search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • சந்திர கிரகணம் நிறைவையொட்டி ஏற்பாடு
    • இன்று அதிகாலை நடந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர்.

    மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்யவும், 14 கிலோமீட்டர் கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

    ஐப்பசி மாத பவுர்ணமி தினமான நேற்று வழக்கத்தைவிட கூடுதல் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலையில் குவிந்தனர்.

    கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் பக்தர்கள் அடிமேல் அடிவைத்து நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில் உள்ள கல்யாண சுந்த ரேஸ்வரருக்கும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    அன்னாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    நேற்றைய தினம் சந்திர கிரகணம் என்பதால் கிரகணம் நிறைவு பெற்றவுடன் இன்று அதிகாலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    விடுமுறை தினத்தில் வந்த பவுர்ணமி வந்ததால் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அருணாசலேஸ்வரரை வலம் வந்து வழிபட்டு சென்றனர்.

    ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    • பள்ளிகளுக்கு தேவையான கட்டிடங்கள், கழிவறைகள் அமைத்து தர வேண்டும்
    • பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்

    வேங்கிக்கால்:

    தமிழ்நாட்டில் உள்ள கடை கோடி மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் சென்று சேர வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நோக்கம் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை எம்.பி. பேசினார்.

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குழு இணைத் தலைவர் டாக்டர் எம். கே.விஷ்ணுபிரசாத் எம்.பி. முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வரவேற்றார். குழுத் தலைவர் சி.என். அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கி பேசினார்.

    வங்கிகளில் தொழில் முனைவோருக்கு கடன் உதவிகள் வழங்க வேண்டும். பள்ளிகளுக்கு தேவையான கட்டிடங்கள், கழிவறைகள் மற்றும் சுற்றுசுவர்கள் அமைத்து தர வேண்டும்.

    அரசு மருத்துவமனை களில் அதிக அளவில் பெண் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ரிஷப், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாவட்ட வன அலுவலர் அருண்லால், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் செந்தில்குமார், மகளிர் திட்ட இயக்குனர் சையித் சுலைமான், ஊரக வளர்ச்சி செயற்பொ றியாளர் ராமகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் மந்தாகினி, தனலட்சுமி முன்னோடி வங்கி மேலாளர் கவுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பூஜை செய்து தொடக்கம்
    • பக்தர்கள் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் பாலாய பூஜை செய்து புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலின் கருவறை மற்றும் மணிமண்டபம் கருங்கல்லால் கட்டப்பட உள்ளது.இதையடுத்து நேற்று காலை கருங்கல் கட்டிட பணிகள் பூஜை செய்து தொடங்கப்பட்டது.

    இதில் கண்ணமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அறங்காவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்
    • அன்னாபி ஷேகத்தை பார்ப்ப வர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கியது. நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைகிறது.

    இன்று காலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெ றுகிறது.

    அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இறைவனுக்கு எத்தனையோ அபிஷேகம் செய்யப்பட்டாலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமை யாக மூடி ஆராத னைகள் செய்வதையே அன்னா பிஷேகம் என்கிறோம்.

    இந்த அன்னாபி ஷேகத்தை பார்ப்ப வர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம் என தெரிவித்தனர்.

    • சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த சூரியதாங்கல் கிராமத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    புனித நீரானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. ஸ்ரீ தர்மசாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்து மங்களம் மேல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் அம்பேத்குமார் எம்.எல்.ஏ. மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இரும்பு வாளியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே கல்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, தொழிலாளி. இவரது மனைவி பார்வதி (வயது 44). அவரது வீட்டின் எதிரே வசிக்கும் பிச்சாண்டி (63) என்பவர் பார்வதியை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனை தட்டிக்கேட்ட ஏழுமலையை, பிச்சாண்டி அங்கிருந்த இரும்பு வாளியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதில் காயமடைந்த ஏழுமலை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பார்வதி சந்தவாசல்போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சாண்டியை கைது செய்தனர்.

    • போதிய பாதுகாப்பு வசதிகள் உள்ளதா என சோதனை
    • போலீசார் உடனிருந்தனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பகுதியில் உள்ள பட்டாசு விற்பனை செய்து வரும் கடைகளில் ஆரணி வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, தீயணைப்பு நிலைய அலுவலர் சிவஞானம் ஆகியோர் உரிமம், போதிய பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் உடனிருந்தனர். இதேபோல் ஒண்ணுபுரம், ராமசாணிக்குப்பம், வண்ணாங்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள பட்டாசு கடைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது என கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு தெரிவித்தார்.

    • குழந்தை மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு ஆஸ்பத்திரி பின்புறம் கழிவுநீர் தொட்டி உள்ளது.

    இன்று காலை மருத்துவமனையின் உதவியாளர் இளையராஜா என்பவர் தண்ணீர் சுவிட்ச் போடுவதற்காக மாடிக்கு சென்றார். அப்போது கீழே மூடப்பட்டுள்ள கழிவு நீர் தொட்டியின் மீது ஏதோ அசைவது போன்று தெரிந்துள்ளது.

    மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்தார். மூடப்பட்டுள்ள கழிவு நீர் தொட்டியின் மீது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் பச்சிளம் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் தலை குப்புற படுக்க வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிருடன் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவமனை நர்ஸ்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் டாக்டர்கள் விரைந்து வந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்ப முடிவு செய்துள்ளனர். இது குறித்து வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    குழந்தை அரசு மருத்துவமனையில் பிறக்கவில்லை என்று கூறப்படுகிறது. வேறொரு மருத்துவமனையில் குழந்தை பிறந்து இங்கு வந்து வீசி சென்றனரா? அல்லது கள்ளக்காதலில் பிறந்த குழந்தையாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    மருத்துவமனையில் குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்ச தாய் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மூலவர் சாமிகளுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
    • கும்பாபிஷேக நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு கிரிவலப்பாதை அமைந்துள்ளது.

    இந்தப் பாதையில் அஷ்டலிங்க சந்நிதிகள் உள்பட ஏராளமான கோவில்கள் அமைந்துள்ளன. இதில், ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள 10 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது.

    அதன்படி, கிரிவலம் வரும்போது 8 திசைகளிலும் பக்தர்கள் வணங்கிச் செல்லும் அஷ்டலிங்க சந்நிதிகள், பிற்காலத்தில் உருவான சூரியலிங்க சந்நிதி, சந்திரலிங்க சந்நிதி என மொத்தம் 10 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த ஓராண்டாக திருப்பணிகள் நடைபெற்றது.

    தற்போது, பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று அஷ்டலிங்க சந்நிதிகளான இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருணலிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவற்றுக்கும், சந்திர லிங்கம், சூரிய லிங்கம் ஆகிய 10 கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதையொட்டி, 10 கோவில்களிலும் கணபதி பூஜை, மாலை 6 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை, வெள்ளிக்கிழமை காலை 2-ம் கால யாக சாலைப் பூஜை, வேத பாராயணம், திருமுறைகள் பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தொடர்ந்து, நேற்று காலை 10 கோவில்களுக்கும் ஒரே நேரத்தில் கோவில்களின் மூலவர் சந்நிதிகள், கோவில் மூலவர் சந்நிதி கோபுரங்கள் மீது யாக சாலைகளில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை ஸ்ரீஅருணாச லேஸ்வரர் கோவில் சிவாச்சாரியர்கள் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    பின்னர் மூலவர் சாமிகளுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
    • ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கியது. நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைகிறது.

    இன்று காலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இறைவனுக்கு எத்தனையோ அபிஷேகம் செய்யப்பட்டாலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.

    இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம் என தெரிவித்தனர்.

    • வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை
    • போலீசார் தேடி வருகின்றனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயி. இவருடைய 16 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த மாணவி அதிகாலை மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி உள்ளனர்.

    அவர் கிடைக்காததால் பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தனர். இதேபோல் தூசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளம்பெண் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 24-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து இளம் பெண்ணின் பெற்றோர் தூசி போலீசில் புகார் அளித்தனர். இந்த இரு சம்பவங்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி, இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • 20 சதவீதம் போனஸ் உடனடியாக வழங்க வேண்டும்
    • கேங்மேன் பணியாளர்களுக்கும் 6 சதவீதம் ஊதிய உயர்வு கேட்டு கோஷமிட்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திற்கு திருவண்ணாமலை கிழக்கு கோட்ட சி.ஐ.டி.யு தலைவர் அருள்தாஸ் தலைமை தாங்கினார்.

    கோட்டதுணைச் செயலாளர் பாவேந்தன், கீழ்பென்னாத்தூர் பிரிவு நிர்வாகி ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தமிழகத்தில் மின்வாரிய துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும், டெண்டர் முறையினை ரத்து செய்ய வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் உடனடியாக வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கும் 6 சதவீதம் ஊதிய உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் 75 -க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் சங்கர் நன்றி கூறினார்.

    ×