search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 days work"

    • 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம்
    • பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து நடுவீரப்பட்டு சி.என். பாளையம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து ஒன்றிய தலைவர் வைத்தி லிங்கம் தலைமையில் தீபாவளி பண்டிகையின் போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சம்பளம் வழங்காததால் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட தோடு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டமும் செய்தனர்.மேலும் சம்பளம் வழங்காததால் தீபாவளி பண்டிகை கொண்டாட முடியாத அவல நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தி.மு.க. கவுன்சிலர் குற்றச்சாட்டு
    • அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடந்தது

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் நிர்மலா சவுந்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்வதிர்க்கான் பேட்டை ஊராட்சி ஒன்றிய தி.மு.க கவுன்சிலர் குமார் பேசுகையில்:-

    100 நாள் வேலையில் பல முறைகேடுகள் நடப்பதாக ஆவேசமாக கூறினார்.

    ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் இந்த முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் புருஷோத்தமன், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ரவிச்சந்திரன், சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • 100 நாள் வேலைதிட்ட பணி வழங்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் 100 நாள் வேலை திட்ட பணியை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.

    மேலும் தற்போது 100 நாள் பணி வழங்க கோரியும் நிரந்தரமான கூலி வழங்க கோரியும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஆரணி சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • மேலப்பாட்டத்தில் கடந்த 5 மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை வழங்கவில்லை.
    • எங்கள் பகுதிக்கு 100 நாள் வேலை திட்டத்தை நிரந்தரமாக தர வேண்டும் என மனு அளித்தனர்.

    நெல்லை:

    பாளை அருகே உள்ள மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த 5 மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை வழங்கவில்லை.

    இதனால் எங்களின் வாழ்வா தாரம் பாதிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து எங்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டோம். அப்போது 30 முதல் 40 பேருக்கு மட்டுமே வேலை இருப்பதால் சுழற்சி முறையில் பணி வழங்குவதாக கூறுகிறார்கள்.

    ஆனால் சுழற்சி அடிப்படையில் கூட கடந்த 5 மாதங்களாக எங்கள் பகுதியை சேர்ந்த யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை.

    ஏற்கனவே எங்கள் பகுதியில் விவசாயம் பொய்த்துவிட்டதால் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு 100 நாள் வேலை திட்டத்தை நிரந்தரமாக தர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    • 100 நாள் வேலை திட்டம் குறித்த புகார்களை தெரிவிக்க கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை அணுகலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனி நபர் சார்ந்த பணிகள், சமுதாயம் சார்ந்த கட்டிடப் பணிகள் மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 100 நாட்களுக்கு பணி வழங்கப்பட்டு, திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் தொடர்பான குறைபாடுகள், பணித்தளங்களில் வேலை தொடர்பான புகார்கள், பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பிற புகார்களை பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் இலவச அழைப்பு எண்: 04562-252910 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • கலெக்டரிடம் ஒரு மனுவில் கொடுத்தனர்

    பெரம்பலூர்:

    ஆலத்தூர் ஒன்றியம், நக்கசேலம் ஊராட்சிக்கு உட்பட்ட புது அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் பெரம்பலூர் கலெக்டரிடம் ஒரு மனுவில் கொடுத்தனர். அதில், தங்கள் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டமான நூறு நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 12 நாட்கள் தான் ஊராட்சி நிர்வாகத்தால் வேலை தரப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்களுக்கு அந்த திட்டத்தில் உள்ள நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்"

    100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு கூறினர். #Ruralworkplan

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்துக் குட்பட்ட 10 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர் வேலை பார்த்து வந்தனர்.

    ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இவர்களுக்கு பணி வழங்கவில்லையாம்.

    இது தொடர்பாக 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கூறும் போது, ‘‘எங்களுக்கு வேலை கொடுக்காமல் வேலைக்கு சென்றது போல் பலர் வங்கி கணக்கில் பணம் வரவாகி உள்ளது. இது எப்படி என்று தெரியவில்லை. பின்னர் தொழிலாளர்களுக்கு நூறோ... இரு நூறோ... கொடுத்து விட்டு மீதி பணத்தை அதிகாரிகளே வாங்கி கொண்டனர்’’ என்று புகார் கூறினர்.

    மேலும் இது பற்றி தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் கேட்ட போது, தொழிலாளர்கள் கணக்கில் பணம் எடுக்கப்பட்டு ஜே.சி.பி.க்கு கொடுக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறினார்களாம்.

    எனவே வேலையே தராமல் எப்படி அரசு பணத்தை தொழிலாளர்கள் கணக்கில் செலுத்தப்பட்டது? இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு கூறினர்.

    இது தொடர்பாக சுமார் 500 தொழிலாளர்கள் பவானி சாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரத்துடன் திரண்டு தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் சில தொழிலாளர் பிரதிநதிகளுடன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு கூறினார். #Ruralworkplan

    100 நாள் வேலை கேட்டு கோவில்பட்டியில் இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
    கோவில்பட்டி:

    பணி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நிபந்தனையின்றி 100 நாள் வேலை வழங்க வேண்டும். வேலை கேட்டு மனு அளித்த 15 நாட்களுக்குள் பணி வழங்க வேண்டும். வேலை வழங்காவிட்டால் வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும்.

    பெண்களுக்கு தனி வேலை அளவை தீர்மானிக்க வேண்டும். கூலி ரூ.224-க்கு குறைக்காமல் வழங்க வேண்டும். 100 நாள் வேலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பணிக்கு மாற்றக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.

    கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் சண்முகராஜ், விளாத்திகுளம் தாலுகா மார்க்சிஸ்ட் செயலாளர் புவிராஜ், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் விஜயலட்சுமி, விவசாய தொழிலாளர் சங்க பெண்கள் உப குழுவை சேர்ந்த சுந்தரி, செட்டிகுறிச்சி மாரிச்செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #tamilnews
    ×