search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே மங்களம்மன் கோவில் கொடைவிழா
    X

    பாவூர்சத்திரம் அருகே மங்களம்மன் கோவில் கொடைவிழா

    • கொடை விழாவில் இரவில் அன்னதானம், வில்லிசை நடைபெற்றது.
    • நாளை மஞ்சள் நீராட்டுதல், கிடா வெட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளத்தில் கீழ் பகுதியில் அமைந்துள்ள மங்களம்மன் கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. காலையில் தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் இரவில் அன்னதானம், வில்லிசை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மதியம் குற்றாலத்தில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு மங்களம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மேளதாளம் மற்றும் வானவேடிக்கையுடன் அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று இரவில் வில்லிசை, மாலை சாத்துதல், நள்ளிரவில் நையாண்டி மேளம் வானவேடிக்கையுடன் நடுசாம பூஜை நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) காலை நேமிதம் எடுத்து வருதல், முளைப்பாரி எடுத்து வருதல், பொங்கலிடுதல், மதியம் மஞ்சள் நீராட்டுதல், கிடா வெட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவில் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்ற னர். விழாவிற்கான ஏற்பாடு களை விழாக்கமிட்டியினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×