என் மலர்
நீங்கள் தேடியது "நேரம்"
- நிலவு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா செயல்படுத்தி வருகிறது.
- ஆர்டெமிஸ் பயணத்திற்கு முன் சந்திரனின் நேரத்தை துல்லியமாகக் கணிக்க நாசா முடிவெடுத்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அங்கு மனிதர்கள் தரையிறங்கக்கூடிய இடங்களை கண்டறிந்துள்ளது.
சந்திரனின் தென் துருவம் என்பது சூரியனில் இருந்து விலகி நிரந்தரமாக நிழலாக இருக்கும் ஒரு பகுதி. இங்கு மனிதர்கள் கால் பதிக்க வசதியான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த 1969-ம் ஆண்டு நாசா தனது அப்போலோ திட்டம் மூலம் நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்தது. அதன்பின், தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவுசெய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தத் திட்டத்திற்கு ஆர்டெமிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி நாசா நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை நடத்த உள்ளது.
இந்நிலையில், நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கை ஒன்றில், நிலவின் நேரம் பூமியை விட வேகமாக ஓடத் தொடங்கியுள்ளது. நிலவின் நேரம் ஒரு நாளைக்கு 57 மைக்ரோ விநாடிகள் வேகமாக ஓட தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளது.
ஆர்டெமிஸ் பயணத்திற்கு முன் சந்திரனின் நேரத்தை துல்லியமாகக் கணிக்க நாசா முடிவெடுத்துள்ளது.
52 ஆண்டுகளுக்கு முன் விண்வெளி வீரர்கள் கடைசியாக சந்திரனில் கால் பதித்தனர். அப்போதிருந்த நேரத்துடன் ஒப்பிடும்போது நிலவின் நேரம் சுமார் 1.1 வினாடிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக பார்க்கும்போது இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. பூமி மற்றும் சந்திரனின் நேரம் சரியாக இருந்தால் தான் நேவிகேஷன் அமைப்புகள் போன்ற செயற்கைக்கோள்கள் துல்லியமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- 17-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது
- இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப் படுகிறது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப் பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கேரளா வில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது. அன்று முதல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலா னவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை வழிபடுவது வழக்கம். இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரி சலை தவிர்க்க கோவி லின் நடை திறக்கும் நேரத்தை நீட்டிக்க குமரி மாவட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 17-ந்தேதி முதல் பக்தர்களின் தரிசனத்துக்கு வசதியாக பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை மதியம் 1 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேபோல இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப் படுகிறது.
இந்த தகவலை குமரி மாவட்ட திருக்கோவில் களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், இணை ஆணை யர் ரத்தினவேல் பாண்டி யன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
- வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
- தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -
தீபாவளி நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்து வார்கள். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதி கர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெங்களூரு உதய், திருப்பதி, சென்னை செல்லும் இன்டர்சிட்டி ஆகிய 3 ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
- வந்தே பாரத் ரெயில் கோவையில் இருந்து காலை 6 மணிக்கு ரெயில் புறப்படும்.
திருப்பூர் :
வந்தே பாரத் ரெயில் இயக்கம் தொடங்குவதால், கோவையில் இருந்து பெங்களூரு உதய், திருப்பதி, சென்னை செல்லும் இன்டர்சிட்டி ஆகிய 3 ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. திருப்பூர் வரும் நேரம் மாறுகிறது. கோவை - சென்னை வந்தே பாரத் ெரயில் (எண்:20644) இயக்கம் நாளை (9ந் தேதி) தொட ங்குகிறது. கோவையில் இருந்து காலை 6 மணிக்கு ரெயில் புறப்படுமென அறிவிக்கப்ப ட்டுள்ளதால், அதே நேரத்தில் கோவையில் இருந்து புறப்படும் 3 ரெயில்களின் நேரம் புதிய அட்டவணைப்படி மாற்றப்பட்டடுள்ளது.
அதன்படி கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் (எண்:22666) காலை 5:45 மணிக்கு பதில் 5 நிமிடம் முன்பாக 5:40 மணிக்கு புறப்படுகிறது. 6:23 மணிக்கு பதில் 6:18 மணிக்கு திருப்பூர் வந்து விடும். கோவை - திருப்பதி சூப்பர்பாஸ்ட் ரெயில் (எண்:22616) வழக்கமான நேரத்தை விட 10 நிமிடம் தாமதமாக 6:10 மணிக்கு புறப்படும். திருப்பூரை 6:50 மணிக்கு கடக்கும்.
கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) 5 நிமிடம் தாமதமாக 6:20 மணிக்கு புறப்படும். திருப்பூரை 7 மணிக்கு கடக்கும்.காலை 6 மணிக்கு கோவையில் புறப்படும் வந்தே பாரத் ெரயில் (எண்:20644) 6:35 மணிக்கு திருப்பூர் வந்து, இரண்டு நிமிடம் நின்று 6:37 மணிக்கு புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர்
- கொற்றிகோடு போலீசார் ஆற்றுகோணம் சென்று மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
கன்னியாகுமரி:
பொங்கல் அன்று தக்கலை அருகே கைசாலவிளை மேக்காமண்டபம் பகுதியில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஒவ்வொரு வீடாக சென்று பார்ப்பதும் செல்வதுமாக இருந்துள்ளார்.
இதை கவனித்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூதாட்டியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவரது பெயர் கமலாட்சி எனவும், தனது மகளுக்கு பொங்கல் கொண்டு வந்ததாகவும் வீடு அடையாளம் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தனது மகளின் பெயர் ஊர் கேட்ட போது மகள் பெயர் கிரேசி எனவும் ஊர் பெயர் தெரியவில்லை எனவும் கூறினார். மேலும் தனது மகளை பார்க்க மேக்காமண்டபம் வந்து இந்த பாதை வழியாக வருவேன் எனவும் கூறினார்.
பொதுமக்கள் மூதாட்டியை அமர வைத்து விசாரிக்க தொடங்கினர். பல மணி நேரம் ஆன பின்பும் மகள் வீடு கண்டுபிடிக்க முடியாததால் கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மூதாட்டியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூதாட்டியின் வீடு புதுக்கடை காட்டுவிளை என கூறியதால் போலீசார் புதுக்கடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் மூதாட்டியின் போட்டோவையும் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக புதுக்கடை போலீசார் விசாரணை செய்த போது மூதாட்டியின் கணவர் செல்லையா எனவும், அவர் இறந்த பிறகு மகன் தாஸ் வீட்டில் வசித்து வருவதும் பொங்கல் அன்று மகளை பார்க்க பொங்கல்படி கொண்டு சென்றுள்ளார். மகளின் வீடு ஆற்றுகோணம் பகுதியில் உள்ளது என தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கொற்றிகோடு போலீசாருக்கு புதுக்கடை போலீசார் தெரிவித்தனர். பின்னர் கொற்றிகோடு போலீசார் ஆற்றுகோணம் சென்று மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மூதாட்டி தனது மகளையும், பேரக்குழந்தையும் பார்த்து கண் கலங்கினார். பின்னர் மூதாட்டியை அவரது மகளுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். மூதாட்டி வீடு அடையாளம் தெரியாமல் தவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மக்களை பற்றி சிந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு நேரமில்லை என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
- ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மேற்கு மாவட்ட வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் பால், மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து மாவட்ட மைய நூலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது;-
தி.மு.க. ஆட்சியில் மகனுக்கு பட்டாபிஷேகம், அதிகாரதுஷ்பிரயோகம், குடும்ப ஆட்சி, மக்களை பற்றி சிந்திக்காத ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்களில் விலைவாசி கள் தாறுமாறாக உயர்ந்து விட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தை பற்றியே சிந்திக்கிறார். மக்களை பற்றி சிந்திக்க அவருக்கு நேரமில்லை. தி.மு.க. ஆட்சி எப்போது வீட்டுக்கு அனுப்பப்படும் என்று தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
- 17-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது
- இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை4.30மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது. அன்று முதல் தமிழ்நாடு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
சபரிமலை அய்யப் பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும் பாலானவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை வழிபடுவது வழக்கம். இதனால் அன்று முதல் கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க கோவிலின் நடை திறக்கும் நேரத்தை நீட்டிக்க குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
அதன்படி வருகிற 17-ந்தேதி முதல் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசனை யொட்டி பக்தர்களின் தரிசனத்துக்கு வசதியாக பகல் 12.30 மணிக்கு அடைக் கப்படும் நடை மதியம் 1 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேபோல இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப்படுகிறது.
- வடக்குப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் காலை 10 மணிக்கு மேல் திறந்து, மதியம் ஒரு மணிக்குள் அடைத்து விடுகின்றனர்.
- ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறந்து, மக்களுக்கு பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன் திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூரில் உள்ள ரேஷன் கடைகள் சரியான நேரத்துக்கு திறப்பதில்லை. வடக்குப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் காலை 10 மணிக்கு மேல் திறந்து, மதியம் ஒரு மணிக்குள் அடைத்து விடுகின்றனர். மாலை, 4 மணிக்கு திறந்து 5:30 மணிக்குள் அடைத்து விட்டு செல்கின்றனர். மாதந்தோறும் 1, 30, 31-ந் தேதிகளில் கடைகளை திறப்பதே இல்லை. போயம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் 31ந் தேதி விடுமுறை என இரண்டு நாட்களுக்கு முன்னரே தகவல் பலகையில் எழுதி வைத்து விடுகின்றனர். ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறந்து, மக்களுக்கு பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் பொறியியல் மேலாண்மை பணி நடக்கிறது.
- டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள், பயணத்தை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.
திருப்பூர் :
சேலம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள, திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் மின்வழித்தடம், தண்டவாளம் சீரமைப்பு, பொறியியல் மேலாண்மை பணி இன்று, நாளை 2-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.
இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக செல்லும், 10 ரெயில்களின் நேரம், வழித்தடம் மாற்றப்படுகிறது. அவ்வகையில் இன்று ஆலப்புழா - தன்பாத், ஈரோடு - சென்னை - ஏற்காடு எக்ஸ்பிரஸ், திருப்பத்தூர் நிலையத்தில் நிற்காது. நாளை 2-ந் தேதி கன்னியாகுமரி - பெங்களூரு, கோவை - ராஜ்கோட், கொச்சுவேலி - மைசூரு, மங்களூரு - சென்னை வெஸ்ட்கோஸ்ட், திருப்பத்தூரில் நிற்காது.இந்த ரெயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள், பயணத்தை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.
2 நாட்களும் ஈரோடு - ஜோலார்பேட்டை பாசஞ்சர் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சூலூர் ரெயில் நிலையங்களுக்கு செல்லும் ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
- 3 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை தாமதமாக ரெயில் இயக்கப்படுகிறது.
திருப்பூர்:
கோவை-சேலம் முன்பதிவில்லா பயணிகள் ரெயில் (எண்.06802) கோவை, வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரெயில் நிலையங்களுக்கு செல்லும் ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் காலை 9.05 மணிக்கும், வடகோவைக்கு 9.12 மணிக்கும், பீளமேடுக்கு 9.19 மணிக்கும், சிங்காநல்லூருக்கு காலை 9.24 மணிக்கும், இருகூருக்கு 9.30 மணிக்கும், சூலூருக்கு 9.37 மணிக்கும் வந்து செல்லும். அதாவது முந்தைய நேரத்தை விட 3 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை தாமதமாக ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கும் மேக்னசைட் ரெயில் நிலையத்திற்கும் இடையே உள்ள பகுதியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பாலம் கட்டுமான பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று சேலம், ஈரோடு, கோவை வழியாக மற்றும் சேலம், கரூர், நாமக்கல் வழியாக செல்லும் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352) 3 மணி நேரம் காலதாமதமாக ஆலப்புழாவில் இருந்து புறப்படும்,
எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட வேண்டிய எர்ணாகுளம்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் (12678) ரெயில் 3 மூன்று மணி நேரம் காலதாமதமாக புறப்படும். கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்(12244) ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்படும்.
கோவையில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை- சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (12676) 1 மணி நேரம் காலதாமதமாக புறப்படும். நா கர்கோவில்-மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் (16340) நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் 2 மணி நேரம் கால தாமதமாக புறப்படும்.
ஜோலார்பேட்டையில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட வேண்டிய ஜோலார்பேட்டை-ஈரோடு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் (06411) ரெயில் 1 மணி நேரம் காலதாமதமாக புறப்படும். மேலும் ராஜ்கோட்- கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (16613) 40 நிமிடம் காலதாமதமாக இரவு 9.30 கோவை ரயில் நிலையம் சென்றடையும்.
இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.