என் மலர்
நீங்கள் தேடியது "5 arrest"
கோவை:
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள காந்திமா நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 27). கட்டிட தொழிலாளி.
இவருக்கும் பக்கத்து வீதியை சேர்ந்த மணி, புலியகுளத்தை சேர்ந்த விக்கு சண்முகம் ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. அசோக்குமார் பீளமேட்டை சேர்ந்த உன்னி, சிவபாலன், ரித்தீஷ் ஆகியோருடன் நண்பராக பழகி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்கு சண்முகம், மணி ஆகியோர் கட்டபஞ்சாயத்து செய்தனர். இதனை அசோக்குமார் தனது நண்பர்களாக உன்னி, சிவபாலன், ரித்திஷ் ஆகியோருடன் சேர்ந்து கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்தநிலையில் அசோக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிவாளுடன் தனது புகைப்படத்தை பதிவிட்டார். புகைப்படத்துடன் எங்க ஏரியாவில் வந்து போட்டு பாருங்க என பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த மணி, விக்கு சண்முகம் ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர். எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.
சம்பவத்தன்று அசோக்குமார் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். இதனை பார்த்த விக்கு சண்முகம் தனது நண்பர்களாக மணி, சிவா, பாபு, அமர்நாத் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் அரிவாள், கத்தியுடன் 2 மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்தனர்.
மது குடித்த பின்னர் அசோக்குமார் தனது வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவரை 3 மோட் டார் சைக்கிளில் 5 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து சென்றனர். அருகில் சென்றபோது விக்கு சண்முகம் தான் வைத்து இருந்த அரிவாளை எடுத்து அசோக்குமாரின் தலையில் வெட்டினார். இதில் நிலை குலைந்த அவர் கீழே சரிந்தார்.
பின்னர் கும்பல் ஒன்றாக சேர்ந்து மார்பு, தலை, கால் ஆகியவற்றில் வெட்டினர். பின்னர் அங்கு இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய அசோக்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். மேலும் முன் விரோதத்தில் தொழிலாளியை வெட்டி கொலை செய்தவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்று இரவு இந்த கொலை வழக்கில் தொடர்பு டைய விக்கு சண்முகம் உள்பட 5 பேரை சரவணம் பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாடு முழுவதும் நாளை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு மது பானங்களை வாங்கி விற்பனை செய்ய முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளது. அதனை தொடர்ந்து பெரிய நாயக்கன்பாளையம், பேரூர், தொண்டாமுதூர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் மதுபானங்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த பூமிநாதன் (38), மதுக்கரை ராமலிங்கம் (34), நீலாம்பூர் குமார் (26), பெரிய நாயக்கன் பாளையம் தமிழரசன் (27), செம்மேடு மந்திரப்பன் (67) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 68 பாட்டில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவையில் இருந்து ரெயில் மூலம் கொல்லத்துக்கு ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக பாலக்காடு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அவர் போலீசாருடன் வனவக்கோடு ரெயில் நிலையம் சென்றார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வட மாநிலத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு ரெயில் வந்தது.
ரெயில்வே போலீசார் உதவியுடன் அந்த ரெயிலில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பெட்டியில் சந்தேகப்படும் படியாக 5 பேர் இருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார்கள்.
அவர்களது மேல் சட்டையில் சோதனை செய்த போது சட்டை போல் உள்ளே பனியன் அணிந்து இருந்தனர். அதில் ரூ. 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்தது. ரூ. 2 கோடி பணத்தை அவர்கள் பனியனில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
இது ஹவாலா பணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் கொல்லத்தை சேர்ந்த சுரேந்திரன், விவேக், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பதாம் சிங், பிரமோத், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரபாகரன் என்பது தெரிய வந்தது.
இந்த பணத்தை கோவையில் இருந்து கொல்லத்துக்கு கடத்தி சென்றதாக கைதானவர்கள் தெரிவித்தனர். இதற்கு முன் பல முறை இவர்கள் ஹவாலா பணத்தை கேரளாவுக்கு கடத்தி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களிடம் எப்படி பழக்கம் ஏற்பட்டது? கோவையில் யாரிடம் இருந்து இந்த பணத்தை வாங்கி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #HawalaMoney
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் பணம் வைத்து சூதாடிய ஈரோடு மாவட்டம் பொய்க்குற்றம் சாட்டி கணவருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து எஸ்.பி. சக்தி கணேசன் உத்தரவின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஈரோடு வீரப்பன்சத்திரம் அதியமான் வீதியில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தது தெரியவந்தது இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் சுந்தரமூர்த்தி (40), குமார் (42), பழனிச்சாமி (48), தன்சுக் (44), தங்கராஜ் (40) என தெரியவந்தது. இவர்களிடமிருந்து சீட்டு கட்டுகளும் ரூ.78 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
திருவள்ளூர் அருகே உள்ள வெள்ளரிக்குளம் கூட்டு சாலையில் 5 வாலிபர்கள் ஒரு மினி லாரியை மடக்கி பிடித்து தகராறில் ஈடுபட்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விபத்து நடந்ததாக நினைத்து செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் வெற்றிச் செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது லாரியில் இருந்த 2 வாலிபர்கள் திடீரென தப்பி ஓட்டம் பிடித்தனர்.
சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அறிந்த திருவூர் பகுதியை சேர்ந்த டில்லி, சுரேந்தர், சுரேஷ்ராஜ் ஆகியோர் மணல் லாரியை மடக்கி மாமூல் பணம் கேட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆயுதங்களுடன் மாமூல் கேட்டு மிரட்டியதாக டில்லி உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் லாரியில் மணல் கடத்திய கலாம்பாக்கத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
நாகர்கோவில் பார்வதிபுரம் நாடான்குளத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் சுவரில் துழைபோட்டு 63 மதுபாட்டில்கள் திருடப்பட்டது.
இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருவள்ளுவர் தின விடுமுறை நாளிலும் அதே பகுதியை சேர்ந்த சிலர் மதுபானங்களை அதிகளவு பதுக்கிவைத்து குடித்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக அழகன்பாறை, அழகர்கோணத்தை சேர்ந்த சங்கர் (வயது 25) மற்றும் அவரது 18 வயது சகோதரர் ஒருவரும், தங்கத்துரை (28), மணிவண்ணன் (23) மற்றொரு 16 வயது சிறுவனையும் பிடித்தனர். இவர்கள் டாஸ்மாக் கடையில் திருடியதை ஒப்புக் கொண்டனர். போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- எங்களுக்கு குடிக்க பணம் இல்லாததால் ஒதுக்குப்புறம் பகுதியில் டாஸ்மாக் கடையில் திருடுவதற்கு திட்டமிட்டோம். சம்பவத்தன்று டாஸ்டாக் கடையின் பின் பக்க சுவரை துளைபோட்டோம். பின்னர் நாங்கள் அந்த துளை வழியாக உள்ளே புகுந்து விலை உயர்ந்த மதுபான பாட்டில்களை திருடினோம். அந்த பகுதியில் இருந்து மது அருந்தினோம். மீதம் இருந்த மதுபாட்டில் களை மறைத்துவைத்தோம். டாஸ்மாக் விடுமுறைதினமான திருவள்ளுவர் தினத்தன்றும் நாங்கள் அதிகமாக மது அருந்திக்கொண்டு இருந்தோம். அப்போது போலீசார் எங்களை பிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனில் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மற்றொரு சிறுவனை நெல்லையில் உள்ள சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். தங்கத்துரை, சங்கர், மணிவண்ணன் ஆகிய 3 பேரை ஜெயிலில் அடைத்தனர். சங்கர் மீது ஏற்கனவே ஆரல்வாய்மொழி, கோட்டார் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது. தங்கத்துரை மீது நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். #tamilnews