பாரிஸ் ஒலிம்பிக் 2024

ஒலிம்பிக்ஸ் அணிவகுப்பில் திருமண மோதிரத்தை தொலைத்த வீரர்.. மனைவியிடம் என்ன சொன்னார் தெரியுமா?

Published On 2024-07-28 06:06 GMT   |   Update On 2024-07-28 06:07 GMT
  • தனது மனைவியிடம் கேட்டுள்ள கவித்துவமான மன்னிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
  • இத்தாலியக் கோடியை உயரத்திப்பிடிக்கும் போது என் கையில் இருந்து மோதிரம் நழுவியது

இத்தாலிய உயரம் தாண்டுதல் வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான ஜியான்மார்கோ தாம்பெரி [ Gianmarco Tamberi] நேற்று தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக்சில் பங்கேற்றுள்ளார். இத்தாலி நாட்டின் சார்பில் நேற்று முன் தினம் இரவு செய்ன் நதி [Seine River] மீது படகில் நடந்த தொடக்கவிழா அணிவகுப்பில் இத்தாலிய கோடியை அவர் ஏந்திச்சென்றார்.

 

இந்நிலையில் அன்றைய இரவு தனது திருமண மோதிரத்தை செய்ன் நதியில் அவர் தொலைத்துள்ளார். அதற்கு அவர் தனது மனைவியிடம் கேட்டுள்ள கவித்துவமான மன்னிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மனுஷன் என்னமா பீல் பண்ணி எழுதியிருக்கிறார் என்று இணையவாசிகள் மனம் நெகிழ்ந்து வருகின்றனர்.

 

மோதிரத்தை தொலைத்ததற்காக அவர் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு எழுதியுள்ள இன்ஷ்டாகிராம் பதிவில், 'என்னை மன்னித்துவிடு அன்பே, இத்தாலியக் கோடியை உயரத்திப்பிடிக்கும் போது என் கையில் இருந்து மோதிரம் [என் கை விரலில் இருந்து] நழுய தருணத்தில் [அது படகின் உள்ளே விழுந்துவிடும் எடுத்துக்கொள்ளலாம்] என்று ஒரு சிறிய நம்பிக்கை இருந்தது.

ஆனால் அது கீழே விழுந்து தவறான திசையில் எகிறி நதிக்குள் சென்றது. எதோ அது அங்கு தான் இருக்கவேண்டும் என்று விரும்பியதுபோல் இருந்தது. சில கணம் நான் உறைந்து நின்றேன். ஆனால் இது நடந்துதான் தீரும் என்றால் இந்த நதியை விட சிறந்த ஒரு இடத்தை என்னால் கற்பனை செய்திருக்க முடியாது. காதலின் நகரமான பாரிசில் உள்ள இந்த நதிப்படுகையில் அது [மோதிரம்] என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

 

நேற்று நடந்த இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் ஒரு கவித்துவமான தன்மையும் இணைந்தே இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நீ விரும்பினால் உனது மோதிரத்தையும் இந்த நதியில் வீசி விடலாம். அவ்வாறாக இருவரின் மோதிரங்களும் நதியில் ஒன்று சேரும். இதில் இன்னொரு நன்மையும் உள்ளது, நீ அடிக்கடி என்னிடம் கேட்பதுபோல், நாம் உறுதிமொழி கூறி புதிதாக மீண்டும் ஒருமுறை திருமணம் செய்துகொள்ளலாம்' என்று எழுதியுள்ளார். 

Full View

Tags:    

Similar News