புதிய கேஜெட்டுகள்

பட்ஜெட் விலையில் புது டேப்லெட் அறிமுகம் செய்த ரியல்மி

Published On 2024-09-13 11:07 GMT   |   Update On 2024-09-13 11:07 GMT
  • இந்த டேப்லெட் 8300 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
  • இந்த டேப்லெட் இருவித நிறங்களில் கிடைக்கிறது.

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டேப்லெட்- ரியல்மி பேட் 2 லைட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 10.5 இன்ச் 2K LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. மெல்லிய டிசைன் மற்றும் வீகன் லெதர் ஃபினிஷ் கொண்ட புது ரியல்மி டேப் 8300 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

 


புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டேப்லெட்-இல் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி ஆடியோ, குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகிறது.

கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் ஸ்பேஸ் கிரே, நெபுளா பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News