என் மலர்
நீங்கள் தேடியது "நிறுத்தம்"
- நியூ காரியாவில் இருந்து கிளம்பி தக்ஷிணேஷ்வர் நோக்கி வடக்கு- தெற்கு காரிடாரில் இன்று காலை சென்றுகொண்டிருந்தது
- மகாநாயக் உத்தம்குமார் [டாலிகுங்கே] மெட்ரோ நிலையத்தில் ஏற்பட்ட பவர் கட்-ஆல் அங்கேயே ஓடாமல் நின்றுவிட்டது.
இந்தியாவின் பெரு நகரங்களின் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. மற்றொரு புறம் நகரங்கள் மற்றும் ஊர்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவது என்பது மக்களுக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் பவர் கட்- ஆல் மெட்ரோ ரெயிலே நின்றுள்ள சம்பவம் கல்கத்தாவில் நடந்துள்ளது.
மேற்கு வங்காள தலைநகர் கல்கத்தாவில் நியூ காரியாவில் இருந்து கிளம்பி தக்ஷிணேஷ்வர் நோக்கி வடக்கு- தெற்கு காரிடாரில் இன்று காலை சென்றுகொண்டிருந்த மெட்ரோ ரெயிலானது 10.38 மணியளவில் மகாநாயக் உத்தம்குமார் [டாலிகுங்கே] மெட்ரோ நிலையத்தில் ஏற்பட்ட பவர் கட்-ஆல் அங்கேயே ஓடாமல் நின்றுவிட்டது.
பணியாளர்களின் துரிதமான நடவடிக்கையால் சுமார் 14 நிமிடங்கள் கழிந்து மீண்டும் கரண்ட் வந்த நிலையில் 10.52 மணிக்கு மீண்டும் ரெயில் பயணத்தை தொடர்ந்தது. கரண்ட் கட்- ஆல் மெட்ரோ ரெயில் நிற்பது என்பது வழக்கத்துக்கு மாறானதாக பார்க்கப்படுகிறது.
- ஐதராபாத்தில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானங்களை இயக்கியது.
- இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வேறு ஒரு விமானத்தில் அயோத்தி செல்ல வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு, அயோத்திக்கு முக்கிய நகரங்களில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விமானங்களை இயக்கத் தொடங்கியது. ஐதராபாத்தில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானங்களை இயக்கியது. இந்த இடைநில்லா விமானங்கள், வாரத்தில் மூன்று முறை இயக்கப்பட்டன.
இந்நிலையில், ஐதராபாத்- அயோத்தி நேரடி விமான சேவையை கடந்த 1-ம் தேதியில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களில் நேரடி விமான சேவை முடிவுக்கு வந்துள்ளது. டிக்கெட் விற்பனை குறைந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
தென்னிந்தியாவின் பரபரப்பான தொழில்நுட்ப மையமான ஹைதராபாத்தை வடக்கு மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள மத மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நகரமான அயோத்தியுடன் இணைக்கும் விமான சேவையை நிறுவனம் தொடங்கிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த பாதையில் செயல்பாடுகளை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இப்போது, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஐதராபாத்தில் இருந்து அயோத்தி செல்ல வேண்டுமானால், ஐதராபாத்தில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வேறு ஒரு விமானத்தில் அயோத்தி செல்ல வேண்டும்.
இதற்கு முன்பு, சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் இருந்து அயோத்திக்கான நேரடி விமான சேவைகளையும் ஸ்பைஸ்ஜெட் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைக்கு, அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து மட்டும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நேரடி விமானங்கள் செல்கின்றன.
- பெங்களூரு, ஹைதராபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்கள் கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் திடீரென நிறுத்தப்பட்டது.
- ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்கள் கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. வருமானம் குறைவாக வந்ததால் விமான சேவை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் விமான சேவையை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 3 1/2 மாதங்கள் கழித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மூலம் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு மீண்டும் அக்டோபர் மாதம் முதல் விமானம் இயக்கப்பட்டு வந்தது.
அதன்படி, தினமும் மதியம் 10.25 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.10 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது. மதியம் 12.35 மணிக்கு புதுவையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.35 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.
மதியம் 2.10 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு 3.15 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது. அதன் பிறகு, மாலை 3.40 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு ஹைதராபாத் சென்றடைகிறது.
இந்நிலையில் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் செலவை ஈடுசெய்யும் வகையில் கூட டிக்கெட் முன்பதிவாக இல்லை.
விமானத்தில் உள்ள 78 இருக்கைகளில் போதிய அளவு பயணிகள் இல்லாமல் தினமும் புதுவையில் இருந்து பெங்களூருக்கும். ஹைதராபாத்துக்கும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வருகிற 31-ந் தேதி முதல் விமான சேவையை முழுமையாக நிறுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதை உறுதி செய்யும் விதமாக வருகிற 31-ந் தேதி முதல் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கான விமான டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
- மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னை:
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகு குழாம் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் விடுமுறையின் போது குடும்பத்துடன் முட்டுக்காடு படகு குழாமுக்கு வந்து படகு சவாரி செய்வது வழக்கம்.
குறிப்பாக பெண்கள், குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் முட்டுக்காடு படகு குழாமில் உள்ள மோட்டார் படகுகள், கால்களால் இயக்கக்கூடிய மிதி படகுகள், நீரில் பாய்ந்து செல்லக்கூடிய மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சவாரி செய்து மகிழ்வார்கள்.
இந் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மிச்சாங் புயல் மழையின் காரணமாக பருவநிலையில் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இதனால் எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் முட்டுக்காடு முகத்துவார பகுதி தற்போது நீர் வற்றி ஆங்காங்கே மணல் திட்டுகளாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இங்கு தற்போது மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து முட்டுக்காடு படகு குழாமில் படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மிச்சாங் புயல் போன்ற இயற்கை சீற்றத்தின் காரணமாகபருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு முட்டுக்காடு முகத்துவாரத்தில் தண்ணீர் வற்றி உள்ளது. ஓரிரு நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கலாம். இதன் காரணமாக மோட்டார் படகுகளை இயக்க முடியவில்லை. பொதுமக்களின் வசதிக்காக மிதி படகுகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இதனால் ஒரு சிலர் மட்டுமே அந்த மிதி படகுகளை பயன்படுத்தி சவாரி சென்றனர். மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- 3.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள ஊதா நிற பால் பாக்கெட்டை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
- திடீரென நிறுத்துவதன் மூலம் அதனை பருகிவந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வழிவகை செய்யும்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
குறைந்து வரும் பால் கொள்முதல், ஊழல், முறைகேடு என பல புகார்களில் சிக்கித் தவிக்கும் ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை போக்க, 4.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள ஊதா நிற பால் பாக்கெட்டை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பது போல குறைத்துவிட்டு, பால்பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருக்கும் தி.மு.க. அரசு, பொதுமக்களின் நீண்டகால பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளை திடீரென நிறுத்துவதன் மூலம் அதனை பருகிவந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வழிவகை செய்யும்.
எனவே, நஷ்டத்தில் இயங்கும் ஆவின் நிர்வாகத்தின் வருவாயை பெருக்க மாற்று ஏற்பாடுகளை செய்வதோடு, பொது மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா ஆகிய நான்கு விதமான பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகம் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரியலூர், தேளூர், உடையார்பாளையம், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்
அரியலூர், தேளூர், உடையார்பாளையம், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால் அரியலூர் ஒரு சில பகுதிகள், கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி,
கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி. வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளுர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டை. உடையார்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி,
குமிழியம், ஜெ.தத்தனூர், நாச்சியார்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி, இடையார். ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- வி.பி.தெரு பகுதியில் பொதுமக்கள் நடமாட இயலாததால் நடவடிக்கை
- ஆட்டோ ஸ்டாண்ட் எதிரே மாற்றப்பட்டு உள்ளது அந்த பகுதியில் ஓரளவு வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டது.
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து வருவதால், மார்கெட் நுழைவு வாயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வி.பி.தெரு பகுதியில் பொதுமக்கள் நடமாட இயலவில்லை. மேலும் அந்த பகுதியில் சரக்குவாகன நிறுத்தம் செயல்பட்டு வந்தது.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி வி.பி.தெரு பகுதியில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே சரக்குவாகன நிறுத்தும் இடம் தற்போது குன்னூர் மெயின் ஆட்டோ ஸ்டாண்ட் எதிரே மாற்றப்பட்டு உள்ளது இதனால் அந்த பகுதியில் ஓரளவு வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கான நிகழ்ச்சியில் சரக்குவாகன நிறுத்தத்தை மாற்றியமைக்க முயற்சிகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் பிக்கப் டிரைவர்கள் நன்றி தெரிவித்தனர்.
- வலையப்பேட்டை வழியாக செல்லும் குடிநீர் பிரதான குழாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளது.
- தேவையான குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- நாமக்கல் மாவட்டத்தில் மின் நிறுத்த அறிவிப்பு மின்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 8- ந் தேதி
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்ய உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் மின் நிறுத்த அறிவிப்பு மின்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 8- ந் தேதி மெட்டல்லா, ஆனங்கூர், சமயசங்கிலி, 12- ந் தேதி நல்லூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம், மல்லசமுத்திரம், 14 -ந் தேதி நாமகிரிப்பேட்டை, இளநகர், இமல்லி, கொமரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை, உப்புபாளையம், 16- ந் தேதி சேந்தமங்கலம், பரமத்திவேலூர், முசிறி, 19- ந் தேதி வளையப்பட்டி, திருச்செங்கோடு, உஞ்சனை, 20- ந் தேதி ராசிபுரம், எஸ்.வாழவந்தி, நாமக்கல், 21 - ந் தேதி காளப்பநாயக்கன்பட்டி, எருமப்பட்டி, கபிலர்மலை, பருத்திபள்ளி, வில்லிபாளையம், 26- ந் தேதி கெட்டிமேடு, பள்ளக்காபாளையம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்ய உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டது.
- இந்த ரெயில் அனைத்து ரெயில் நிறுத்தங்களிலும் நின்று செல்லும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை -திருச்சி, திருச்சி - கரூர், கரூர்-சேலம் ஆகிய 3 ரெயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரெயில் சேவையாக மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இதனிடையே இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து 6.20 மணிக்கு புறப்பட்ட இந்த ரயிலை ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி வரவே ற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெயில் இன்ஜின் முன்புறம் மாலை அணி வித்தும் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
முன்னதாக ரயில் ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்பட்டு கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு காலை 9.30 மணிக்கு சென்றடைகிறது.
பின்னர் கரூர், நாமக்கல் வழியாக பிற்பகல் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது.
இதே போன்று மறு மார்க்கமாக சேலத்தில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 6.05 மணிக்கு வந்தடைகிறது.
பின்னர் இரவு 9.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும். இந்த ரயில் அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் நின்று செல்வது குறிப்பி டத்தக்கதாகும்.
சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்பட்ட ரெயில் இனிமேல் மயிலாடுதுறை வரை இயக்கப்பட இருப்பது ரயில் பயணிகள் மற்றும் வணிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) வெள்ளிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால்
- ஆகிய ஊர்களுக்கும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) வெள்ளிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வில்லி பாளை யம், ஜங்கமநாயக்கன்பட்டி, சின்னம நாயக்கன்பட்டி , சுங்ககாரம்பட்டி, நல்லாகவுண்டம்பாளை யம், பெரியாக்கவுண்டம் பாளையம்,தம்ம காளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தநாரி பாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவி பாளையம், கீழக்கரை, கஜேந்திர நகர், சுண்டக்காம்பாளையம் ஆகிய ஊர்களுக்கும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
- ஓமலூர் கோட்டத்திற்கு உட்பட்ட தொப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந்தேதி) நடைபெற உள்ளது.
- பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஓமலூர் கோட்டத்திற்கு உட்பட்ட தொப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந்தேதி) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, குண்டுக்கல், ஜோடுகுளி, தளவாய்பட்டி, எலத்தூர், சென்னா ரெட்டியூர், கொண்ரெட்டியூர், மூக்கனூர், தீவட்டிப்பட்டி, சோழியானூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.