தொட்டுச் செல்லும் மாதிரி இருந்தது. மேலும் பேட்டை கடந்த பின்னர் பந்து சென்ற திசையில் மாற்றம் இருந்தது. இருந்ததையடுத்து 3-ம் நடுவர் அவுட் என தெரிவித்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத ஜெய்ஸ்வால் கள நடுவரிடம் முறையிட்டார். ஆனால் நடுவர் அவரை சமாதானப்படுத்தி அவுட் என கூறி வெளியேறுமாறு கூறினர். அல்ட்ரா எட்ஜ்-ல் அவுட் இல்லை என வரும்போது எப்படி 3-ம் நடுவர் அவுட் கொடுத்தார் என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News