ANC, பாஸ்ட் சார்ஜிங்.. ரூ. 2,299 விலையில் புது ஒன்பிளஸ் இயர்பட்ஸ் அறிமுகம்
- நார்டு பட்ஸ் 3 மாடலின் இயர்பட் ஒவ்வொன்றும் 4.2 கிராம் எடை கொண்டுள்ளது.
- இதனை 12 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நார்டு பட்ஸ் 3 இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. நார்டு சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ப்ளூடூத் 5.4, டூயல் கனெக்ஷன் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்த இயர்பட்ஸ் கூகுள் ஃபாஸ்ட் பேர், 12.4mm டைட்டானியம் டைனமிக் டிரைவர், பாஸ்வேவ் 2.0 போன்ற வசதிகள் உள்ளன. பெபிள் வடிவம் கொண்டுள்ள புதிய இயர்பட்ஸ் செவ்வக வடிவிலான கேஸ் மற்றும் கிளாஸி ஃபினிஷ் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் டச் கண்ட்ரோல் வசதி, IP55 தர சான்று வழங்கப்பட்டு உள்ளது.
நார்டு பட்ஸ் 3 மாடலின் இயர்பட் ஒவ்வொன்றும் 4.2 கிராம் எடை கொண்டுள்ளது. குறைந்த எடை காரணமாக இவற்றை நீண்ட நேரம் பயன்படுத்த முடியும். இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 43 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது. ANC பயன்படுத்தாத போது, இதனை 12 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
இதில் உள்ள ஃபிளாஷ் சார்ஜ் வசதி கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 11 மணி நேரம் (கேஸ்+ ANC ஆஃப்) பயன்படுத்தலாம். புதிய நார்டு பட்ஸ் 3 மாடல் டியுவி ரெயின்லாந்து பேட்டரி ஹெல்த் சான்று பெற்ற உலகின் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும்.
புதிய ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 3 மாடல் ஹார்மோனிக் கிரே மற்றும் மெலோடிக் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான், ப்ளிப்கார்ட், ஒன்பிளஸ் வலைதளம், செயலி மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற உள்ளது. விற்பனை செப்டம்பர் 20 ஆம் தேதி துவங்குகிறது.