என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு"
- நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுக்களின் தாக்குதல் தற்பொழுது அதிகமாக காணப்படுகிறது.
- இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருங்குறிச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு நிலக்கடலை வயலில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுக்களின் தாக்குதல் தற்பொழுது அதிகமாக காணப்படுகிறது. இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருங்குறிச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு நிலக்கடலை வயலில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பெருங்குறிச்சி ஊராட்சி தலைவர் திரு மாணிக்கம் இந்த வயல்வெளி முகாமிற்கு முன்னிலை வகித்தார்.
கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தலைமை வகித்து நிலக்கடலை சாகுபடியை பாதிக்கும் பல்வேறு பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கி கூறினார்.
நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழு தாக்கும் பருவம், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி நிலக்கடலை சிவப்பு கம்பளிப்புழுவை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து விளக்கி கூறினார்.
நிலக்கடலை சிவப்பு கம்பளிப்புழு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வதற்கான பிரசுரங்கள் இந்த முகாமில் விநியோகம் செய்யப்பட்டது. வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் பிரதம மந்திரி பயிர் காப்பீடு குறித்தும், வேளாண் கடன் அட்டை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினார்.
முகாமிற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் மற்றும் அட்மா தொழில்நுட்ப உதவி மேலாளர் ஜோதிமணி இணைந்து செய்திருந்தனர்.
- ஜேடர்பாளையம் கரப்பாளை யத்தை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
- இந்த வழக்கு தொடர்பாக அப்பகுதியில் செயல்பட்டு வந்த கரும்பு ஆலையில் பணியாற்றிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் கரப்பாளை யத்தை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அப்பகுதியில் செயல்பட்டு வந்த கரும்பு ஆலையில் பணியாற்றிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
இதனை தொடர்ந்து புதுப்பாளையத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். தொடர் வன்முறையால் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த விவசாயிகளின் தோட்டத்தில் பாக்குமரங்கள், வாழை மரங்கள், மரவள்ளி பயிர்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.
நிவாரண உதவி
இந்த நிலையில் கொலை யுண்ட இளம்பெண் குடும்பத்தாருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிவாரண தொகையை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் கலெக்டர் டாக்டர் உமா ஆகியோர் கபிலர்மலை யூனியன் அலுவலகத்தில் வழங்கினார்கள்.
மேலும் அவரது 2 குழந்தைகளுக்கு வருங்கால வைப்பு நிதியாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்கள். வாழை, பாக்கு மரம் மற்றும் டிராக்டர் எரித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் எம்.பி. சின்ராஜ், தி.மு.க. நாமக்கல் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகந்தி, கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராஜ், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரிஜா, புஷ்பராஜன், பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர்.சோமசேகர், துணைத்தலைவர் முருகவேல், பிலிக்கல் பாளையம் ஊராட்சி தலைவர் மணிமேகலை லோகநாதன், அ. குன்னத்தூர் ஊராட்சி தலைவர் எம்.ஜி.ஆர் என்கிற ரமேஷ், ஆனங்கூர் ஊராட்சி தலைவர் மோகன்ராஜ், வடகரையாத்தூர் ஊராட்சி தலைவர் மஞ்சுளா குணசேகரன் மற்றும் ஊராட்சி செயலர்கள் சசிகுமார், பொன்னுவேல், ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், 5000 பவர் டில்லர்களை விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் வழங்கி தொடங்கி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
- 4 வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.28 லட்சம் மானியத்தில், 33 பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்ககிரி:
சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், 5000 பவர் டில்லர்களை விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் வழங்கி தொடங்கி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அதனையடுத்து வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் சங்ககிரி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், சங்ககிரி, மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.28 லட்சம் மானியத்தில், 33 பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சங்ககிரி உதவி செயற்பொறியாளர் மூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வட்டார ஆத்ம குழு தலைவர்கள் ராஜேஷ் (சங்ககிரி), பரமசிவம் (கொங்கணாபுரம்), பச்சமுத்து (மகுடஞ்சாவடி), நல்லதம்பி (எடப்பாடி) ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பவர் டில்லர்களை வழங்கினார்கள்.
மேலும், உதவி பொறியாளர்கள் செல்வன், கிருஷ்ணமூர்த்தி, வைத்தீஸ்வரி ஆகியோர் அரசு திட்டங்கள், பவர் டிரில்லர்களின் பயன்கள் மற்றும் செயல்முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
இதில் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
- விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம்’’ குறித்து ஆவல்நாய்க்கன்பட்டி கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு விவசாயிகள் பயிற்சி வழங்கப்பட்டது.
- உழவன் செயலி பயன்களை விளக்கமளித்து பதிவேற்றம் செய்தும் நன்றி கூறி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் 'கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம்'' குறித்து ஆவல்நாய்க்கன்பட்டி கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு விவசாயிகள் பயிற்சி வழங்கப்பட்டது. அதுசமயம் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட பல்வேறு முன்னோடித் திட்டங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம் உள்பட பல முன்னோடி நலத்திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது. மேலும் முக்கிய திட்டங்களில் உள்ள இடை வெளியினை குறைக்கும் வகையில் விவசாயிகளின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்திடவும் அவர்க ளின் வருமானத்தை உயர்த்திடவும் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய "மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம்" கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகின்றது என்று விளக்கமளித்து பயிற்சி வழங்கினார். இதில் உடன் உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி துறைசார்ந்த மானியத்திட்டங்களை எடுத்துக்கூறினார். அட்மா திட்ட உழவனின் நண்பன் நந்தகுமார் அட்மா திட்ட செயல்பாடுகள் மற்றும் இக்குழுவின் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறினார். அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர். ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர். கவிசங்கர் ஆகியோர் வருகைபுரிந்த விவசாயி களுக்கு உழவன் செயலி பயன்களை விளக்கமளித்து பதிவேற்றம் செய்தும் நன்றி கூறி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- கரும்பு சாகுபடி குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
- உழவன் செயலி பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் நீடித்த நவீன கரும்பு சாகுபடி குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குனர் கனிமொழி தலைமை வகித்தார். இதில், விதைச் சான்று அலுவலர் நாசர் அலி, உதவி தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர் வேளாண் விற்பனைத்துறை அலுவலர்கள் பங்கேற்று, அரசு துறை சார்ந்த மானிய திட்டங்கள், சந்தேகங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
மேலும், இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி மானியம், ஒரு பருகரணை நடுவதால் ஏற்படும் நன்மைகள், இயந்திரத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், நீர் மற்றும் உர மேலாண்மை, சொட்டுநீர் பாசனத்தின் பயன்கள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
வட்டாரத் திட்ட மேலாளர் பிரபாகரன், உழவன் செயலி பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்தார்.
உதவித் திட்ட மேலாளர் தியாகராஜன் சிறுதானியத்தின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். விதை சான்று அலுவலர் நாசர் அலி, விதைப்பண்ணை அமைத்தல், விதை தேர்வு, ரகங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தார்.
இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- விவசாயிகளுக்கு பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் வழங்க ஒது க்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தாளவாடி வட்டாரத்தில் இக்கலூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது.
ஈரோடு:
வேளாண்மை எந்திர மயமாக்குதலின் உப இயக்கத் திட்டத்தின் கீழ் 2023-24-ம் நடப்பு நிதி யாண்டில் ஈரோடு மாவட்ட த்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் வழங்க ஒது க்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சிறு, குறு பெண் விவசாயிகள், ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவின ருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளது. இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்திற்கு 2023-2024-ம் ஆண்டில் 42 கிராம ஊராட்சியில் இத்திட்டம் செயல்படுத்த ப்பட உள்ளது. அதன்படி அம்மாபேட்டை வட்டா ரத்தில் சிங்கம்பேட்டை, ஓடப்பாளையம், பூதப்பாடி, படவல்கால்வாய், அந்தியூர் வட்டாரத்தில், கெட்டி சமுத்திரம், மூங்கில்பட்டி, பவானி வட்டாரத்தில் பருவாச்சி, வைரமங்கலம், ஆலத்தூர், பவானி சாகர் வட்டாரத்தில் மாதம் பாளையம், நொச்சிகுட்டை, புங்கார்.
கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் நாகதேவம் பாளையம், பெருந்தலையூர், குள்ளம்பாளையம், பாரியூர், நம்பியூர் வட்டாரத்தில் பொலவபாளையம், கடத்தூர், தாழ்குனி, சத்திய மங்கலம் வட்டாரத்தில் குமாராபாளையம், இக்கரை நகமம், புதுப்பீர்கடவூர். டி.என்.பாளையம் வட்டா ரத்தில் கொங்கர்பாளையம், புள்ளப்ப நாயக்கன் பாளை யம், தாளவாடி வட்டாரத்தில் இக்கலூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் செயல்படுத்த ப்படுகிறது.
ஈரோடு வட்டாரத்தில் பிச்சாண்டாம்பாளையம், சென்னிமலை வட்டாரத்தில் ஈங்கூர், குப்பிச்சிபாளையம், முகாசிபுலவன்பாளையம், குட்டப்பாளையம், கொடு முடி வட்டாரத்தில் அஞ்சூர், நஞ்சை கொளாநல்லி. மொ டக்குறிச்சி வட்டாரத்தில் குலவிளக்கு, குளூர், விள க்கேத்தி, பெருந்துரை வட்டாரத்தில் சிங்காநல்லூர், கருக்குபாளையம், பாப்ப ம்பாளையம், பெரிய வில்லாமலை, பொலவ நாயக்கன்பாளையம், பெரிய வீரசங்கிலி ஆகிய கிராம ஊராட்சிகள் தேர்வாகி உள்ளது.
இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மானி யத்தில் பவர்டில்லர் அல்லது களைஎடுக்கும் கருவி பெற உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல விப ரங்களுக்கு உதவி செயற் பொறியாளர், வேளா ண்மை ப்பொறியியல்துறை, ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்ப ங்களை உடனடியாக அலு வலகத்தில் பதிவு செய்து பயனடையலாம் என கலெ க்டர் ராஜகோபால் சுங்கார கேட்டு க்கொண்டுள்ளார்.
- மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தும் மரமாக பனை விளங்குகிறது.
- விவசாயிக்கும் அதிகப்பட்சம் 50 விதைகள், 15 நாற்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குனர் மரகத மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் மாநில மரமும், தமிழர்களின் வாழ்வோடு இணைந்தது பனை மரம். நிலத்தடி நீரை அதிகரித்தும், மண் அரிப்பை தடுத்தும், மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தும் மரமாக பனை விளங்குகிறது.
மண்ணுக்கு உகந்த மரமாக விளங்குவதுடன் அடி முதல் நுனி வரை பயனளித்து வாழ்வாதாரம் தருகிறது.
எனவே பனை சாகுபடியை ஊக்குவிக்க, ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் 30 ஆயிரம் மற்றும் நாற்றுகள் 250 வினியோகம் செய்யப்பட உள்ளது.
ஒவ்வொரு விவசாயிக்கும் அதிகப்பட்சம் 50 விதைகள், 15 நாற்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
விருப்பம் உள்ள விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது அருகே உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவல கத்தை தொடர்பு கொண்டும் பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட பெருங்குறிச்சி கிராமத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கும், மேலும் அனைத்து கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 1 ெஹக்டர் நிலமும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கபிலர்மலை வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம்-மானாவாரி பகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட பெருங்குறிச்சி கிராமத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கும், மேலும் அனைத்து கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயிர்கள் சாகுபடி மற்றும் தீவன பயிர்கள் பயிரிடுவதுடன் கறவை மாடு, தேனீ வளர்ப்பு, மண்புழு உர உற்பத்தி, பழச்செடிகள் வளர்ப்பு ஆகியவற்றுக்கு 50 சதவீதம் மானியம், அதாவது அலகு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 1 ெஹக்டர் நிலமும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கும், முன்பதிவுக்கும் கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு வயது உச்ச வரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டது.
- மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
ஈரோடு:
உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெறும் விவசாயி களின் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தற்போது பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபட்டு வருபவர்கள் முதியவர்களாக மட்டுமே இருப்பதால் விவசாயிகள் பெரும்பாலானோர் பயிர் கடன் பெற முடியாத சூழ் நிலை ஏற்பட்டது.
எனவே பயிர் கடன் பெறுவதற்கு விவசாயிக ளுக்கு வயது வரம்பை தளர்த்த வேண்டும் என விவசாயிகள், விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற கூட்டுறவு த்துறை மானியக் கோரிக்கை யின் போது கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு வயது உச்ச வரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அனைத்து மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
- அங்கக சான்று உதவி இயக்குநர் விதைப்பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார்.
- தரமான சான்று பெற்ற விதைகளை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய பருவத்தில் விதைப்பு செய்வதற்கு தேவைப்படும் தரமான சான்று பெற்ற விதைகளை வழங்கும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அவ்விதைப்பண்ணை கள் அனைத்தும் வளர்ச்சி ப்பருவம், பூ பருவம் மற்றும் முதிர்ச்சி பருவங்களில் விதைச்சான்று அலுவலர்களால் வய லாய்வு மேற்கொ ள்ளப்பட்டு அவ்விதை களின் தரம் உறுதிபடு த்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் பவானி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஓடத்துறை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து வம்பன் 10 சான்று நிலை விதைப்பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் விதைப்பண்ணையின் விதை ஆதாரம், பிற ரக விதைகள் கலப்பு, களை மற்றும் பூச்சிநோய் மேலாண்மை ஆகியவை ஆய்வு செய்ய ப்பட்டு உற்பத்தியாளர் மற்றும் விவசாயிக்கு தரமான சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நு ட்பங்களை வழங்கினார்.
இதேபோல பவானி அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வை யிட்டு விதை இருப்பு விபரம், வயல்மட்ட விதைக்குவியல் அளவு, விதை சுத்திப்பணி, சுத்தி செய்யப்பட்ட விதைக்குவி யல்கள், சிப்பங்களின் எடை, ஈரப்பதம் சரிபார்த்தல் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
அனைத்து விதைச்சான்று நடைமுறை களையும் பின்பற்றி விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகளை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டுமென அதிகாரி களுக்கு உதவி இயக்குநர் மோகனசுந்தரம் உத்தர விட்டார்.
ஆய்வின் போது, விதைச்சான்று அலுவலர் தமிழரசு, உதவி விதை அலுவலர் குருமூர்த்தி, வேளாண்மை அலுவலர் முருகேசன், கண்கா ணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம் கூடச்சேரி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
- மேலும் தீவன வகைகள், மாட்டுத் தீவனத்தில் குறைந்த விலையில் அசோலா மற்றும் அசோலா சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம் கூடச்சேரி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
அசோலாவில் அதிகளவு புரதச்சத்து இருப்பதால் கோழி மற்றும் கால்ந
டைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. அசோலா வளர்ப்பு செயல் விளக்கத்தினை பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில், கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் கலந்து கொண்ட தனியார் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள் செய்து காண்பித்தனர்.
மேலும் தீவன வகைகள், மாட்டுத் தீவனத்தில் குறைந்த விலையில் அசோலா மற்றும் அசோலா சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவீனா, வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ஆகியோர் செய்திருந்தனர்.
இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
- விளை நிலங்களில் வரப்புகள் அல்லது பயிர்களுக்கு இடையில் மரக்கன்றுகள் நடவு செய்ய இலவசமாக வழங்கப்பட உள்ளது.
- மொத்தம் 19,000 மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்ற புதிய வேளாண்மை காடுகள் வளர்ப்பு திட்டத்தில் விளை நிலங்களில் வரப்புகள் அல்லது பயிர்களுக்கு இடையில் அல்லது முழுமையாக மரக்கன்றுகள் நடவு செய்ய இலவசமாக வழங்கப்பட உள்ளது.
கொடுமுடி வட்டாரத்திற்கு சந்தனமரம் 2,150, செம்மரம் 6,400 , ரோஸ்வுட் 1,800, மகாகனி 4,800, பெருநெல்லி 1,600, கடம்பு 100, கடுக்காய் 100, வேங்கை 100, நாவல் 300, மருதம் 100, தான்றிக்காய் 100, இலுப்பை 100, புளியமரம் 200, இலவங்கம் 100, வாகை 150, புங்கம் 500, வில்வம் 100, விளாமரம் 100, எட்டி மரம் 100, தூபமரம் 100 என மொத்தம் 19,000 மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் மரக்கன்று களை இலவசமாக பெறுவதற்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரைஅணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம். கொடுமுடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்து, பரிந்துரை படிவம் பெற்ற பின் அலுவலகத்தில் அறிவிக்கப்படும் நாற்றங்காலில் நேரடியாக சென்று மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா தெரிவித்துள்ளார்.