பெண்கள் டென்னிஸ் தரவரிசை: முதலிடம் பிடித்தது யார் தெரியுமா?
- வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
நியூயார்க்:
டாப்-8 வீராங்கனைகள் பங்கேற்ற மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ரியாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் கோகோ காப் கோப்பை வென்று அசத்தினார்.
இந்நிலையில், டென்னிஸ் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.
இதன் ஒற்றையர் தரவரிசையில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா (9,416 புள்ளி) முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
கடந்த 2 மாதங்களாக சபலென்கா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அமெரிக்க ஓபன், வுஹான் ஓபன் ஆகிய போட்டிகளில் மகுடம் சூடினார். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அவருக்கு 'நம்பர் ஒன்' இடம் கிடைத்துள்ளது.
போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (8,370 புள்ளி) இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
அமெரிக்காவின் கோகோ காப் 3-வது இடத்திலும் (6,530 புள்ளி), இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 4-வது இடத்திலும் (5,344), சீன வீராங்கனை ஹுயின்வென் ஜெங் 5வது இடத்திலும் (5,340) உள்ளனர்.