search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 killed"

    • நேற்று மாலை பெருமா ள்மலைக்கு இவர்கள் 3 பேரும் ஒரு வேனில் வந்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
    • பி.எல்.செட் பகுதியில் வேன் திடீரென நிலைதடு மாறி 200 பள்ளத்தில் கவிழ்ந்தது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகில் உள்ள வடகவுஞ்சி ஜீவா நகரை சேர்ந்தவர் கமல நாதன் (வயது50). இவரது மகன்கள் ராபட்சாலமன் (28), யோவான் (26). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது.

    நேற்று மாலை பெருமா ள்மலைக்கு இவர்கள் 3 பேரும் ஒரு வேனில் வந்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை யோவான் ஓட்டிச் சென்றார். பி.எல்.செட் பகுதியில் வேன் திடீரென நிலைதடு மாறி 200 பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேன் சுக்குநூறாக உடைந்து உள்ளே இருந்த கமலநாதன் மற்றும் ராபட்சாலமன் ஆகியோர் சம்பவ இடத்திேலயே உயிரிழந்தனர். காயம் அடைந்த யோவான் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து கொடை க்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
    • அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் மாண்டூர் பஸ் நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத நபர் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையை நோக்கி சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்ஸ்சில் அடையாளம் தெரியாத நபர் பலியானார். அதே சாலையில் திருச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். மாண்டூர் உர நிறுவனம் அருகில் சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரி யாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்தி லேயே தலை நசுங்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெண்ணை நல்லூர் போலீசார் இவ்விரு விபத்துகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் அண்ணன் தங்கை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே உள்ள காட்டுப் புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27).

    இவரது உறவுமுறை சகோதரி ராஜேஸ்வரி(22). இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் நாகர்கோவிலில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டனர்.

    அவர்கள் துவரங்காடு பகுதியில் வந்து கொண்டி ருந்த போது அந்த வழியாக வேன் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மணிகண்டன் மற்றும் அவரது தங்கை ராஜேஸ்வரி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி மணிகண்டன்,ராஜேஸ்வரி மீது மோதியது. இதில் ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மணிகண்டனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வரும் வழியிலேயே மணிகண்டனும் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பிணமாக கிடந்த ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் அண்ணன் தங்கை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக்கு காரணமான வேன் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 
    • பரத்தின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாடு இழந்து விபத்துக்குள்ளானது.
    • வெங்கடேசலு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானார்.

    கோவை,

    திண்டுக்கல் அருகே உள்ள வேடச்சந்தூரை சேர்ந்தவர் செந்தில்குமார். பைனான்சியர். இவரது மகன் பரத் (வயது 21). இவர் கோவை மயிலேரிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று பரத்துடைய நண்பரான குமரேசன் என்பவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லை. எனவே பெட்ரோல் போட செல்வதற்காக பரத் தனது மோட்டார் சைக்கிள் மூலம் குமரேசன் மோட்டார் சைக்கிளை காலால் மிதித்து தள்ளியபடி சென்று இருந்தார்.மோட்டார் சைக்கிள் ஒத்தகால்மண்டபம் - ஒக்கிலிபாளையம் ரோட்டில் சென்ற போது பரத்தின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த கம்பி வேலி, கல்லில் மோதி நின்றது. இதில் அவர் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பரத்தை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பரத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பீளமேடு அருகே உள்ள நேருநகரை சேர்ந்தவர் வெங்கடேசலு (75). சம்பவத்தன்று இவர் கோவை- காளப்பட்டி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவ ரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையத்திற்கு சென்றனர்.
    • 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் ரோகித்(வயது25). தச்சர் தொழிலாளர். வீரபாண்டி சக்தி நகரை சேர்ந்தவர் அருளானந்தம்(27).

    இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இன்று அதிகாலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையத்திற்கு சென்றனர்.

    பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரோகித் ஒட்டி வந்தார்.

    மோட்டார் சைக்கிள் சின்னமத்தம்பாளையம் பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஒடியது.

    சிறிது நேரத்தில் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும், அருகே இருந்த கம்பியில் விழுந்ததால் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கார் மோதி, மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி பலியாயினர்.
    • விபத்து, 2 பேர் பலி Accident, 2 killed

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது60). இவரது மனைவி கஸ்தூரி (54). இவர்கள் தீயனூரில் நடைபெறும் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    அவர்கள் தீயனூர் விலக்கு பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார் மோதியது.

    இதில் படுகாயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி பொதுமக்கள் மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பலியான ராஜாமணி, கஸ்தூரி உடல்களை மீட்டுபிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மோதிய காரை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற கணவன்-மனைவி விபத்தில் பலியான சம்பவம் மிளகனூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 3 பேரும் புள்ளட்டில் நேற்று இரவு அரசூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
    • மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வினோத் (வயது 35), மோகன் (23), பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜய் (23). இவர்கள் நண்பர்கள் ஆவர். இவர்கள் 3 பேரும் புள்ளட்டில் நேற்று இரவு அரசூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். மணம்தவழ்ந்த புத்தூர் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோகன், வினோத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விஜய் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் விஜயை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமானதால் அவர் உடனடியாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு விஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்தனர். விபத்தில் பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • மின்னல் தாக்கி 2 பேர் பலியானர்
    • ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் மின்னல் பாய்ந்து பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கீழப்பழுவூர் அருகேயுள்ள வாரணவாசி, மல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன்(வயது40). இவருக்கு சரோஜா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.இந்நிலையில், இவர் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்தபோது, இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அன்பரசன் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் காவல் துறையினர், உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    இதே போல், செந்துறை அடுத்த தளவாய் கிராமத்தில் பெய்த மழையில், அப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மாலைமணி என்பவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஈச்சங்காடு கிராமத்தில் மின்னல் தாக்கியதில் பலத்தகாயமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் பெண்ணடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இருச்சம்பவங்கள் குறித்து தளவாய் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • பன்றிகள் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 விவசாயிகள் பலியானார்கள்.
    • இளவரசன் பலத்த காயம் ஏற்பட்டு வேதனையால் அலறி துடித்தார்.

    விழுப்புரம் ஆக.10-

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா எனதரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 45) பட்டு ரோசா (45). வளவனூர் அருகே சின்ன குச்சிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளவரசன் (38) இவர்கள் 3 பேரும் விவசாய பணியாளர்கள். இவர்கள் 3 பேரும் புதுவை மாநிலம் பகண்டை பகுதியில் கரும்பு வெட்டுவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.புதுவை அருகே வளவனூர் காவல் எல்லைக்குட்பட்ட கூட்ரோ டு பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது கூட்ரோடு அருகே சாலையின் குறுக்கே பன்றி களின் கூட்டம் சென்றது. இதை சிறிதும் எதிர்பாராத மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்த ராமமூர்த்தி கண்ணிமைக்கும் நேரத்தில் பன்றிகள் மீது மோதினார். இதில் மூவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே ராமமூர்த்தி, பட்டுரோஜா ஆகியோர் இறந்தனர். இளவரசன் பலத்த காயம் ஏற்பட்டு வேதனையால் அலறி துடித்தார்.

    இதனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து வளவனூர் போலீஸ் நிலைய த்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்று படுகாயம் அடை ந்த இளவரசனை மீட்டு விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் அரசு கலைக் கல்லூரியில் ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். உயிரிழந்த ராமமூர்த்தி, பட்டு ரோஜா ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    செய்யாறு அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் தாத்தா, பேரன் பலியானார்கள்.

    வெம்பாக்கம்:

    காஞ்சிபுரம் அடுத்த வையாவூரை சேர்ந்தவர் இளங்கோ (வயது 33). இவரது மனைவி சுகன்யா (30). இவர்களுக்கு விஷ்வா (8), என்ற மகனும், நிலா (5), கமலி (3) என மகள்கள் உள்ளனர்.

    இளங்கோவின் சித்தப்பா குழந்தைவேலு (60), அவரது மனைவி புஷ்பா ஆகியோர் இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த மாமண்டூரில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்திற்காக காரில் புறப்பட்டு வந்தனர். காரை இளங்கோ ஓட்டி வந்தார்.

    மாமண்டூர் அருகே உள்ள 3 கண் பாலத்தில் கார் வந்த போது பெரணமல்லூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கம்பெனி வேனும், இளங்கோ ஓட்டிச் சென்ற காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

    வேன் மோதிய வேகத்தில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. காரின் இடிபாடுகளில் சிக்கி குழந்தைவேலு, விஸ்வா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இளங்கோ, சுகன்யா, நிலா, கமலி, புஷ்பா ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வெம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


    சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள துலுக்கன்குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பட்டாசு தயாரிப்பு அறை மிகவும் சேதமடைந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம் அருகே மணல் கடத்திய டிராக்டர் மோதி தந்தை மகன் பலியானதையடுத்து டிரைவரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள பள்ளூர் காலனியை சேர்ந்தவர் ரஜினி (வயது 35) கூலி தொழிலாளி. இவருக்கு ஆகாஷ் (7), தினேஷ் (5). 2 மகன்கள் உள்ளனர். 3 பேரும் நேற்று இரவு பள்ளூர் மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே மணல் கடத்தி வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ரஜினி மற்றும் தினேஷ் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தனர். ஆகாஷ் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனையடுத்து டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து தகவலறிந்த நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் உடல்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    தகவலறிந்த ரஜினியின் உறவினர்கள் அரக்கோணம் காஞ்சிபுரம் செல்லும் சாலையில் நள்ளிரவு மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், டி.எஸ்.பி.விஜயகுமார், தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இந்த பகுதியில் மணல் திருட்டு அதிகளவில் நடைபெறுகிறது இதன் காரணமாக பல உயிர்சேதம் ஏற்படுகிறது.

    எனவே மணல் கடத்தலை தடுத்து ரஜி சாவுக்கு காரணமான டிராக்டர் டிரைவரை கைது செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கூறினர்.

    விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் ராஜேஷ் (30) மற்றும் டிரைவர் சதீஷ் (29) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×