என் மலர்
- 2-வது சுற்று ஆட்டத்தில் ஷபலென்கா- ஜெசிகா பவுசாஸ் மனிரோவை எதிர்கொண்டார்.
- ஷபலென்கா 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான ஷபலென்கா ( பெலாரஸ்) இன்று காலை நடத்த 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினை சேர்ந்த ஜெசிகா பவுசாஸ் மனிரோவை எதிர்கொண்டார்.
இதில் ஷபலென்கா 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல 7-வது வரிசையில் இருக்கும் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 2-வது சுற்று ஆட்டத்தில் லெசி மெர்டன்சை (பெல்ஜியம்) 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார்.
5-வது வரிசையில் உள்ள குயன்வென் ஜெங் (சீனா) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். ஜெர்மனியை சேர்ந்த லாரா ஷீக்மண்ட் 7-6 (7-3), 6-3 என்ற சேர் செட் கணக்கில் ஜெங்கை வீழ்த்தினார்.
14-வது வரிசையில் இருக்கும் மிர்ரா ஆன்ட்ரியா (ரஷியா), ஒல்கா டேனி லோவிச் (செர்பியா) ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
- பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில் ‘வாடிவாசல்’ படம் குறித்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- தற்போது நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை கடந்த ஆண்டு படக்குழு வெளியிட்டது. இதனால் உடனே படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு பணிகள் தொடங்கவில்லை.
இந்த நிலையில், 'வாடிவாசல்' படத்தை தயாரிக்க உள்ள கலைப்புலி எஸ். தாணு எக்ஸ் தள பக்கத்தில், அகிலம் ஆராதிக்க 'வாடிவாசல்' திறக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதனால் வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில் 'வாடிவாசல்' படம் குறித்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
'வாடிவாசல்' படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் தனுசை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். தற்போது நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது#VetriMaaran @Suriya_offl#VaadiVaasal pic.twitter.com/ZPWfCDkF3C
— Kalaippuli S Thanu (@theVcreations) January 15, 2025
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- காம்பீருடன் ரோகித் சர்மாவுக்கும், அகர்கருக்கும் இடையே எந்த பிளவும் இல்லை.
- பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லாததை உணர்ந்ததால் ரோகித் சர்மா சிட்னி டெஸ்டில் இருந்து விலசினார்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து பயிற்சியாளர் கவுதம் காம்பீர்-கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடையேயும், காம்பீர்-தேர்வு குழு தலைவர் அகர்கர் இடையேயும் மோதல் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) நிராகரித்துள்ளது. (பி.சி.சி.ஐ.)யின் துணைத்தலைவர் ராஜீவ சுக்லா இது தொடர்பாக கூறியதாவது:-
காம்பீருடன் ரோகித் சர்மாவுக்கும், அகர்கருக்கும் இடையே எந்த பிளவும் இல்லை. இது தொடர்பாக வெளியான தகவல் தவறானது. பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லாததை உணர்ந்ததால் ரோகித் சர்மா சிட்னி டெஸ்டில் இருந்து விலசினார். விளையாடும் போது நல்ல நிலையில் இருப்பதும், மோசமாக இருப்பதும் நடப்பதுதான்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி வருகிற 18 அல்லது 19-ந்தேதி இறுதி செய்யப்படும். தேர்வு குழுவினரும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும் அணியை முடிவு செய்வார்கள்.
இவ்வாறு ராஜீவ்சுக்லா கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டி பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் 8 நாடுகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வீரர்களை அறிவித்துவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் மட்டுமே இன்னும் வீரர்கள் பட்டியலை வெளியிடவில்லை.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.
- சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதில் கூட தவறு இல்லை.
- திமுகவை ஆட்சியில் அமர்த்தியவர்கள் மக்கள் தான்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விழுப்புரம் மாவட்டம் அரசூர் கூட்டு சாலை என்ற இடத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் இருவேல்பட்டு கிராம மக்கள் மீது காவல்துறையினர் கடுமையாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் காவலர்கள் அவமானப்படுத்தும் வகையில் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி இளைஞர்களையும் காவல்துறையினர் தீவிரவாதிகளைப் போல இழுத்துக் கொண்டு சென்றுள்ளனர். காவல்துறையின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
உண்மையில் சாலைமறியல் செய்தவர்களை அகற்ற வேண்டும் என்பது காவல்துறையின் நோக்கம் இல்லை. மாறாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடந்த சில வாரங்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை பழிவாங்க வேண்டும்; தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மக்கள் மீது ஆட்சியாளர்கள் கொண்டுள்ள வன்மத்தின் வெளிப்பாடு தான் இந்த தாக்குதலும், அவமதிப்பும் ஆகும்.
நவம்பர் -திசம்பர் மாதங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட இருவேல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு உதவிகள் வழங்கப்படவில்லை என்று கூறி கடந்த திசம்பர் 3-ஆம் தேதி சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுடன் பேச்சு நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள் மீது சேறு வீசப்பட்டது. அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தேவையில்லை என்று அமைச்சர் பொன்முடி அப்போதே கூறியிருந்தாலும் கூட அதிகாரிகள் பெயரில் புகார் அளிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியவர்களை கைது செய்ய காவல்துறையினர் முயன்றதாகவும், அதற்காக அந்த ஊர் மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதைக் கண்டித்து தான் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டதை நியாயப்படுத்தவே முடியாது. ஆனால், தங்களை நியாயவாதிகள் என்று காட்டிக் கொள்வதற்காக, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வெளியில் அறிவித்து விட்டு, அதிகாரிகளின் பெயரில் புகார் கொடுத்து அவர்களை கைது செய்ய முயன்றதும், அதற்காக அந்த ஊர் மக்களுக்கு தொல்லை தரப்பட்டதும் தான் பிரச்சினைகளுக்கு காரணம் ஆகும்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதில் கூட தவறு இல்லை. ஆனால், கலைந்து சென்ற மக்களை பயங்கரவாதிகளைப் பிடிப்பதைப் போல காவல்துறையினர் வேட்டையாடியதை மன்னிக்க முடியாது. திமுகவை ஆட்சியில் அமர்த்தியவர்கள் மக்கள் தான். அவர்கள் தங்களுக்கான நீதியைக் கேட்டு போராடும் போது அமைச்சர் அவமதிக்கப்பட்டார் என்பதற்காக பல வாரங்கள் கழித்து அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது என்றால் ஆட்சியாளர்களின் மனதில் பழிவாங்கும் உணர்வு எந்த அளவுக்கு ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இத்தகைய நிகழ்வுகளைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? என்ற ஐயம் தான் எழுகிறது. இவற்றுக்கெல்லாம் மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றார்.
- சமீப காலமாக பலராலும் சூர்யவம்சத்தில் வரும் காட்சியை ரீ-கிரியேட் செய்து வருகின்றனர்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை வரட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு கோலாகலமாக தாய்லாந்தில் நடைபெற்றது. அதன்பின்னர் சில நிகழ்ச்சிகளில் மட்டும் நடிகை வரலட்சுமி பங்கேற்று வந்தார். கடந்த ஆண்டு தல தீபாவளியை நடிகை வரலட்சுமி கணவருடன் சென்னையில் கொண்டாடினார்.
இந்த நிலையில், நேற்று தல பொங்கலையும் நடிகை வரலட்சுமி குடும்பத்துடன் கொண்டாடினார். அப்போது சூர்யவம்சம் படத்தில் வரும் ஒரு காட்சியை மாப்பிள்ளையை வைத்து சரத்குமார் குடும்பத்தினர் ரீ-கிரியேட் செய்துள்ளனர். 'எல்லாரும் வந்துட்டாங்களா... என ஒருவர் கூற, ராதிகா ஏங்க சின்ராசு என்று கூறுகிறார். அதற்கு சரத்குமார் எங்க குடும்பத்துல எல்லாரும் வந்தாச்சு சீக்கிரம் எடு என்கிறார். அப்போது மாப்பிள்ளை நிக்கோலாய் சச்தேவ் பாவமாக ஓரமாக நிற்கிறார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாக பலராலும் சூர்யவம்சத்தில் வரும் காட்சியை ரீ-கிரியேட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,720-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 58,640-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,720-க்கும் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,340-க்கும் விற்பனையாகிறது.
நேற்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்த வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
14-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,640
13-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,720
12-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520
11-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520
10-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
14-01-2025- ஒரு கிராம் ரூ. 100
13-01-2025- ஒரு கிராம் ரூ. 102
12-01-2025- ஒரு கிராம் ரூ. 101
11-01-2025- ஒரு கிராம் ரூ. 101
10-01-2025- ஒரு கிராம் ரூ. 101
- ஜப்பான் வீரருக்கு எதிராக முதல் செட்டை 6-0 எனக் கைப்பற்றினார்.
- 2-வது செட்டை 6-1 எனவும், 3-வது செட்டை 6-4 எனவும் கைப்பற்றினார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 3-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ் தரநிலை பெறாத ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷியோகாவை எதிர்கொண்டார்.
இதில் அல்காரஸ் 6-0, 6-1, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதில் முதல் செட்டை 6-0 என எளிதான அல்காரஸ் கைப்பற்றினார். அல்காரஸின் ஒரு சர்வீசை முறியடித்து ஒரு கேமை கூட நிஷியோகாவால் வெல்ல முடியவில்லை.
2-வது செட்டிலும் அல்காரஸ் அபாரமாக விளையாடினார். இதனால் 2-வது செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார்.
3-வது செட்டில் மட்டும் நிஷியோகா சற்று நெருக்கடி கொடுத்தால். என்றாலும் அல்காரஸ் 6-4 எனக்கை கைப்பற்றி வெற்றி பெற்றார்.
- டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் மற்றும் புறப்படும்போது விமானங்கள் பாதிக்கப்படலாம்.
- டெல்லியில் காலையில் 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. அடர்த்தியான மூடுபனியுடன் காணப்படும் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.
பல இடங்களில் தெரிவுநிலை பூஜ்ஜியமாகக் குறைந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 அடிக்கு முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். அதேபோல் ரெயில் மற்றும் விமான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.
விமானச் செயல்பாடுகள் சீராக இருக்கும் என்றும் ஆனால் விமானப் பயணிகளை தங்கள் விமானங்களைப் பற்றி தொடர்ந்து அறிந்துகொள்ளும்படி விமான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் மற்றும் புறப்படும்போது விமானங்கள் பாதிக்கப்படலாம். புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் வருந்துகிறோம் என்று டெல்லி விமான நிலையம் மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளது.
நேற்று நிலவிய பனிமூட்டம் காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று காலை 6:30 மணி வரை குறைந்தது 39 ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
டெல்லியில் காலையில் 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. காலையில் அடர்த்தியான மூடுபனியும் பின்னர் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
- மதங்களைச் சாரா மனிதம் பாடியவர்;
சென்னை:
தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு, தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதங்களைச் சாரா மனிதம் பாடியவர்; வேள்வியிற்சிறந்தது அன்பென்றோதியவர்; யாப்பின் அருங்கல மாலுமியானவர்; மூப்பின் தடமில்லா இளமைச் சொல்லால் உலகுக்கே வழிகாட்டும் அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன் என்று கூறியுள்ளார்.
மதங்களைச் சாரா மனிதம் பாடியவர்; வேள்வியிற்சிறந்தது அன்பென்றோதியவர்; யாப்பின் அருங்கல மாலுமியானவர்; மூப்பின் தடமில்லா இளமைச் சொல்லால் உலகுக்கே வழிகாட்டும் அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 15, 2025
- 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன.
- 900 வீரர்கள் காளைகளை அடக்க உள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டை இன்று காலை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வீரர்கள் உறுதி மொழி ஏற்று மாடுகளை பிடிக்கச் சென்றனர். முதலாவதாக கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது.
அதன்பின் ஒவ்வொரு காளைகளாக வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. மொத்தம் 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. 900 வீரர்கள் காளைகளை அடக்க உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டினர் என ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர்.
இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் மது அருந்தியதாகவும், 3 பேர் எடை குறைவு என்ற காரணத்தாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
- தேசிய தேர்வு முகமையினால் யுஜிசி நெட் தேர்வு கலை மற்றும் அறிவியல் என 85 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது.
- பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் தேர்வு நடத்த தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுக்கான மாற்றுத் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமையினால் (NTA) யுஜிசி நெட் தேர்வு கலை மற்றும் அறிவியல் என 85 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்.டி சேர்க்கை ஆகியவற்றிக்கான தகுதி தேர்வாக ஆண்டிற்கு இரண்டு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்கு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் டிசம்பர் 11-ம் தேதி வரை பெறப்பட்டது.
இதற்கான தேர்வுகள் ஜனவரி 3-ம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 16-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 2025 ஜனவரியில் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை (ஜன.14, 15, 16) வரை கொண்டாடப்படுகிறது. அதில் ஜனவரி 15 (மாட்டுப் பொங்கல்) மற்றும் ஜனவரி 16 (காணும் பொங்கல்) கொண்டாடப்படும் தினங்களில் பல்வேறு பாடங்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டு இருந்தது.
பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் தேர்வு நடத்த தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, இன்று (ஜன.15) நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மாற்று தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் யுஜிசி நெட் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.