என் மலர்
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
- குண்டாறு அணை பகுதியில் 19.4 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை:
தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
தென்காசி
தென்காசி மற்றும் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பெய்தது. தென்காசியில் 4 மில்லிமீட்டரும், செங்கோட்டையில் 2.2 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 1 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அணை பகுதிகளை பொறுத்தவரை மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான 36 அடி கொண்ட குண்டாறு அணை பகுதியில் இன்று காலை நிலவரப்படி 19.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணையின் நீர்மட்டம் 34.62 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 1 அடி நீரே தேவை. இதேபோல் அடவிநயினார் அணை பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணையின் நீர்மட்டம் நேற்று 93 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி அதிகரித்து 94 அடியானது.
மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர்மழையால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.
தூத்துக்குடி-நெல்லை
தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு சுற்றுவட்டார பகுதியான கடம்பூரில் சாரல் மழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே கடம்பூர், மணியாச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்வதால் குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயி களும் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் வரை மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அங்கு 30 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடம்பூரில் 8.8 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. பாளையில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது. நாங்குநேரி மற்றும் நெல்லையில் தலா 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணை பகுதிகளில் மழை இல்லை. மாறாக வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
- சங்கர நாராயணசுவாமி கோவில் அறங்காவலர்களாக பெண் உட்பட 5 பேரை இந்து சமய அறநிலையத்துறை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
- 5 பேரில் ஒருவர் அறங்காவலர் குழுத் தலைவராக 30 நாட்களுக்குள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவில் அறங்காவலர்களாக ஒரு பெண் உட்பட 5 பேரை இந்து சமய அறநிலையத்துறை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த வக்கீல் சண்முகையா, காந்திநகர் 2-வது தெருவை சேர்ந்த முப்பிடாதி, சங்குபுரம் 3-வது தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன், முள்ளிகுளம் மேலத்தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி, கோமதியாபுரம் 6-வது தெருவை சேர்ந்த முத்துலெட்சுமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நியமனம் செய்யப்பட்ட 5 அறங்காவலர்களில் ஒருவர் அறங்காவலர் குழுத் தலைவராக 30 நாட்களுக்குள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன் பிறகே கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் யார் என்பது தெரியவரும்.
- மாணவி ரபியாஸனா நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை பற்றி உரையாற்றினார்.
- நிகழ்ச்சியில் மாணவி மும்தாஜ் குர் ஆன் வாசித்தார்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் மிலாடிநபி பண்டிகை கொண்டாடப்பட்டது. மாணவி ஹரிணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கல்வி ஆலோசகர் உஷாரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். மாணவி ஆப்ரின் ஹாஜராள் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாணவி ரபியாஸனா நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை பற்றி உரையாற்றினார். மேலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் முகம்மது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை பற்றி நாடகமாக நடித்து காட்டினர். மாணவி மும்தாஜ் குர் ஆன் வாசித்தார். மாணவி சஞ்சுஸ்ரீ நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.
- 10-ம் வகுப்பு தேர்ச்சி, 14 வயது முதல் உள்ளவர்கள் தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
- அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு ரூ.1,000 கூடுதலாக வழங்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தொழிற்பயிற்சி நிலையம்
கடையநல்லுர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் நேரடி சேர்க்கை வருகிற 23-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்நுட்ப மையம் 4.0-ல் 2 ஆண்டு தொழிற்பிரிவுகளான மேம்படுத்தப்பட்ட சி.என்.சி. எந்திர தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவான தொழில்துறை ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர் பிரிவு களுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி, 14 வயது முதல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மகளிருக்கு வயது வரம்பு இல்லை. மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடையநல்லூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் அணுகவும்.
கல்வி உதவித்தொகை
பயிற்சியில் சேர்பவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம் ரூ. 750, அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் தி்ட்டத்தின் கீழ் ரூ. 1,000 கூடுதலாக வழங்கப்படும். சைக்கிள், சீருடைகள், தையல் கூலி, காலணிகள் மற்றும் வரைபட கருவிகள் வழங்கப்படும்.
மேலும் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதியும் உள்ளது. 10-ம் வகுப்பு முடித்து 2 ஆண்டு ஐ.டி.ஐ. தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப் பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி பிளஸ்-2 வகுப்பு சான்றிதழ் பெறலாம். மேலும் 8-ம் வகுப்பு முடித்து இரண்டாண்டு தொழிற்பிரிவு களில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம் ) மட்டும் எழுதி 10- ம் வகுப்பு சான்றிதழ் பெறலாம்.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, மீனாட்சி, முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடையநல்லூர், பண்பொழி ரோடு (அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடையநல்லூர் அருகில்) தொலைபேசி எண் 04633-290270-ல் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆதர்ஸ் வித்யாலயா பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- முகாமில் ரத்தசோகை கண்டறியும் முறை பற்றி விளக்கப்பட்டது.
கடையம்:
கடையம் ஆதர்ஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பரகத் சுல்தானா தலைமை தாங்கினார். திட்ட மேற்பார்வையாளர்கள் சுப்புலட்சுமி, இந்திரா, மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் மாரிச்செல்வி வரவேற்று பேசினார். முகாமில் ரத்தசோகை கண்டறியும் முறை பற்றியும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள், ஆரோக்கியமான உணவு முறைகளை மேற்கொள்ளுதல், மாதத்திற்கு ஒருமுறை கிருமி நாசினியை உட்கொள்ளுதல் பற்றியும் மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. முடிவில் பள்ளி துணை முதல்வர் பொன் மேரி நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாட்டினை பள்ளி தாளாளர் ஐசக் பாக்கியசாமி செய்திருந்தார்.
- செங்கோட்டை நகரில் மட்டும் சுமார் 37 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
- ஊர்வலம் வரும் இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி, விஜர்சன ஊர்வ லங்கள் ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
37 விநாயகர் சிலைகள்
கடந்த 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் செங்கோட்டை நகரில் மட்டும் சுமார் 37 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அவை முறையே பள்ளிமேட்டு பகுதி, காமாட்சி அம்மன் கோவில், வீரகேரள விநாயகர் கோவில், பூதத்தார் கோவில், காளியம்மன் கோவில் திடல், ஓம் காளி திடல், வம்பளந்தான் முக்கு, செல்வவிநாயகர் கோவில், எஸ்.ஆர்.கே. தெரு, மேலூர் அப்பா மாடசாமி, பள்ளத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
இந்த சிலைகள் அனைத்தும் இன்று ஓம்காளி திடலில் இருந்து புறப்பட்டு வம்பளந்தான் முக்கு, செல்வ விநாயகர் கோவில் தெரு, தாலுகா அலுவலக முக்கு, மேலூர், பெரிய பள்ளிவாசல் வழியாக மேலபஜார், பூதத்தார் கோவில், காசுகடை பஜார், கீழ பஜார், காவல்நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு செங்கோட்டை குண்டாறு அணை பகுதியில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.
பாதுகாப்புடன் விஜர்சனம்
விநாயகர் சிலைகள் விஜர்சனத்திற்காக எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 21 இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ள அனைத்து இடங்களிலும் சுமார் 65 சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன் காமிராக்கள் மூலமாகவும் ஊர்வலம் செல்லும் விநாயகர் சிலைகளை கண்காணிக்க ஏற்பாடு தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து குண்டாற்றில் அவை விஜர்சனம் செய்யபடுகிறது.
கிராமப்புற சிலைகள்
செங்கோட்டையை அடுத்துள்ள வல்லம், பிரானூர், தேன்பொத்தை ஆகிய 3 இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் வழிபாடுகளுக்கு பின் விஜர்சனம் செய்யபடுகிறது. புளியரை, கேசவபுரம், லாலா குடியிருப்பில், தெற்கு தெரு மற்றும் வடக்குதெரு ஆகிய 5 இடங்களிலும், பண்பொழியில் தைக்கா தெரு, தெற்கு தெரு, தெற்கு ரதவீதி, பேட்டை தெரு, தர்மர் கோவில், அரசமர தெரு, திட்டு தெரு உள்ளிட்ட 11 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இன்று போலீஸ் பாதுகாப்புடன் அரிகரா நதியில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.
இதேபோன்று தென்காசி யில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று மாலை ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.
கடையநல்லூரில் 31 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப ட்டுள்ளது. மேல கடையநல்லூர் கண்ணார் தெரு, கிருஷ்ணா புரத்தில் மகாராஜ கணபதி, மறுகால் தெரு, வடக்குவா செல்வி அம்மன் கோவில், மாவடிக்கால், முத்து கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்ப ட்டுள்ளது. புளியங்குடியில் 35 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ள்ளது.
நெல்லை-தூத்துக்குடி
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 222 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் 5 சிலைகள் கரைக்கப்பட்டு விட்டன. மாநகரில் 76 இடங்களில் சிலைகள் பிர திஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வருகிற 24-ந்தேதி கரைக்கப்படுகிறது.
இதனையொட்டி மாவட்டம் முழுவதும் சுமார் 1,000 போலீசாரும், மாநகரில் 500 போலீசாரும் சிலைகளை பாதுகாத்து வருகின்றனர். களக்காட்டில் தோப்புத்தெரு, சாலை புதூர், கீழப்பத்தை, வியாசராஜபுரம், மாவடி, மலையடிபுதூர், பொத்தையடி பகுதியில் 14 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரபுரம், மூங்கிலடி உள்ளிட்ட பகுதிகளில் 15 இடங்களிலும், இடையன்குளம், கீழ உப்பூரணி, மஞ்சவிளை, பத்மநேரி உள்ளிட்ட பகுதிகளில் 24 இடங்களிலும் என மொத்தம் 53 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை உவரி கடல், பாபநாசம் தாமிரபரணி ஆறுகளில் விஜர்சனம் செய்யப்படுகிறது.
திருச்செந்தூர் நகர இந்து முன்னணி சார்பில் வ.உ.சி. திடலில் 7 அடி உயரம் கொண்ட கல்வி கணபதி சிலையும், சுப்பிரமணியபுரம், ஜீவாநகர், சண்முகபுரம், முத்துநகர், முத்துமாலையம்மன் கோவில் தெரு, அண்ணா காலனி கோவில் தெரு உள்ளிட்ட 8 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
உடன்குடி சீர்காட்சி, தைக்கா ஊர், பரமன்குறிச்சி, வட்டன்விளை, விஜய நாராயணபுரம், முத்து கிருஷ்ணாபுரம், அம்மன்புரம், முருகேசபுரம், குலசேக ரன்பட்டினம், லட்சுமிபுரம், வேப்பங்காடு, அரசர் பேட்டை கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து குடும்பத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர்.
- குடும்பத்தகராறு காரணமாக ராஜேஸ்வரன் கடந்த 14–ந்தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
- கண்ணனை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை அம்பலவாசக தெருவை சேர்ந்தவர் மணிராஜ். இவரது மகன் ராஜேஸ்வரன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் குடும்பத்தகராறு காரணமாக கடந்த 14–ந்தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ராஜேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் கண்ணன் (38). லாரி டிரைவர். நேற்றிரவு கண்ணன் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அவரை உறவினர்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கண்ணன் இறந்தார்.
- மண் திட்டுகள், தேவையற்ற சிமெண்டு சிலாப்புகள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அகற்றப்பட்டது.
- மராமத்து பணிகளை துரிதமாக செயல்படுத்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி பஸ் நிலையத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, செயல் அலுவலர் வெங்கடகோபு, துணைத்தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் பஸ் நிலைய பகுதியில் இருந்த மண் திட்டுகள், தேவையற்ற சிமெண்டு சிலாப்புகள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. மேலும் அப்பகுதி முழுவதும் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. ஆய்வின் போது, மராமத்து பணிகளை துரிதமாக செயல்படுத்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கொடை விழாவில் இரவில் அன்னதானம், வில்லிசை நடைபெற்றது.
- நாளை மஞ்சள் நீராட்டுதல், கிடா வெட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளத்தில் கீழ் பகுதியில் அமைந்துள்ள மங்களம்மன் கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. காலையில் தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் இரவில் அன்னதானம், வில்லிசை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மதியம் குற்றாலத்தில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு மங்களம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மேளதாளம் மற்றும் வானவேடிக்கையுடன் அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று இரவில் வில்லிசை, மாலை சாத்துதல், நள்ளிரவில் நையாண்டி மேளம் வானவேடிக்கையுடன் நடுசாம பூஜை நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) காலை நேமிதம் எடுத்து வருதல், முளைப்பாரி எடுத்து வருதல், பொங்கலிடுதல், மதியம் மஞ்சள் நீராட்டுதல், கிடா வெட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவில் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்ற னர். விழாவிற்கான ஏற்பாடு களை விழாக்கமிட்டியினர் செய்துள்ளனர்.
- சுந்தரபாண்டியபுரம் முன்னாள் பேரூர் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ஆறுமுகசாமி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
- ஆறுமுகசாமி குடும்பத்திற்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் முன்னாள் பேரூர் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ஆறுமுகசாமி. இவர் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறி அவரது குடும்பத்திற்கு ரூ. 7 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார்.
அப்போது பேரூர் செயலாளர் பண்டாரம், இளைஞரணி நிர்வாகி செல்வகுமார், முன்னாள் பேரூர் செயலாளர் சங்கரபாண்டியன், முன்னாள் பேரூர் அவைதலைவர் செல்லப்பா, ஒன்றிய பிரதிநிதி கணபதி நாடார், வார்டு செயலாளர்கள் சங்கரன், தங்கராஜ், பாலகிருஷ்ணன், கணேசன், அய்யப்பன், முத்துபில்டர், துரைமணி, ராமமூர்த்தி, கவுன்சிலர் சங்கர் பூதத்தான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் சங்கரன்கோவிலில் நடந்தது.
- சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் பொது வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் சங்கரன்கோவிலில் நடந்தது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி தலைமை தாங்கினார்.
குழந்தை பராமரிப்பு
தொடர்ந்து மருத்துவ அலுவலர்கள் மகாலட்சுமி மற்றும் சூர்யா ஆகியோர் புதுமண தம்பதிகளுக்கு பாது காப்பான தாய்மை, கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பாலின் நன்மைகள், குழந்தை பராமரிப்பு, மகப்பேறு நலஉதவி திட்டங்கள் மற்றும் ஒரு குழந்தையின் முதல் 1,000 நாட்கள் வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்மையாக குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரிக்க வேண்டும் எனும் முனைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். புதுமணத் தம்பதிகள், பெண்கள் கருவுற்று இருக்கும் நிலையில் இப்பொழுது இருந்தே தாய் ஆரோக்கியம் மற்றும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.
ஊட்டச்சத்து குறைபாடு
குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் வளர்க்க வேண்டும் இதற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அதிகாரிகள், அலுவலர்கள் வழங்கும் ஆலோசனைகளை கேட்டு நல்ல சத்தான உணவுகளை உட்கொண்டு நீங்களும், உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், மாணவரணி வீரமணி, வக்கீல் சதீஷ், ஜான் ஜெயக்குமார் மேற்பார்வை யாளர்கள் மல்லிகா, செல்வம், ராஜே ஸ்வரி, குழந்தை நல பணி யாளர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- உறுதிமொழி ஏற்ற பின் அருகில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
- செண்பக கால்வாய் கழிவு நீர் ஓடையில் கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது.
சுரண்டை:
சுரண்டை நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் தூய்மையே சேவை நிகழ்ச்சியின் மூலமாக பஸ் நிலையத்தில் நகர்மன்ற தலைவர் வள்ளிமுருகன் தலைமையில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவரும் இணைந்து பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என உறுதிமொழி ஏற்ற பின் அருகில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.
பின்பு சுரண்டை நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் தூய்மையை சேவை நிகழ்ச்சியின் மூலமாக செண்பக கால்வாய் கழிவு நீர் ஓடையில் ஒட்டு மொத்த கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது. நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு ஓடையில் தேங்கி கிடந்த கழிவுகள் அகற்றப்பட்டன.