புதிய கேஜெட்டுகள்

ரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான மோட்டோ G சீரிஸ் ஸ்மார்ட்போன்

Published On 2024-05-30 09:19 GMT   |   Update On 2024-05-30 09:19 GMT
  • இந்த ஸ்மார்ட்போனில் 50MP கேமரா உள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் 5000 mAh பேட்டரி கொண்டுள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் குறைந்த விலை G சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மோட்டோ G04s ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி606 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. விர்ச்சுவல் ரேம், 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோ G04s ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 20 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

 


கனெக்டிவிட்டிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் டிசைன், டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டோ G04s ஸ்மார்ட்போன் சாடின் புளூ, கான்கார்ட் பிளாக், சீ கிரீன் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூன் 5 ஆம் தேதி ப்ளிப்கார்ட், மோட்டாரோலா இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News