Recap 2024

ரீவைண்ட் 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கிய இமானே கெலிஃபின் பாலினம் விவகாரம்

Published On 2024-12-30 15:07 GMT   |   Update On 2024-12-30 15:07 GMT
  • அரையிறுதிக்கு முந்தைய போட்டியில் இத்தாலி வீராங்கனையின் மூக்கை உடைத்தார்.
  • மற்ற போட்டியில் 5-0 என எதிரிகளை சுலபமாக வீழ்த்தினார்.

33-வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இதில் 66 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலிஃப் பெண்ணா? ஆணா? என்ற பாலினம் பிரச்சனை மிகப்பெரிய அளவில் வெடித்தது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலினா கரினி- அல்ஜீரியாவின் இமானே கெலிஃப்-ஐ எதிர்கொண்டார். இதில் இமானே கெலிஃப் விட்ட பஞ்ச்-ல் இத்தாலி வீராங்கனையில் மூக்கு உடைந்தது. இதனால் நிலைகுலைந்து ஆட்டத்தின் 16 நிமிடத்திலேயே ஆட்டத்தில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். இது பெண்கள் அடிக்கும் அடியல்ல. ஆண் அடிப்பது போல் இருந்தது என இத்தாலி வீராங்கனை கரினி குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்துடன் போட்டியில் சமநிலை இருக்க வேண்டும். ஒரு ஆணுடன் விளையாட வைப்பது நியாயமா? என கேள்வி எழுப்பினார்.

கெரினியின் குற்றச்சாட்டு ஆதரவு அதிகமானது. இத்தாலி பிரதமர் மெலானி கெரினிக்கு ஆதரவுக் குரல் எழுப்பினார். என்றாலும் பிரான்ஸ் நாட்டிற்கு வருவதற்கான அவரது விசாவில் பெண் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது உள்ளிட்ட சில ஆதாரங்களை காட்டிய ஒலிம்பிக் நிர்வாகம் அவரை தொடர்ந்து விளையாடி அனுமதித்தது.

கடுமையாக சர்ச்சைக்கிடையே காலிறுதியில் ஹங்கேரி வீருாங்கனையை 5-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனையை 5-0 எனவும், இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை லியு யங்கை 5-0 என வீழ்த்தியும் தங்கப்பதக்கம் வென்றார்.

கடந்த நவம்பர் மாதம் இமானே கெலிஃப் ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கையை பிரெஞ்சு பத்திரிக்கையாளர் ஒருவர் வெளியிட்டார்

அந்த அறிக்கையில் இமானே கெலிஃப்-க்கு ஆண்களுக்கு உரிய உடலமைப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான குணாதிசயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம் இருப்பது அந்த அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.

இமான் கெலிஃப்-க்கு ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய 5 ஆல்ஃபா ரிடக்டேஸ் இன்சஃபீசியன்ஸி (5-alpha reductase insufficiency) என்ற குறைபாடு இருப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த குறைபாடு இருக்கும் ஆண்களுக்கு முகத்தில் மீசை, தாடி ஆகியவை இருக்காது எனக் குறிப்பிடப்பட்டிருந்து.

Tags:    

Similar News