பாரிஸ் ஒலிம்பிக் 2024
null

இந்திய பேட்மிட்டன் வீரரின் வெற்றி செல்லாது.. ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் முடிவுக்கு வலுக்கும் கண்டனம்

Published On 2024-07-29 05:56 GMT   |   Update On 2024-07-29 05:59 GMT
  • இந்திய வீரர் லக்ஷ்யா சென் பெற்ற வெற்றி செல்லாது என ஒலிம்பிக்ஸ் கமிட்டி நீக்கியுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
  • இது எந்த விதத்தில் நியாயம் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பேட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய இந்திய வீரர் லக்ஷ்யா சென் பெற்ற வெற்றி செல்லாது என ஒலிம்பிக்ஸ் கமிட்டி நீக்கியுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பாட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த சனிக்கிழமை நடந்த குரூப் L போட்டியில் கௌதமாலா வீரர் கெவின் கார்டன் [Kevin Cordon] உடன் விளையாடிய லக்ஷ்யா சென் 21-8, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஆனால் கெவின் கார்டன் தனது இடது காலில் ஏற்பட்ட காயத்தால் ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலிருந்து தற்போது விலகியுள்ள நிலையில் அவருடன் நடந்த போட்டியில் லக்ஷ்யா சென் பெற்ற வெற்றி நீக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பேட் மிட்டன் கூட்டமைப்பின் [BWF] விதிகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் கமிட்டி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவே லக்ஷ்யா சென் குருப் L போட்டிகளில் பெறும் வெற்றியைப் பொறுத்தே அவரது ராங்கிங் தரவரிசை நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது. இது எந்த விதத்தில் நியாயம் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News