search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    லாஜிக்-மேஜிக்
    X

    லாஜிக்-மேஜிக்

    • வெற்றி பெற வேண்டுமா- கடினமாக கவனமாக உழைக்க வேண்டும்.
    • வெறும் வயிற்றில் வெந்தயம், வெள்ளைப்பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் ஒரு வாரத்தில் எடை குறையும் என்றால் அது மேஜிக்.

    பலருக்கு லாஜிக்காகப் பேசுவது பிடிக்காது. மேஜிக்தான் பிடிக்கும். ஏனென்றால் லாஜிக் உண்மையைச் சொல்கிறது. பின்பற்றக் கடினமானது. மேஜிக் எளிமையானது. நோகாமல் நொங்கு தின்பது.

    லாஜிக்கலாகப் பார்த்தால் நாம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.மேஜிக்கலாக யோசித்தால் பொறுப்பை இன்னொருவர் மீது போடலாம்.

    1. வெற்றி பெற வேண்டுமா- கடினமாக கவனமாக உழைக்க வேண்டும். - இது லாஜிக். ஆனால் எதாவது குறுக்குவழியில் ஒரு கடவுளோ, சடங்கோ, வழிபாடோ, அல்லது ஆழ்மன ஆற்றல், பிரபஞ்ச அலை போன்ற போலி அறிவியல் விஷயங்கள் மூலம் வெற்றி பெற நினைப்பது மேஜிக்.

    2. பணக்காரன் ஆகவேண்டுமா ? செலவுகளைக் குறைத்து நீண்ட காலம் பொறுமையாக முதலீடு செய்ய வேண்டும். இதுதான் லாஜிக். மல்டி லெவல் மார்க்கெட்டிங், 36%, 72% வளர்ச்சி தருவதாக விளம்பரப்படுத்தும் திட்டங்கள், சூதாட்டம் போன்ற விஷயங்களில் ஈடுபடுவது மேஜிக்.

    3. உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? முறையான டயட் , எக்ஸர்ஸைஸ் விடாமல் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது லாஜிக். வெறும் வயிற்றில் வெந்தயம், வெள்ளைப்பூண்டு, வெண்டைக்காய் இவற்றைச் சாப்பிட்டால் ஒரு வாரத்தில் எடை குறையும் என்றால் அது மேஜிக்.

    4. இந்த மருந்து 50% குணப்படுத்தும். இதில் இன்னின்ன பக்க விளைவுகள் இருக்கின்றன என்பது லாஜிக். இது 100% குணப்படுத்தக்கூடியது. 0% பக்கவிளைவுகள் என்பதெல்லாம் மேஜிக்.

    5. தேர்வில் வெற்றி அடையக் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டும். இது லாஜிக். வினாத்தாள் கிடைக்குமா எனப் பார்ப்பது மேஜிக்.

    6. நம் மனதின் சிக்கல்களுக்கு நாம் பொறுப்பெடுத்துக் கொண்டு நம்மை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும் . இது லாஜிக். நாம் முயற்சிக்கவே செய்யாமல் ஹிப்னாடிசம் அல்லது ஒரு மாயாஜால மாத்திரை மூலம் வேறு யாரோ நம்மைக் குணப்படுத்த வேண்டும் என நினைப்பது மேஜிக். மற்ற மருத்துவ சிகிச்சைகளிலும் அப்படித்தான்.

    -டாக்டர் ஜி ராமானுஜம்

    Next Story
    ×