search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 percent pass"

    • புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா கலந்துகொண்டு காலாண்டு தேர்வில் 10,12 - ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி பகுப்பாய்வினை மீளாய்வு செய்தார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா கலந்துகொண்டு காலாண்டு தேர்வில் 10,12 - ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி பகுப்பாய்வினை மீளாய்வு செய்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

    அரசுப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியின் வாயிலாக இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு, தலைமை யாசிரியர்கள் வழிகாட்டிட வேண்டும். மேலும் அரசுப்பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதல் 3 இடங்களுக்குள் புதுக்கோட்டை வர அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அன்றாடம் பள்ளியில் இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யக்கூடிய பணிகளை மறக்காமல் பதி வேற்றம் செய்ய வேண்டும். கூடுதல் தேவைப்படும் விலையில்லா பேருந்து பயண அட்டை சார்ந்த தகவல்களை உடனடியாக போக்குவரத்துக்கிளைக்கு அளித்திட வேண்டும். 6- ம் வகுப்பு முதல் காலாண்டுத் தேர்வு தேர்ச்சி சார்ந்த விபரங்களை மீண்டும் சரிபார்த்து சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய் யவேண்டும். 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை எழுதும் மற்றும் வாசிக்கும் திறன் குறைவாக உள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்தி தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படைத்தி றனை உரிய காலத்திற்குள் 100 சதவீதம் அடைய பாடுபட வேண்டும். பள்ளி நலனில் அக்கறையுள்ள முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோரை ஒருங்கி ணைத்து பள்ளியின் வளர்ச்சிக்கு திட்டமிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் 10,12 - ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வில் 80 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகள் ஒவ்வொன்றையும், தனித் தனியாக பாடவாரியாக பகுப்பாய்வு செய்து 100 சதவீதம் தேர்ச்சி பெற ஆலோசனைகள் வழங்கி னார். இந்த மீளாய்வு கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை ரமேஷ், அறந்தாங்கி ராஜேஸ்வரி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவி யாளர்கள் முருகையன், ராஜூ, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குரு.மாரிமுத்து, இளைய ராஜா மற்றும் அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • காசோலை வழங்குதல் மற்றும் மரங்கள் நடும் நிகழ்ச்சி நடந்தது
    • 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு

    அரக்கோணம்:

    மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை (செல்ப்) சார்பில் அரக்கோணம் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மேநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வெற்றி நம் கைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் மற்றும் காசோலை வழங்குதல் மற்றும் மரங்கள் நடும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு செல்ப் அறக்கட்டளை நிறுவனர் ச.வேலாயுதம் தலைமை தாங்கினார். செல்ப் செயலாளர் கோவி.பார்த்திபன் வரவேற்றார். பொருளாளர் ச.கருணாகரன், ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி, உதவி தலைமை ஆசிரியர் முருகன், சாரண சாரணியர் திட்ட அலுவலர் ரஜினிப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.கௌதம் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

    இதைத்தொடர்ந்து கார்பரேட் பயிற்சியாளர் லயன் அமுதா மதியழகன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக ரயில் பயணிகள் சங்கத்தலைவர் நைனாமாசிலாமணி, அன்னை தெரசா கிராம வளர்ச்சி நிறுவன தலைவர் தேவாசீர்வாதம், ஆலோசகர் துரை பாண்டியன், அறம் கல்வி சங்க தலைவர் டாக்டர் கலைநேசன், குளோ ஜேம்ஸ், கிறிஸ்து அறக்கட்டளை அருள்தாஸ் மற்றும் ச.சி.சந்தர், அம்பேத்ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் மற்றும் காசோலை வழங்கியும், 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களை பாராட்டியும் பேசினார். இறுதியாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தோத்திராவதி நன்றி கூறினார்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், 6 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
    • பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், சிங்கனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நி லைப்பள்ளியில், 2022-2023 கல்வியாண்டில், 12-ம் வகுப்பு அரசு பொது த்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்ததையொட்டி பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்டகலெக்டர் பழனி நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச்சா ன்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில், 2022- 2023 கல்வியாண்டில், 12-ம் வகுப்பு அரசு பொது த்தேர்வில், 6 அரசுப்ப ள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற துடன், அதிகப்படியான அரசு ப்பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை எடுத்து ள்ளனர். அந்த வகையில், சிங்கனூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலை ப்பள்ளியில், 12-ம் வகுப்பு பயின்ற 38 மாணவ, மாணவிர்ள் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டியது மிக மகிழ்ச்சியாக உள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கு உறுதுணையாக இருந்து, சிறப்பாக பணியா ற்றிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் (பொறுப்பு) ஹரிதாஸ், திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சிவ சுப்பிரமணியன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், தலைமையாசிரியர் மணிமேகலை, சிங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் கன்னியம்மாள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஆண்டை விட மொத்த தேர்ச்சியில் 2.24 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    • தேர்ச்சி சதவீதத்தில் நாமக்கல் மாவட்டம், மாநில அளவில் 9-ம் இடம் பெற்றுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட, 198 பள்ளிகளை சேர்ந்த 8,852 மாணவர்கள், 9,375 மாணவியர், மாற்று பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 18 ஆயிரத்து 228 பேர் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதினர்.

    அவர்களில் 8,509 மாணவர்கள், 9,160 மாணவியர், ஒரு மாற்று பாலினத்தவர் என மொத்தம் 17 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 96.13 சதவீதம், மாணவியர் தேர்ச்சி 97,71 சதவீதம் ஆகும். மாற்று பாலினத்தவர் தேர்ச்சி 100 சதவீதம் என மொத்தம், 96.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டை விட மொத்த தேர்ச்சியில் 2.24 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், தேர்ச்சி சதவீதத்தில் நாமக்கல் மாவட்டம், மாநில அளவில் 9-ம் இடம் பெற்றுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள 89 அரசு பள்ளிகளில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 4.33 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆதிதிராவிட நலப்பள்ளியில் 93.48 சதவீதம், பழங்குடியினர் நலப்பள்ளியில் 95.69 சதவீதம், சமூக நலத்துறை பள்ளியில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டு மொத்தம் 87 பள்ளிகள் 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதில் அரசு பள்ளிகள் 17 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சியில் 16ம் இடத்தில் இருந்து, இந்த ஆண்டில் 9ம் இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
    • புதுவை புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 251 மாணவர்கள் தேர்வு எழுதினர்

    புதுச்சேரி:

    பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.புதுவை புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 251 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவ ர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பள்ளி பெற்றுள்ளது.

    600 மதிப்பெண்களுக்கு 590 மதிப்பெண்கள் பெற்று பவதாரணி என்ற மாணவி பள்ளியில் முதலிடம் பெற்றார். 589 மதிப்பெண் பெற்று மாணவர் ஆதித்யா 2-ம் இடத்தையும், 588 மதிப்பெண் பெற்று மாணவி சாய் பிரணிதா 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    பள்ளியில் தேர்வு எழுதிய 251 மாணவர்களில் 162 மாணவர்கள் 75 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தனர்.

    தமிழில் மாணவர் பரத் 98, பிரெஞ்சில் மாணவி சுஷ்மிதா 99, சமஸ்கிருதத்தில் மாணவி பிரணிதா 98, ஆங்கிலத்தில் பிருந்தா, கதிரவன் 98, கணிதத்தில் நந்தினிதேவி 99, இயற்பியலில் சுஷ்மிதா 100, வேதியியலில் பிரணிதா 100, கதிரவன் 100, லோகேஸ்வரன் 100, நவ்யா தர்ஷினி 100, பரத் 100, உயிரியலில் கதிரவன் 100, மனோன்மணிலெபேல் 100, அஷ்வந்த் 100, கணிணி அறிவியலில் சுஷ்மிதா 100, சுதர்சன் 100, பிருந்தா 100, ஹரீஷ் 100, தானேஸ்வர் 100, அசீம்அகமது 100, தர்ஷன் 100 மதிப்பெண் பெற்றனர்.

    வணிகவியலில் ஆதித்யா 100, கணக்கு பதிவியலில் பவதாரிணி 100, ஆதித்யா 100, விஷால் 100, தனஸ்ரீ 100, காவியா 100, பொருளாதாரத்தில் பவதர்ஷினி 100, வணிக கணிதத்தில் பவதாரணி 100, ஆதித்யா 100, விஷால் 100, தனஸ்ரீ 100 மதிப்பெற்று சாதனை படைத்தனர்.

    சாதனை படைத்த பள்ளி மாணவர்களை பள்ளி தாளாளர் பிரடெரிக் ரெஜிஸ், மருத்துவ இயக்குனர் ஜீத்தா பிரடெரிக், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா, ஆலோசனைக் குழு உறுப்பி னர்கள், வகுப்பாசி ரியர்கள் எமில், இளவழகன், நடராஜன், வாசுகி, அனுராதா ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
    • தாய் மெட்ரிக் பள்ளியில் 134 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மேட்டுப் பெருமாள் நகரில் உள்ளது. இங்கு பிளஸ்-2 பொதுத்தேர்வை 132 மாணவிகள் எழுதினர்.இதில் 132 மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதமடித்து சாதனை படைத்தனர்.

    முதல் மதிப்பெண் ராஜேஸ்வரி 536, 2-வது மதிப்பெண் வான்மதி 525, 3-வது மதிப்பெண் ஜெயஸ்ரீ 523 பெற்றனர். இந்த சாதனை மாணவிகளை தலைமை ஆசிரியர் ஆஷா, பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர், கல்வி வளர்ச்சி குழுவினர், பொதுமக்கள் பாராட்டினர்.

    வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 97 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதியதில் 93 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் மதிப்பெண் அரவிந்த் 551, 2-வது மதிப்பெண் செந்தில்முருகன் 510, 3-வது மதிப்பெண் கிறிஸ்டோபர் 481 பெற்றனர் என்று தலைமை ஆசிரியர் (பொறுப்பு) விஜய ரங்கன்தெரிவித்தார்.

    பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 68 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதியதில் 61 ேபர் தேர்ச்சி பெற்றனர். இதில் முதல் மதிப்பெண் சாலின் 509, 2-ம் மதிப்பெண் சுபஸ்ரீ 499, 3-ம் மதிப்பெண் கவுசல்யா 464 பெற்றனர் என்று தலைமை ஆசிரியர் லட்சுமணன் தெரிவித்தார்.

    அதேபோல் புஸ்கோ மெட்ரிகுலேசன் பள்ளியில் 80 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 80 பேரும் தேர்ச்சி பெற்றனர். முதல் மதிப்பெண் தினேஷ் 580, 2-ம் மதிப்பெண் ஓவியா 572, 3-ம் மதிப்பெண் ஜெகன் 570. இதில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 8 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் சயின்சில் 2 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், காமர்சில் 1 மாணவர் 100 சதவீத மதிப்பெண்னும் பெற்றனர் என்று முதல்வர் ஞான சிகாமணி தெரிவித்தார்.

    தாய் மெட்ரிக் பள்ளியில் 134 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். முதல் மதிப்பெண் வினித் பாண்டி 585, 2-ம் மதிப்பெண் பிரின்ஸ்ராஜ் 584, 3-ம் மதிப்பெண் சுபாஷினி 579 பெற்றனர். இதில் அக்கவுண்டன்சியில் 5 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 3 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் சயின்சில் 11 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும், வேதியலில் ஒரு மாணவர் 100 சதவீத மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்று தலைமை ஆசிரியர் ஜெகதீசன் தெரிவித்தார்.

    • பள்ளியில் தேர்வு எழுதிய 228 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
    • செல்வகணபதி எம்.பி. பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் புதுவை லாஸ்பேட்டை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதாவது அந்த பள்ளியில் தேர்வு எழுதிய 228 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். 

    மாணவி பிரியதர்ஷினி 600-க்கு 597 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி சந்தியா வைஷ்ணவி 595 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், மதுமிதா 592 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    சாதனை படைத்த மாணவிகளுக்கு விவேகானந்தா கல்வி குழுமத்தின் தாளாளர் செல்வகணபதி எம்.பி. பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து பள்ளியின் தாளாளர் செல்வகணபதி எம்.பி. கூறுகையில், `எங்கள் பள்ளியில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 33 மாணவர்களும், 500-க்கு மேல் 75 மாணவர்களும், 400-க்கு மேல் 68 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

    பொருளாதாரம் பாடத்தில் 5 மாணவர்களும், வணிகவியலில் 13 பேரும், கணக்கு பதிவியலில் 8 பேரும், வணிக கணிதத்தில் 9 பேரும், கணினி பயன்பாட்டு பாடத்தில் 4 பேரும், கணினி அறிவியலில் 7 பேரும், வேதியியல் பாடத்தில் 8 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    சாதனை படைத்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

    • பெரும்பாறை மலைக்கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஜி.டி.ஆர். மேல்நிலைப்பள்ளி உள்ளது.
    • இப்பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம், 10-ம் வகுப்பில் 96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி பெரும்பாறை மலைக்கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஜி.டி.ஆர். மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பொதுத்தேர்வில் 12ம் மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்ப–ட்டது.

    இதில் 12ம் வகுப்பு 100 சதவீதம் 10ம் வகுப்பு 96சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியைகளுக்கு மலை க்கிராம பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    புதிய கல்வி ஆண்டில் இதே போல் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • திருவெண்ணைநல்லூர் போன் நேரு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கபட்டது.

    விழுப்புரம் :

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் போன் நேரு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புஷ்பஸ்ரீ என்ற மாணவி 492 /500 மதிப்பெண்களை பெற்று முதலிடத்திலும் மகா என்ற மாணவி 488 மதிப்பெண்களைப் பெற்று 2-ம் இடத்திலும் தஷ்னி என்ற மாணவி 485 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்திலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.

    பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மகேஸ்வரன் என்ற மாணவன் 539 /600மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்திலும் அருண்குமார் என்ற மாணவர் 525 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்திலும் ராம்குமார் என்ற மாணவர் 513 என்றும் மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

    இப்பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு போன்நேரு மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் வாசுதேவன், பள்ளி முதல்வர் விஜயலட்சுமி வாசுதேவன் ஆகியோர் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    • 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவில் சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி. பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
    • அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி :

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அருகே சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி.மேல்நிலை பள்ளியில் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.3 சதவீத மாணவ மாணவிகளும்,10-ம் வகுப்பில் 100 சதவீத மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பள்ளியில்12-ம் வகுப்பில் தேர்வு எழுதிய 140 பேரில் 139பேர் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதில் கண்மணி 579 மதிப்பெண்களும் மோகனா 575 மதிப்பெண்களும் மானசா ஸ்ரீ 574 மதிப்பெண்களும், ஆஷிகாபிலா 572 மதிப்பெண்களும் பெற்றனர். 36 மாணவர்கள் 500க்கு மேல் மதிப்பெண்களும், மானசாஸ் ஸ்ரீ வணிகவியல் பாடத்தில் 100 மதிப்பெண்ணும், குணசீலன் கணினி பயன்பாட்டில் 100 மதிப்பெண்களும் பெற்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 120 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். இதில் ஓவியா என்ற மாணவி 488 மதிப்பெண், பார்த்தசாரதி 487 மதிப்பெண்களும் ,ஹரிபிரசாத் 482 மதிப்பெண்களும் பெற்றனர். 44 மாணவ மாணவிகள் 400 மதிப்பெண்கள் பெற்றனர். கணிதத்தில் 5 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் ஒரு மாணவரும் 100 மதிப்பெண்கள் பெற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் தமிழரசி, செயலாளர் சுஜாதா, பள்ளியின் முதல்வர் திருவேங்கடம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஸ்ரீமுஷ்ணம் தவஅமுதம் பள்ளி 14 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
    • இந்த பள்ளியில் 203 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர்.

    கடலூர்:

    ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 203 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். தற்ேபாது வெளியான தேர்வு முடிவுகளில் 203 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளி தொடர்ந்து 14 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை புரிந்துள்ளது. இந்த பள்ளி மாணவி பி.பூஜா 585 மதிப்பெண்ணுடன் முதலிடத்தையும், மாணவிகள் டி.நிரஞ்சனா, எஸ்.ஓவியா ஆகியோர் 582 மதிப்பெண்களுடன் 2-ம் இடத்தையும் ஐஸ்வர்யா, ஏ.மணிபாலன், வி.ஆனிஜெர்லின் ஆகியோர் 575 மதிப்பெண்களுடன் 3-ம் டத்தையும் பிடித்தனர்.

    மேலும் வேதியியலில் 9 பேரும், கணினி அறிவியலில் 9 பேரும் உயிரியலில் 2 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முதல்வர் ஆர்.புனிதவள்ளி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். பள்ளியின் நிறுவனரும் தாளாளருமானஎம்.எஸ்.செங்கோல் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் மாணவ மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தேர்வு எழுதிய 203 மாணவர்களில், 95 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேலும், 24 பேர் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 6 பேர் 575 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 238 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. #Plus2Result #HSCResult #Plus2100%Pass
    சென்னை:

    பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 9,07,620. பள்ளி மாணாக்கராய் தேர்வெழுதியோர் 8,60,434. மாணவியரின் எண்ணிக்கை 4,60,255. மாணவர்களின் எண்ணிக்கை 4,00,179.

    பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7,98,613. தொழிற்பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 61,821.

    ஒட்டுமொத்தத்தில் 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 94.1 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.7 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் மாணவர்களைவிட 6.4 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 6,754. இதில் 1907 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 2574 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 238 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.


     
    இதேபோல் மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம், கடந்த 4 ஆண்டுகளாக தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்ச்சி பெற்ற மாணவர்கள்  உள்ளிட்ட பல்வேறு பகுப்பாய்வு விவரங்களை http://www.dge.tn.nic.in/hscresanalysis.pdf என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். #Plus2Result  #HSCResult #Plus2100%Pass
    ×