புதிய கேஜெட்டுகள்

கோப்புப்படம் 

என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ஐகூ

Published On 2024-06-25 08:16 GMT   |   Update On 2024-06-25 08:16 GMT
  • ஐகூ Z9 லைட் பெயரில் விற்பனை செய்யப்படலாம்.
  • விவோ T3 லைட் மாடல் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும் என்று தகவல்.

ஐகூ நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து அந்நிறுவனம் இதுவரை என்ட்ரி லெவல் அல்லது குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவில்லை. தற்போது வரை ஐகூ நிறுவனம் மிட் ரேஞ்ச் மற்றும் பிரீமியம் பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மட்டுமே அறிமுகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், ஐகூ நிறுவனம் விரைவில் என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐகூ Z9 லைட் பெயரில் விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து டிப்ஸ்டரான முகுல் ஷர்மா வெளியிட்டுள்ள தகவல்களில், ஐகூ Z9 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். இந்த ஸ்மார்ட்போன் புளூ மற்றும் பிரவுன் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

 

கோப்புப்படம் 


இவைதவிர இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் விவோ T3 லைட் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் விவோ T3 லைட் ஸ்மார்ட்போன் ஜூன் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது விவோ நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும்.

விவோ T3 லைட் 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், புதிய ஐகூ Z9 லைட் மாடலிலும் இதே பிராசஸர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். விலையை பொருத்தவரை இரு மாடல்களும் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News