search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் 'ஜப்பான்'.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.


    இந்நிலையில், 'ஜப்பான்' திரைப்படத்தை கொண்டாடும் வகையில் கார்த்தி ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். அக்டோபர் 17-ஆம் முதல் 'ஜப்பான்' திரைப்படம் வெளியாகும் நவம்பர் 10-ஆம் தேதி வரை இந்த உணவு வழங்குவது தொடரும் என்று கார்த்தி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.



    அக்டோபர் 17-ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தி. நகர் பகுதியில் கார்த்தி மக்கள் நல மன்றத்தின் அகில இந்திய செயலாளர் வீரமணி, மாநில நிர்வாகிகள், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் மாவட்ட தலைவர்கள் ஆகியோர் உடனிருக்க 'ஜப்பான்' படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் இயக்குனர் ராஜுமுருகன் ஆகியோர் ஆயிரம் பேருக்கு சுவையான வழங்கும் திட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    • விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் நாளை (அக்டோபர் 19) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், 'லியோ' திரைப்படத்தை சட்டவிரோதமாக 1200-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அரசு மற்றும் தனியார் இணையதள சேவைக்கு உத்தரவிட வேண்டும் என்று 'லியோ' பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் 'லியோ' திரைப்படம் 1200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மிகுந்த பொருட்செலவுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை திருட்டுதனமாக இணையத்தில் வெளியிட்டால் மிகுந்த நஷ்டம் ஏற்படுவதோடு கலைஞர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று வாதிடப்பட்டது.

    இதையடுத்து 'லியோ' திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி அவ்வாறு செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் 'கேஎச் 234' படத்தில் நடிக்கவுள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாகவும், ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கமல் நடிக்கும் 234-வது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் வீடியோ அவரது பிறந்தநாளான நவம்பர் 7-ஆம் தேதி வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் 'லியோ'.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் நாளை (அக்டோபர் 19) பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' எல்.சி.யூ-வில் இல்லை என்று லோகேஷ் கூறினாலும் இப்படம் எல்.சி.யூ-வில் இணையும் என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.


    உதயநிதி பதிவு

    இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு உண்மையை வெளிப்படுத்திவிட்டது. அதாவது, 'லியோ' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் இணையத்தில் பதிவிட்டிருந்தார். அதில் எல்.சி.யூ (#LCU) ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார். இது லியோ எல்.சி.யூ-வில் வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த பதிவை வைரலாக்கும் ரசிகர்கள் உதயநிதி உண்மையை உடைத்துவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் நாளை வெளியாகிறது.
    • லியோ திரைப்படத்துக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜய் நடித்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் நாளை வெளியாகிறது.

    லியோ திரைப்படத்துக்கு 4 நாட்கள் நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    புதுவையில் ரசிகர்கள் சார்பில் 19-ம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், காலை 7 மணி காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. காலை 9 மணிக்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் ஏற்கனவே முடிவடைந்து விட்டது என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    • இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம்.
    • அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன்.

    முன்னணி இசையமைப்பாளரான டி.இமான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், "இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. அதனால் இனி வரும் காலங்களில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது.

    ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது. இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு. அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அவரது பதிலை என்னால் சொல்லமுடியாது" என்று கூறினார். இதன் பிறகு இமான் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.


    இந்நிலையில், இந்த நேர்காணல் குறித்து இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் கூறியுள்ளதாவது, சிவகார்த்திகேயனுக்கும் இமானுக்கும் நல்ல நட்பு உண்டு. எங்களுக்கு விவாகரத்து நடக்கக்கூடாதுன்னு பல முயற்சிகளை எடுத்தார். இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் பண்ணவில்லை. அது இமானுக்கு பிடிக்கவில்லை.

    ஒரு வருடத்திற்கு முன்னாடி பொண்ணையெல்லாம் பார்த்து வைத்துவிட்டுதான், இமான் எனக்கு விவாகரத்தே கொடுத்தார். நான் முடியாதுன்னு சொன்னதுக்கு, அரசியல்வாதிகளை வைத்து 'உங்கப்பாவைக் கொன்னுடுவோம்'னு மிரட்டல் எல்லாம் கொடுத்து 46 நாட்களிலேயே விவாகரத்தும் வாங்கினார். இப்போ, இமானுக்கு பட வாய்ப்புகள் சரியாக இல்லை. அதனால்தான், இப்படியெல்லாம் பேசி பட வாய்ப்புகளை பிடிக்க நினைக்கிறார்" என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.
    • சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜுன் பெற்றுக் கொண்டார்.

    இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

    இதில் 'புஷ்பா' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • ’லியோ’ திரைப்படம் பல மொழிகளில் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் ரிலீஸுக்கான ஏற்பாடு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸுக்கான ஏற்பாடு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், லியோ படத்திற்காக திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு திரையங்குகள் முன்பு மிக உயரமான பேனர்கள், கட் அவுட்டுகள் வைத்துள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக ஒலிகளை எழுப்பும் பட்டாசுக்களை வெடிக்கவும் திட்டமிட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உரிய அனுமதியின்றி 'லியோ' படத்தின் பேனர்கள் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றவும் அரசுக்கு தரப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சி வழக்கறிஞரை அழைத்து நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். அப்போது, அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டு விட்டதாக திண்டுக்கல் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது.

    • விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் 19-ஆம் தேதி பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், ஐதராபாத் நீதிமன்றத்தில் சீதா ராமா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் நாக வம்சி என்பவர் இந்த படத்தின் பெயர் 'லியோ' என்பதை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து மனுதாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் 'லியோ' படத்தின் தெலுங்கு பதிப்பை வரும் 20-ஆம் தேதி வரை திரையிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    'லியோ' தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 'லியோ' திரைப்படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் 9 மணி காட்சியை 7 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன்.
    • இவர் பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

    2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

    இதையடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் திடீரென அந்த படத்தினை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், முன்னாள் கிரிக்கெட் வீரர் டோனியுடன் இணைந்துள்ளார். அதாவது டோனி மற்றும் யோகி பாபு நடிக்கும் விளம்பர படம் ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இதுதொடர்பான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு அஜித் படம் போனால் என்ன டோனியை இயக்குகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இந்த படம் அக்டோபர் 19 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் விஜய் நடித்து, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம் நாளை மறுநாள் (அக்டோபர் 19) திரைக்கு வருகிறது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியுள்ள நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.

    முன்னதாக லோகேஷ் கனகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட படக்குழுவினர் இன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வருகை தந்தார். படக்குழுவினர் கோவிலில் உள்ள ராம நாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியில் லியோ படத்தின் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

    இதுபற்றி தகவல் அறிந்த சுற்றுலா வந்தவர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கோவில் முன்பு திரண்டனர். அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினருடன் சேர்ந்து புகைப்படமும், செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

    • நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 15 தியேட்டர்களில் லியோ திரைப்படம் திரையிடப்படுகிறது.
    • ரசிகர்கள் சார்பில் 19-ந்தேதி காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி அரசுக்கு மனு அளிக்கப்பட்டது.

    நடிகர் விஜய் நடித்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் வரும் 19-ந்தேதி வெளியாகிறது.

    லியோ திரைப்படத்துக்கு 4 நாட்கள் நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுவையில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 15 தியேட்டர்களில் லியோ திரைப்படம் திரையிடப்படுகிறது.

    இதுமட்டுமின்றி ரசிகர்கள் சார்பில் 19-ந்தேதி காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

    ×