என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
![மீண்டும் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன்: அமைச்சரவை பட்டியல் வெளியீடு மீண்டும் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன்: அமைச்சரவை பட்டியல் வெளியீடு](https://media.maalaimalar.com/h-upload/2024/06/10/2576775-minister-list.webp)
மீண்டும் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன்: அமைச்சரவை பட்டியல் வெளியீடு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அமித்ஷாவுக்கு மீண்டும் உள்துறை ஒதுக்கீடு
- ஜெய்ஷங்கருக்கு மீண்டும் வெளியுறவு துறை ஒதுக்கீடு
மக்களவைத் தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
கடந்த தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் யாரையும் எதிர்பார்க்காமல் ஆட்சியமைத்த பாஜக இந்த முறை ஆர்.ஜே.டி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
நேற்று இரவு 7.15 மணிக்கு மோடி 3 வது முறையாக மீண்டும் பதவியேற்றார். அவருடன் கேபினட் அமைச்சர்கள், இணையமைச்சர் ஆகியோர் பதவியேற்றனர். ஆனால் அமைச்சர்களுக்கு என்னென்ன இலக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரம் அப்போது வெளியாகவில்லை.
இன்று கேபினட் அமைச்சர்களுக்கு என்னென்ன இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என விவரங்கள் வெளிவந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவை - கேபினட் அமைச்சர்கள் பட்டியல்
▪️ ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு
▪️ அமித்ஷா - உள்துறை
▪️ ஜே.பி.நட்டா - சுகாதாரம், ரசாயனங்கள்
▪️ சிவ்ராஜ் சிங் சவுஹான் - வேளாண், ஊரக வளர்ச்சி
▪️ மனோகர் லால் கட்டார் - மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி
▪️ நிர்மலா சீதாராமன் - நிதி
▪️ ஜெய்ஷங்கர் - வெளியுறவு
▪️ அஷ்வினி வைஷ்ணவ் - ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி
▪️ மன்சுக் மாண்ட்வியா - தொழிலாளர் நலன், இளைஞர் நலன், விளையாட்டு
▪️ ஹர்தீப் சிங் புரி - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
▪️ ஜித்தன் ராம் மஞ்சி - சிறு குறு நடுத்தர தொழில்கள்
▪️ தர்மேந்திர பிரதான் - கல்வி
▪️ குமாரசாமி - இரும்பு, கனரக தொழில்கள்
▪️ ராம்மோகன் ராயுடு - விமான போக்குவரத்து
▪️ பியூஷ் கோயல் - வணிகம் மற்றும் தொழில்துறை
▪️ ராஜீவ் ரஞ்சன் சிங் - பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை, பால்வளம்
▪️ சர்பானந்த சோனோவால் - கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வழிகள்
▪️ வீரேந்திர குமார் - சமூக நீதி
▪️ அன்னபூர்ண தேவி - மகளிர், குழந்தைகள் மேம்பாடு
▪️ கிரண் ரிஜிஜு - நாடாளுமன்ற விவகாரங்கள், சிறுபான்மையினர் நலன்
▪️ சி.ஆர்.பாட்டீல் - ஜல் சக்தி
▪️ ப்ரகலாத் ஜோஷி - நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
▪️ கிரிராஜ் சிங் - ஜவுளி
▪️ ஜூவல் ஓரம் - பழங்குடியினர் நல விவகாரம்
▪️ ஜோதிர்த்தியா சிந்தியா - கம்யூனிகேஷன், வடகிழக்கு நலன்
▪️ பூபேந்தர் யாதவ் - சுற்றுச்சூழல், வனம்
▪️ கஜேந்திர சிங் ஷெகாவத் - கலாச்சாரம் மற்றும் சுற்றுலா
▪️ கிஷன் ரெட்டி - நிலக்கரி மற்றும் சுரங்கங்கள்
▪️ சிராஜ் பஸ்வான் - உணவு பதப்படுத்தும் தொழில்கள்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)