டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு தகுதி: கேஸ்பர் ரூட், சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

Published On 2023-08-31 08:36 GMT   |   Update On 2023-08-31 08:36 GMT
  • 7-வது வரிசையில் இருக்கும் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் 2-வது சுற்று ஆட்டங்களில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.
  • 11-வது வரிசையில் உள்ள கிவிட் டோவா (செக்குடி யரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

நியூயார்க்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜபாட்டா மிராலிசை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் 9-வது வரிசையில் இருக்கும் டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பெரு நாட்டை சேர்ந்த வாரிலாசை தோற்கடித்தார்.

பிரெஞ்சு ஓபன் போட்டியில் 2-வது இடத்தை பிடித்தவரும், 5-வது வரிசையில் உள்ள வருமான கேஸ்பர் ரூட் (நார்வே) மற்றும் 7-வது வரிசையில் இருக்கும் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் 2-வது சுற்று ஆட்டங்களில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

சீனாவை சேர்ந்த ஜாங் 6-4, 5-7, 6-2, 0-6, 6-2 என்ற கணக்கில் கேஸ்பர் ரூட்டையும், சுவிட்சர்லாந்து வீரர் டொமினிக் ஸ்டிக்கர் 7-5, 6-7 (2-7), 6-7 (5-7), 7-6 (8-6), 6-3 என்ற கணக்கில் சிட்சிபாசையும் போராடி வென்று 3-வது சுற்றுக்கு நுழைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் வரிசையில் உள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து) 2-வது சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டாரியா சேவிலியை (ஆஸ்திரேலியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்ற 2-வது சுற்று போட்டிகளில் 4-வது வரிசையில் உள்ள ரைபகினா (கஜகஸ்தான்), 6-வது வரி சையில் இருக்கும் கோகோ கவூப் (அமெரிக்கா), 11-வது வரிசையில் உள்ள கிவிட் டோவா (செக்குடி யரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Tags:    

Similar News