என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "2nd marriage"
- சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
- ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சூர்யா,கார்த்தி,விக்ரம், பாரதிராஜா,மணிரத்னம் ,விக்னேஷ் - நயன்தாரா, உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.
பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார்.
இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் நடந்தது.சில பிரச்சினைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2- வது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.ஏப்ரல் 15 - ந்தேதி அன்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி திருமண பணிகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டார்.பல முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கினார். மேலும் திருமண விழாவை தடபுடலாக நடத்த ஏற்பாடு செய்தார்
இந்நிலையில் இன்று (15- ந்தேதி) சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சூர்யா,கார்த்தி,விக்ரம், விஷால், அர்ஜுன் இயக்குனர்கள் பாரதிராஜா,மணிரத்னம் -சுஹாசினி, கே. பாக்யராஜ்,பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஹரி - ப்ரிதா ஹரி, விஷ்ணு வர்தன் - அனுவர்தன், விக்னேஷ் சிவன் - நயன்தாரா, ரவி குமார்,
நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் நாசர் - கமிலா நாசர், ஜீவா,சித்தார்த், நடிகை அதிதி ராவ், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, ஜெயந்திலால் காடா, ஏ.எம்.ரத்னம்,தில் ராஜு, ஐசரி கணேஷ்,ராஜசேகர்,திருப்பதி பிரசாத், இசையமைப்பாளர் ஹாரில் ஜெயராஜ்,உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.
மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர்கள் லிங்குசாமி,அட்லி, வசந்த பாலன், நடிகர் பரத், ஆகியோர் வரவேற்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வருகிற 15- ந்தேதி ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடை பெற உள்ளது.
- இதற்கான வேலைகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார்.
இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் நடந்தது.
சில பிரச்சினைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2- வது திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது.
இந்நிலையில் வருகிற 15- ந்தேதி ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடை பெற உள்ளது. இதற்கான வேலைகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.பல முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கி திருமண விழாவை தடபுடலாக நடத்த ஷங்கர் திட்டமிட்டு உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2-வது திருமணம் செய்து கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய திருப்பூர் வாலிபர்-உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மாப்பிள்ளை வீட்டாருக்கு 6½ பவுன், ரூ.20 ஆயிரம் ரொக்கம் சீர் கொடுத்துள்ளனர்.
விருதுநகர்
திருத்தங்கல் திருவள்ளூர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரெஜினாமேரி. இவருக்கும், திருப்பூரை சேர்ந்த செல்வமணி என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டாருக்கு 6½ பவுன், ரூ.20 ஆயிரம் ரொக்கம் சீர் கொடுத்துள்ளனர்.
திருமணத்திற்கு பின் கணவர் வீட்டில் ரெஜினா மேரி வசித்து வந்தார். இந்த நிலையில் பெற்றோர் வீட்டில் கூடுதலாக ரூ.1 லட்சம் வாங்கி தரவேண்டும் என கேட்டு ரெஜினா மேரியை, கணவர் துன்பு றுத்தி வந்ததாக கூறப்படு கிறது.
அவருக்கு உடந்தை யாக தாய் பொன்னுத்தாய், சகோதரிகள் கலையரசி, சந்திராதேவி, உறவினர் திருத்தங்கல் லலிதா உள் ளிட்டோர் ரெஜினா மேரியிடம் கூடுதல் வரதட் சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் செல்வ மணிக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ரெஜினா மேரி சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தனக்கு நேர்ந்த துன்புறுத்தல் குறித்து மனு செய்தார். கோர்ட்டு உத்தர வின்பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீ சார் செல்வமணி மற்றும் உறவினர்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவர் 2-வது திருமணம் செய்ததால் விபரீதம்
- தலைமறைவான மாமியாரை தேடி வருகின்றனர்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட் டம் அரக்கோ ணத்தை அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 24).
இவரும் மேல்பாக் கம் கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன் (26) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு ஸ்டீபனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் ராஜேஸ்வரி தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்தநிலையில் ஸ்டீபனுக்கு அவரது பெற்றோர் 2-வது திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி வாழப் பிடிக்கவில்லை என்றும் கணவர் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்வதை ஏற்க முடிய வில்லை எனவும், பெற்றோருக்கு கஷ்டத்தை கொடுத்ததாக கூறி எழுதி வைத்து விட்டு வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலைக்கு ராஜேஸ்வரியின் கணவர் , மாமியார், மாமனார் தான் காரணம் என ராஜே ஸ்வரியின் தாயார் மகாலட்சுமி போலீசில் புகார் அளித்தார்.
அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையைத் தொ டர்ந்து ராஜேஸ்வ ரியின் கணவர் மற்றும் மாமியார்,மாமனார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராஜேஸ்வரியின் கணவர் ஸ்டீபன் மற்றும் மாமனார் செல்லையா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான மாமியார் குமாரியை தேடி வருகின்றனர்.
- இளம்பெண் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
- 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை,
கோவை வடமதுரை அருகே உள்ள கவுண்டன் புதூரை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:
நான் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது கணவர் வருமான வரித்துறையில் அதிகாரியாக வேலைபார்த்து வருகிறார். எங்களுக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் எனது கணவர் பணம் மற்றும் நகைகள் வரதட்சணையாக கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். மேலும், அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த இளம் பெண்ணை அவர் 2-வதாக திருமணம் செய்துள்ளார்.
என்னுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். எனவே என்னை ஏமாற்றி 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் வருமான வரித்துறை அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை கோரி மனைவி தர்ணா போராட்டம் நடத்தினார்.
- அருண்குமார் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
ராமநாதபுரம்
முதுகுளத்துார் கந்தசாமிபுரம் காலனியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி லதா (25). இவர் ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து சிறிது நேரம் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:-
அருண்குமாரை காதலித்து கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்தேன். ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவர் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை கேட்டு தொல்லை செய்தார். அதன் பிறகு நான் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றேன். அப்போது அருண்குமார் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இது குறித்து கேட்டால் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு கொலை மிரட்டல் விடுகின்றனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
- கணவன் சிவராமன் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வழக்குநிலையில் உள்ளது.
- சிவராமன் உட்பட 8 பேர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் அடுத்த ஏ.புதூர் கிராமத்தை சேர்ந்த வர் சிவராமன். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழி யராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி (31). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்குஒரு மகன் உள்ளான். இவர் களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். கணவன் சிவராமன் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வழக்குநிலையில் உள்ளது.
இந்நிலையில் சிவராமன் தனது உறவினர் பெண்ணான சிறு தொண்ட மா தேவியைசேர்ந்த சூர்யா வை (30 )கடந்த சில நாட்க ளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது விவாகரத்து பெறாமல் 2-வது திருமணம் செய்து கொண்ட கணவர் சிவராமன் (35), அவரது தந்தை மூர்த்தி ராமன், தாயார் மகாலட்சுமி (55), அண்ணன் தணிகைவேல் (40),உள்ளிட்ட 8 பேர் மீது பண்ருட்டி மகளிர்போலீஸ் நிலையத்தில் பிரியதர்ஷினி புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, பிரியதர்ஷினியின் கணவன் சிவராமன் உட்பட 8 பேர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- வரதட்சணையாக 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லியை சேர்ந்தவர் காயத்ரி(வயது26). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் எனக்கும், உறவினர் பிரியதர்சன் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
வரதட்சணையாக 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. பிரியதர்சன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். இதனால் நான் எனது தாயார் வீட்டுக்கு வந்து விட்டேன்.
இந்த நிலையில் எனது நகையை விற்று கார் வாங்கியதோடு பிரியதர்சன், சிவானந்த லட்சுமி என்பவரை 2-வது திரும ணம் செய்துள்ளார். இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக உள்ளனர். எனவே இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சம்பந்தப் பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பிரியதர்சன், அவரது பெற்றோர் பரமசிவம்-செல்வி, சகோதரர் பிரசன்ன குமார் உள்பட 8 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீ சார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபரை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- அப்போது சந்தனமாரியப்பன் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள வடகரை நயினாபுரம் காலனியை சேர்ந்தவர் சுடர்கொடி(வயது23). இவருக்கும் செந்தட்டி யாபுரத்தை சேர்ந்த சந்தனமாரியப்பன்(26) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மகன் உள்ளான். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சுடர்கொடி தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், கடந்த 2019-ம் ஆண்டு எனது கணவர் கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதோடு என்னையும், குழந்தையையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் வேலுசாமி- லட்சுமி இருந்தனர்.
இதையடுத்து நான் எனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டேன். சம்பவத்தன்று திரும ணத்தின் போது எனக்கு அணிவித்த நகையை கேட்க சென்றேன். அப்போது சந்தனமாரியப்பன் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவர் எனக்கு தெரியாமல் அவர் 2-வது திருமணம் செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் விசாரணை நடத்தி சந்தனமாரியப்பன், அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
- சரியாகி விடும் என நம்பிகை தெரிவித்தனர்.
- கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை,
கோவை போத்தனூரை சேர்ந்தவர் ஆசிம் (வயது 28). இவர் கோவை மேற்கு அைனத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கும் சிவகங்கையை சேர்ந்த வசீம் அக்ரம் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது எனது பெற்றோர் 50 பவுன் தங்க நகைகள், பாத்திரங்கள் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்தனர்.திருமணமான 2 நாட்களுக்கு பிறகு எனது கணவர் என்னிடம் சரியாக பேசாமல் இருந்து வந்தார். இதுகுறித்து நான் எனது மாமனார்- மாமியாரிடம் கூறினேன். அதற்கு அவர்கள் எல்லாம் சரியாகி விடும் என நம்பிகை தெரிவித்தனர்.
இந்த நிலையில் எனது கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதனை பற்றி நான் கேட்டால் சரியாக பதில் கூறாமல் இருந்து வருகின்றனர்.இதனால் நான் கடந்த சில நாட்களாக மனவேதனை அடைந்து வருகிறேன். எனவே விவாகரத்து வாங்காமலும், எனக்கு தெரியாமலும் 2-வது திருமணம் செய்து கொண்ட எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசார் வசீம் அக்ரம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
- 2-வது திருமணம் செய்து தனியாக குடித்தனம் நடத்தி வருவது தெரியவந்தது.
கோவை,
கோவை காளப்பட்டி ரோடு நேரு நகரை சேர்ந்தவர் அபர்ணா (வயது 33). இவரது கணவர் ஹ ரிபிரசாத் (37). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார்.இந்த நிலையில் அபர்ணா கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். இதில் கூறியிருப்பதாவது:-திருமணத்தின் போது எனது பெற்றோர் 25 பவுன் நகையை வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்தனர். வீடு கட்ட மற்றும் செலவுக்கு என அந்த 25 பவுன் நகையை எனது கணவர் ஹரிபிரசாத் அடகு வைத்தார். பின்னர் கூடுதல் நகை கேட்டு கொடுமை படுத்தி வந்தார்.
இது குறித்து கேட்டபோது எனது கணவர் ஹரிபிரசாத், என்னை தாக்கினார். மேலும் கணவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் சந்தேகமடைந்த நான், விசாரித்தேன். அப்போது எனது கணவர் ஹரிபிரசாத் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 42 வயது பெண்ணை 2-வது திருமணம் செய்து தனியாக குடித்தனம் நடத்தி வருவது தெரியவந்தது. இதற்கு கணவரின் தந்தை செல்வராஜ் (65), தாய் கமலம் (63) ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனவே எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து புகாரின் பேரில், போலீசார் அபர்ணா வின் கணவர் ஹரிபிரசாத், மாமனார் செல்வராஜ், மாமியார் கமலம், ஹரிபிரசாத்தின் 2-வது மனைவி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உற்றார், உறவினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது.
- உயிர் தந்த தாயின் தனிமை துயரை துடைத்த மகளின் துணிச்சலான இந்த முடிவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
திருவனந்தபுரம் :
கேரளாவில் 59 வயது தாய்க்கு 2-வது திருமணம் செய்து அழகு பார்த்த மகளை பலரும் பாராட்டி வருகிறார்கள். அவர் தனது தாயின் தனிமையை போக்க விரும்பியதாக கூறினார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன் (வயது 59). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. இருவருக்கும் திருமணமான நிலையில், ரதிமேனன் தனிமையில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த ரதிமேனனின் மகள் பிரசிதா, கண்டிப்பாக தனது தாயாருக்கு ஒரு துணை வேண்டும் என்று சிந்திக்கத்தொடங்கினார். இதற்காக தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று அவர் முடிவு செய்தார். இதற்காக தகுந்த மணமகனை தேட ஆரம்பித்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த திவாகரன் (63) என்பவர்தான் தனது தாய்க்கு ஏற்ற துணை என்று பிரசிதா முடிவு செய்தார். 2 மகள்களுக்கு தந்தையான திவாகரன் வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
அவரிடம் தனது தாயின் தனிமை பற்றியும், அவருக்கு ஒரு துணை வேண்டும், அது நீங்களாக இருந்தால் மிகவும் நல்லது என்று உருக்கமாக விளக்கிகூறினார் பிரசிதா.
இதனை புரிந்து கொண்ட திவாகரன் 2-வது திருமனத்திற்கு சம்மதம் தெரிவித்தார். திவாகரனின் மனநிலை குறித்து அவரது 2 பெண்குழந்தைகளிடமும் பிரசிதா பேசினார். அவர்களும் தந்தையின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
இதை தொடர்ந்து, தனது தாய் ரதிமேனனின் சம்மதத்தை பெற்ற அவர் திருச்சூர் திருவம்பாடி கோவிலில் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்தார். அதன்படி உற்றார், உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி முடித்தார். உயிர் தந்த தாயின் தனிமை துயரை துடைத்த மகளின் துணிச்சலான இந்த முடிவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த பிரசிதா கூறியதாவது:-
எனது அம்மாவுக்கு நாங்கள் 2 பெண் குழந்தைகள். அப்பா உயிரோடு இருக்கும்போதே எங்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நாங்கள் அவரவர் கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் அப்பா திடீரென்று மரணம் அடைந்ததால் அம்மா தனிமையானார். எங்களுக்கும் கணவர், குழந்தைகள் என ஆனதால் அம்மாவை அடிக்கடி நேரில் வந்து பார்க்க முடியவில்லை. அம்மாவின் தனிமை நிலையை போக்க வேண்டும் என்று யோசித்தேன். அதற்காகத்தான் இந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்