என் மலர்
நீங்கள் தேடியது "வாழ்த்து"
- சோனியா காந்தியின் பிறந்த தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன்.
- தொலைநோக்கு திட்டங்கள் என்றும் சரித்திர புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும்.
கன்னியாகுமமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகம் போற்றும் மாதரசி அன்னை சோனியா காந்தியின் பிறந்த தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன்.
இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளுக்காகவும் அவர் முன்வைத்த தொலைநோக்கு திட்டங்கள் என்றும் சரித்திர புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும்.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த அவர்கள் மேற்கொண்ட கடின உழைப்புக்கு காங்கிரஸ் பேரியக்க தோழர்கள் அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிரதமர் மோடி மீது தொடர்ந்து மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
- புதிய நீதிக் கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள்.
சென்னை:
புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி மிக பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க மூன்றில் ஒரு பங்கு இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தின் போது, எதிர்கட்சிகள் பிரதமர் மோடி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அம்மாநில மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
பிரதமர் மோடி மீது தொடர்ந்து மக்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர் என்பது உண்மையாகி உள்ளது. ஜார்கண்ட் மாநில மக்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு கணிசமான வாக்குகளை அளித்துள்ளனர் என்பதும் உண்மை.
மகாராஷ்டிராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள பா.ஜ.க தலமையிலான கூட்டணியின் ஆதர்ஷய நாயகன் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு புதிய நீதிக் கட்சியின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக வீராங்கனையான சென்னையை சேர்ந்த காசிமா (வயது 17) பங்கேற்றிருந்தார்.
- மூன்று பிரிவுகளிலும் முதலிடத்தை பிடித்து 3 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 6-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் தமிழக வீராங்கனையான சென்னையை சேர்ந்த காசிமா (வயது 17) பங்கேற்றிருந்தார். இவர் மகளிர் தனிநபர், இரட்டையர், குழு என மூன்று பிரிவுகளிலும் முதலிடத்தை பிடித்து 3 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக வீராங்கனை காசிமாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கை காசிமா, அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்று உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் காசிமாவின் பயணம்- பயிற்சிக்காக ரூ.1.50 லட்சத்தை நாம் வழங்கி வாழ்த்தியிருந்த நிலையில், 3 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்துள்ளார்.
தங்கை காசிமாவின் வெற்றிப்பயணம் தொடரட்டும்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கை காசிமா, அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்று உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் காசிமாவின் பயணம் - பயிற்சிக்காக… https://t.co/Sud288It8D
— Udhay (@Udhaystalin) November 17, 2024
- 6-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
- உலக கேரம் போட்டியில் தமிழக வீராங்கனை 3 தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 6-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் தமிழக வீராங்கனையான சென்னையை சேர்ந்த காசிமா (வயது 17) பங்கேற்றிருந்தார். இவர் மகளிர் தனிநபர், இரட்டையர், குழு என மூன்று பிரிவுகளிலும் முதலிடத்தை பிடித்து 3 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
இந்நிலையில் காசிமாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதில், " அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது உலக கேரம் போட்டியில் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!
பெருமை கொள்கிறேன் மகளே... எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கியிருக்கிறது!" என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது #CarromWorldCup-இல் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!பெருமை கொள்கிறேன் மகளே... எளியோரின் வெற்றியில்தான் #DravidianModel-இன் வெற்றி அடங்கியிருக்கிறது! https://t.co/xIRmkFmrgW
— M.K.Stalin (@mkstalin) November 17, 2024
- தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டு இருப்பது பெருமை.
- தொழிற்கல்வி குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்.
மதுரை:
மதுரை ரிசர்வ் லைன் விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர் மதுரை ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் உள்ள டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் கடந்த 39 ஆண்டுகளாக தொழில் கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ஆசிரியர் முரளிதரனின் கல்விப் பணியை கவுரவிக்கும் வகையில் இன்று தேசிய நல்லாசிரியர் விருது மத்திய கல்வி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள முரளிதரன் கூறியதாவது:-
தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஏற்கனவே மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வாங்கியுள்ளேன். தற்போது தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டு இருப்பது பெருமை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.
என்னால் இயன்றவரை இதனை பணியாக பார்க்காமல் மாணவர்களுக்கு செய்யும் கடமையாக பார்த்துதான் பணி செய்து வருகிறேன்.
மாணவர்களுக்கு புரியும் வகையில் கொரோனா காலத்தில் கூட தொழில் கல்வி தொடர்பான வீடியோக்களை உருவாக்கி அதன் மூலம் பயிற்சி அளித்தேன். தொடர்ந்து யூடியூப் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் தொழிற்கல்வி குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்.
எனது குடும்பம் ஒரு ஆசிரியர் குடும்பம், எனது தந்தை ஆசிரியராக இருந் தார். தற்போது எனக்கு 39 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்ததன் காரணமாக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டிருப்பது பெருமை அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கான விருது வருகிற (செப்டம்பர்) 5-ந்தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன் வழங்கப்பட உள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள மதுரையை சேர்ந்த தொழில் கல்வி ஆசிரியர் முரளிதரனுக்கு தமிழக பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- பொது அரசியலில் பணியாற்ற எல்லோருக்கும் உரிமை உண்டு.
- மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்.
தூத்துக்குடி:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொது அரசியலில் பணியாற்ற எல்லோருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு இயக்கம் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார் நடிகர் விஜய்.
இன்றைக்கு அவருடைய கட்சியினுடைய கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றுவதாக அறிவிப்பு வந்து இருக்கின்றது. மக்கள் பணி, இயக்கப் பணி, மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். அந்த வகையில் மக்களின் நம்பிக்கையை பெறுபவர்களுக்கு வாக்குகள் கிடைப்பது உறுதி.
புதிய கொடியை அறிமுகப்படுத்தி இருக்கிற தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவர் விஜய்க்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாலியல் தொந்தரவு என்பது உலக அளவில் இருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மிருகத்தனமான பாலியல்கள் செய்திகளை கேட்கும்போது வருத்தமாக இருக்கின்றது.
இந்த பாலியல் சீண்டலில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருவது, பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள், அதில் ஈடுபட்டவர்கள் யார் என்று முதல் நிலையிலே தெரிந்தாலே உடனடியாக அவருக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான். அப்படி கடுமையான தண்டனை இருக்குமேயானால் அடிப்படையில் பயம் இருக்கும்.
சட்டம், ஒழுங்கு எங்கு கெடுவதாக இருந்தாலும் அதற்கு குடிப்பழக்கம், போதைப் பொருட்கள் தான் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதனுடைய தாக்கம் பாலியல் தொல்லைக்கும் வழி வகுக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு வேதனைக்கும், வருத்தத்திற்கு உரிய விஷயம். பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் யார் என்று தெரிந்தால் நேரம், காலம் தாழ்த்தாமல் உடனடியாக 20 மணி நேரம், 48 மணி நேரத்தில் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது.
- பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.
அந்த வகையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது. உலக அளவிலும் சொற்ப தலைவர்களுக்கே இந்த அளவிலான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
பிரதமர் மோடி, கடந்த 2009 ஆம் ஆண்டு எக்ஸ்[ட்விட்டர்] தளத்தில் கணக்கை தொடங்கினார். இந்நிலையில் தற்போது 10 கோடி ஃபாலோயர்களை எட்டியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் உரிமையாளர் எலான் மஸ்க் மோடிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மஸ்க் தனது எக்ஸ் பதிவில், உலகில் அதிகம் பின்தொடரப்படும் தலைவர்களில் ஒருவராக ஆனதற்கு வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு மோடியை எக்ஸ் [ட்விட்டர்] தளத்தில் பின்தொடரும் கணக்குகளில் 60 சதவீதம் போலியானவை என்று சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
- தேர்தல் முடிவில், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றார்.
- திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்றார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தல் முடிவில், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றார்.
திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு 56,296 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சியின் அபிநயாவுக்கு 10,602 ஓட்டுகளும் கிடைத்தன.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவாவிற்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு கிடைத்து வரும் மக்கள் ஆதரவின் வெளிப்பாடாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
கழகத்தின் வேட்பாளராக களமிறங்கி இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ள அண்ணன்
அன்னியூர் சிவா அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
சட்டமன்ற உறுப்பினராக அவரது மக்கள் பணி சிறக்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த 2009ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் கணக்கை தொடர்ந்தார்.
- சமூக வலைத்தளங்களில் அதிகம் பின்தொடரும் உலக தலைவர்களில் பிரதமர் மோடி ஒருவர்.
இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.
அந்த வகையில்பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. இது, மற்ற அரசியல் தலைவர்களை விடவும் பிரதமர் மோடி தனித்து நிற்பதை காட்டுகிறது.
இந்திய அரசியல் தலைவர்களில் ராகுல் காந்திக்கு 26.4 மில்லியன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 27.5 மில்லியன், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் 19.9 மில்லியன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 7.4 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். ஆர்ஜேடியின் லாலு பிரசாத் யாதவ் 6.3 மில்லியன், தேஜஸ்வி யாதவ் 5.2 மில்லியன், NCP தலைவர் சரத் பவாருக்கு 2.9 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்றுள்ளார்கள்.
பிரதமர் மோடி, கடந்த 2009ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் கணக்கை தொடர்ந்தார். 10 கோடி பாலோவர்களை எட்டியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எக்ஸ் தளத்தில் அதிகம் பின்தொடரும் உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் இடம் பிடித்துள்ளார்.
- சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
- உங்கள் முயற்சிகள் தொடர என் வாழ்த்துக்கள்.
டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்தி ஜடேஜாவை வாழ்த்தி சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது
ஆல்-ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். உங்களின் ஸ்டைலான ஸ்ட்ரோக் ஆட்டம், ஸ்பின் மற்றும் சிறப்பான பீல்டிங்கை கிரிக்கெட் பிரியர்கள் பாராட்டுகிறார்கள். பல ஆண்டுகளாக சிறப்பாக டி20 போட்டிகளில் விளையாடியதற்கு நன்றி. உங்கள் முயற்சிகள் தொடர என் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
Dear @imjadeja,
— Narendra Modi (@narendramodi) June 30, 2024
You have performed exceptionally as an all-rounder. Cricket lovers admire your stylish stroke play, spin and superb fielding. Thank you for the enthralling T20 performances over the years. My best wishes for your endeavours ahead.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
- இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலை இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்
"போட்டி முழுவதும் இந்திய அணி புத்திசாலித்தனமாக இருந்தது. இந்த அணி தோற்கடிக்கப்படாத மற்றும் விரிவானது.
இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள், ரசிகர்கள் மற்றும் இந்தியர்கள் என ஒட்டு மொத்த தேசமும் உங்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடுகிறது" என்று கூறியுள்ளார்.
Sheer brilliance from this team throughout the competition.
— K L Rahul (@klrahul) June 30, 2024
Unbeaten and comprehensive.
Congratulations team ??
The support staff, the fans and all Indians ?
The whole nation celebrates with you guys ? pic.twitter.com/dk6LghMVOV
சென்னை:
தமிழக காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளையபெருமாள் நூற்றாண்டு விழா இன்று மாலையில் காமராஜர் அரங்கில் நடக்கிறது.
இதையொட்டி காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் மாநில தலைவர் ரஞ்சன் குமார் இளையபெருமாளின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிட ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து காங்கிரஸ் பேரியக்கத்தின் நாடறிந்த தலைவராக உயர்ந்த பெரியவர் எல்.இளையபெருமாள் அரசியல் வாழ்க்கை என்பது, காலத்தாலும், களத்தாலும் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றதாகும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக 1952 முதல் 1967 வரை 3 முறை தேர்வு செய்யப்பட்ட பெருமைக்குரியவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். நேரு பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு ஆணையத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றியவர் என்பதெல்லாம் இளையபெருமாள் அரசியல் அடையாளங்கள்.
அவர் தலைமையிலான அகில இந்தியத் தீண்டாமை ஆணையத்தின் பரிந்துரையின் பலனாகவே, தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்உருவானது என்பதே அவரது அரசியல் லட்சியத்தின் உன்னதத்திற்கும், விழுமியத்திற்கும் வெளிப்படையான வரலாற்றுச் சான்று.
பெரியவர் இளையபெருமாள், 1980-ல் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமையும்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். கலைஞருடன் மிகுந்த நெருக்கமும், நட்புறவும் கொண்டிருந்தவர். 1998-ம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் பெயரிலான தமிழ்நாடு அரசின் விருதை முதன்முதலாக பெரியவர் இளையபெருமாள் அவர்களுக்குத்தான் முதலமைச்சர் தலைவர் கலைஞர் வழங்கினார்கள். "சலிப்பேறாத சமூகத் தொண்டர்" என்று கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர்.
இளையபெருமாள் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் ஒன்று அமைக்கப்படும் என்று கடந்த 18.4.2023 அன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளேன்.
பெரியவர் இளையபெருமாள் நூற்றாண்டைக் கொண்டாடுவதுடன், "இளையபெருமாள் வாழ்க்கைச் சரித்திரம்" என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூலையும் வெளியிடுவது பெரிதும் பாராட்டுதலுக்குரிய நிகழ்வாகும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.