search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 arrested"

    அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் அருகே நடந்த ரவுடி கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பே ட்டையைஅடுத்த கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் என்ற  பொடிமாஸ் (வயது 27). இவருக்கு மங்கையர்கரசி என்ற மனைவியும் 9 மாத பெண் கைக்குழந்தை உள்ளனர்.

    ரவுடியான  சரத்குமார் மீது லாஸ்பேட்டைபோலீஸ் நிலையத்தில், வெடிகுண்டு வழக்கு, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

    மேலும் சரத்குமார் மீது 144 தடை உத்தரவும் உள்ளது. இந்த நிலையில் சரத்குமார் மட்டும் அரியாங்குப்பம் போலீஸ்  நிலையம் அருகே உள்ள அரவிந்தர் நகர் பகுதியில் தனது அக்காள் கணவர் வெங்கடேசன் வீட்டில் தலைமறைவாக இருந்து வந்தார். அந்த வீட்டில்  வெங்கடேசன், சரத்குமார் மட்டுமே தங்கி இருந்து வந்தனர்.

    வீட்டில் வெங்கடேசன் மற்றும் சரத்குமார் தூங்கிக் கொண்டு இருந்தனர்.  அதிகாலையில் மர்ம நபர்கள் வெங்கடேசன் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினர்.

    சிறிதும் எதிர்பாராத வெங்கடேசன் கதவை திறந்த போது அவரை அங்கிருந்த கும்பல் கட்டிப்போட்டு உள்ளே அழைத்துச் சென்று குளியலறையில் போட்டு மூடிவிட்டனர். 

    பின்னர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த ரவுடி சரத்குமாரை தூக்கத்திலேயே அந்த கும்பல் சரமாரியாக பல இடங்களில் வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்து போனார்.

    தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன்,  சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கதிர்காமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு  அனுப்பிவைத்தனர்.

    தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார்? எதற்காக சரத்குமாரை கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறப்பு புலனாய்வு படையினர் மூலம் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

    இந்த நிலையில் சரத்குமாரை 8 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரியவந்தது.

    இதில் கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஜனார்த்தனன் (32), சவுந்தர் என்ற சவுந்தர்ராஜன் (29), கிருஷ்ணராஜ் (30), சந்துரு (23), பெரிய காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (30), அரியாங்குப்பம் சுப்பையா நகர் பகுதியைச் சேர்ந்த சந்தானம் (24) ஆகிய 6 பேரை அரியாங்குப்பம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கொலை நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த கொலை  யில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 
    • அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1,367 மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்..

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வரும் குற்றச் செயல்க ளை கட்டுப்படுத்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி விழுப்புரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்ட ங்கள் நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உதவி சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.  ப்போது விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி கிராமம் மாந்தோப்பு அருகே சூதாடுவதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்யானந்தம், புனித வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    இதில் அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிந்தாமணி கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்த பாஸ்கரன் மகன் மதன் (வயது 23), அதே ஊரைச் சேர்ந்த கனகராஜ் மகன் அருண் (27), குமார் மகன் விக்னேஷ் (26), ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (30), அய்யனார் மகன் வடிவேல் (29), கிருஷ்ணமூர்த்தி மகன் சங்கர் (47) என்பது தெரியவந்தது.   இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1,367 மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

    • 118 மதுபாட்டில்கள்-ரூ.2340 பறிமுதல் செய்தனர்.
    • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கோத்தகிரி,

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நீலகிரி சுற்றியுள்ள பகுதிகளில் மதுபாட்டிகள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊட்டி, கோத்தகிரி போலீசார் அந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கோத்தகிரி போலீசார் கட்டபெட்டு பகுதியில் மது பாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஊட்டியை சேர்ந்த நாகராஜ்(வயது 27), ராம்சந்த் பகுதியில் அனையட்டியை சேர்ந்த சந்திரன் (52), கப்பட்டியை சேர்ந்த பன்னீர் செல்வம் (49), ராப்ராய் பகுதியை சேர்ந்த வெங்கடாச்சலம் (45), குமரவேல் (70)ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 113 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஊட்டி போலீசார் தேவர் சோலை பஜார் பகுதியில் மதுபாட்டிலை பதுக்கி விற்ற அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (53) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுபாட்டிகள் மற்றும் ரூ.1990-யை பறிமுதல் செய்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒேர நாளில் மதுபாட்டிலை பதுக்கி விற்ற 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 118 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.2340-யை பறிமுதல் செய்தனர்.

    • மதுரையில் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் 2 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
    • இவர்களிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.



    மதுரை

    மதுரை கரிமேடு போலீசார் பெத்தானியாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த சந்தானம் மனைவி லட்சுமி என்ற சித்ரா (வயது 32), சுந்தரபாண்டியன் மனைவி லதா (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு நின்றி ருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (23), சுபாஷ் சரவணன் (21), மணிகண்டன் (25), மகாராஜன் (23) ஆகியோர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து 245 கிராம் கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    மதுரை மாநகரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் யானை தந்தங்கள் வெட்டி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அப்போது ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை மட்டைக்குள் பதுக்கி வைத்திருந்த 3 தந்தங்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் யானை தந்தங்கள் வெட்டி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க அந்தியூர் சிறப்புதனிப்பிரிவு போலீசார் முருகன், தேவராஜ், சென்னிமலை, சசிகுமார் , பிரபுகுமார் மற்றும் சென்னையை சேர்ந்த 4 பேர் உள்பட 9 பேர்கொண்ட தனிப்படையை அமைத்து உத்தரவிட்டார்.

    இவர்கள் கடந்தசில நாட்களுக்கு முன்பு 4 தந்தங்களை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று அந்தியூர் போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட சந்திய பாளையம் பள்ளம் என்ற இடம் அருகே சோதனை நடத்தினர்.

    அப்போது ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை மட்டைக்குள் பதுக்கி வைத்திருந்த 3 தந்தங்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அந்தியூர் அருகே உள்ள புதுக்காட்டை சேர்ந்த வரதராஜ் (47), சந்திபாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி (40), பழைய வளையபாளையம் கரும்பாறை பகுதியை சேர்ந்த பிரபுகுமார் (37), வாணிப்புத்துர் பகுதியை சேர்ந்த மாரசாமி (50), கிருஷ்ணகிரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (33), திருப்பூர் கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (33), ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவான 3 பேரை தேடிவருகிறார்கள்.

    இதேபோல் பர்கூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பெரியூர் பகுதியில் மாதேவன் (37) என்பவரது வீட்டில்இருந்து ஒரு தந்தத்தையும் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட 6 பேரையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தனிப்படைபோலீசார் யானை தந்தங்களை தேடி வருகின்றனர்.  

    • 1,520 கிலோ ரேஷன் அரிசி 38 மூட்டைகளில் கட்டி வட மாநிலத்தவருக்கு கூடுதல் விலைக்கு விற்க எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.
    • பின்னர் அவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்க ப்பட்டனர். அவர்களிட மிருந்து சரக்கு ஆட்டோ, ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு இன்ஸ்பெ க்டர் பன்னீர்செல்வம் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட போலீசார் கருங்கல்பாளையம், கிருஷ்ணம் பாளையம், பம்பிங் ஸ்டேஷன் ரோட்டில் வாகன சோதனை–யில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 1,520 கிலோ ரேஷன் அரிசி 38 மூட்டைகளில் கட்டி வட மாநிலத்தவருக்கு கூடுதல் விலைக்கு விற்க எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளை யத்தை சேர்ந்த பன்னீர் (60) சுரேஷ் (36) ஈரோடு நொச்சிகாட்டு வலசை சேர்ந்த தினகரன் (29) நாமக்கல் குமார பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி ( 23) ஈரோடு கருங்கல்பாளையம் சுரேஷ் (35) அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (25) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்க ப்பட்டனர். அவர்களிட மிருந்து சரக்கு ஆட்டோ, ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஆந்திராவில் இருந்து கோவைக்கு காரில் 110 கிலோ கஞ்சா கடத்தி வந்த பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவைக்கு ஒரு கும்பல் காரில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பீளமேடு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் கொடிசியா சாலையில் வாகன சோதனை நடத்தினர்.

    அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 110 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

    காரில் இருந்த பெண் உள்பட 3 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் மதுரை மாவட்டம் முத்துபட்டி பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (வயது 46), சக்திவேல்(49), திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்த கார் டிரைவர் அசோக்(31) என்பது தெரிய வந்தது.

    ஈஸ்வரி, சக்திவேல் மீது மதுரையில் கஞ்சா வழக்குகள் உள்ளன. இவர்கள் சமீப காலமாக ஆந்திராவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சா மூட்டைகளை வாங்கி காரில் கடத்தி வந்து கோவையில் புரோக்கர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து லட்சக் கணக்கில் சம்பாதித்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் இவர்களிடம் கஞ்சா மூட்டைகளை வாங்கிய புரோக்கர்கள் பற்றிய விவரங்கள் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து புரோக்கர்களான கோவை சிங்காநல்லூரை சேர்ந்த முகமது ரபிக்(23), கோகுல் கண்ணன்(23), ஆவாரம்பாளையத்தை சேர்ந்த தினேஷ் பாபு(24), பிரவீன்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் கஞ்சாவை வாங்கி சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களிடம் இருந்து கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மொபட், செல்போன், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த கும்பலுடன் தொடர்பில் இருந்த முத்துலட்சுமி, சக்திவேல், முஜிபர் ரகுமான் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    மதுரை அருகே போதை பொருள் விற்றதாக 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    மதுரை:

    தமிழகத்தில் போதை பொருட்களான கஞ்சா, புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனை திருட்டுத்தனமாக விற்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    மதுரை வைகை தென்கரை சர்வீஸ் ரோட்டில் சிலர் கஞ்சா விற்பதாக கரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையாவுக்கு தகவல் கிடைத்தது. அவர் போலீசாருடன் சென்று சோதனை நடத்தியபோது கஞ்சா விற்றதாக 2 பேரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் கைதானவர்கள் சின்னராஜ் (வயது 30) அய்யனார்குளம், உசிலம்பட்டி, காவேரி (35) என தெரிய வந்தது.

    இதேபோல் தல்லாகுளம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக திருப்பதி, பாலா, மாணிக்கம், பெரியவீரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 583 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. #tamilnews
    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்றது தொடர்பாக பெண் உள்பட 6 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 18 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பவர்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

    நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நித்திரவிளை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லி ரோந்து வந்தார். அப்போது அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதாக சகாதேவன் (வயது 60) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அருமனை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் வல்சலாம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அருளப்பன் (65), சுந்தரம்பாய் ஆகியோர் அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதாக அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் களியக்காவிளை, தக்கலை, ஈத்தாமொழி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்புக்குட்டன் (57), நாகராஜன் (31), கணேசன் (61) ஆகியோரை அனுமதியின்றி மது விற்றதாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 18 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கடந்த 17-ந் தேதி கோவையில் 3 தனியார் பஸ்களை உடைத்த 6 வாலிபர்களை கண்காணிப்பு காமிரா மூலம் போலீசார் கைது செய்தனர். #vajpayee
    கோவை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கடந்த 17-ந் தேதி கோவையில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல ஓடின.

    இந்நிலையில் காந்திபுரத்தில் இருந்து சித்ரா சந்திப்பு நோக்கி சென்ற பஸ், ஒண்டிப் புதூரில் இருந்து மணியகாரம்பாளையம் நோக்கி வந்த பஸ் ஆகிய இரண்டு தனியார் பஸ்களை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வைத்து மர்ம நபர் கள் கல் வீசி உடைத்தனர்.

    இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் பீளமேடு பகுதியிலும் ஒரு தனியார் பஸ் கண்ணாடியை மர்மநபர்கள் அடித்து உடைத்தனர். அடுத்தடுத்து 3 தனியார் பஸ்கள் உடைக்கப்பட்டது நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்து பஸ்கள் மீது கற்களை வீசியும், கம்பியால் பஸ்சின் பின்புற கண்ணாடியை அடித்து உடைப்பதும் தெரிய வந்தது.

    இந்த காமிரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார் பஸ்களை உடைத்த வாலிபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதனடிப்படையில் பஸ்களை உடைத்ததாக கோவை கணபதி பகுதியை சேர்ந்த தீனதயாளன்(26), மூர்த்தி(23), ஆவாரம்பாளையத்தை சேர்ந்த கோகுல்(22), பிரதீப்(22), சவுரிபாளையத்தை சேர்ந்த சதீஷ் குமார் (24), அசோக்குமார்(21) ஆகிய 6 பேரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் தீனதயாளன் மீது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது. இவர்கள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைதான 6 பேரும் நேற்று இரவு மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். 6 பேரையும் வருகிற 6-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    இதையடுத்து 6 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். #vajpayee
    போளூர் அருகே குழந்தை கடத்துபவர் என கருதி மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    போளூர்:

    போளூர் அருகே குல தெய்வம் கோவிலுக்கு வந்தவர்களை குழந்தை கடத்துபவர்கள் எனக் கருதி கிராம மக்கள் தாக்கியதில் ருக்மணி என்பவர் கொலை செய்யப்பட்டார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக 62 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில் 36 பேரை போளூர் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அத்திமூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 36), பாபு (54), ரமேஷ் (36), ஏழுமலை (29), தின்டிவனத்தை சேர்ந்த சேகர் (43), தானியார் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (34). ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து கிராம மக்கள் ஊரை விட்டு தலைமறைவாகி உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் பகுந்தனர். களியம், அத்திமூர், பனப்பாம்பட்டு, தின்டிவனம் உள்ளிட்ட 10 கிராமங்களில் பலர் வீட்டை பூட்டி தலைமறைவாகி விட்டனர். இதனால் அந்த கிராமங்கள் 7-வது நாளாக இன்றும் வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் தலைமறைவாக உள்ள 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கிராம மக்கள் தாக்கியதில் காயமடைந்த கஜேந்திரன் வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்ததால் சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து சுயநினைவு திரும்பாத நிலையில் இருந்து வந்தார். கார் மெக்கானிக் தொழில் செய்து வந்த அவருக்கு 2 மகள் உள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ செலவு சமாளிக்க முடியாமல் கண்ணீர் விட்டனர்.

    கஜேந்திரன் மனைவி பத்மாவதி நேற்று முன்தினம் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியை சந்தித்து மருத்துவ உதவி கேட்டு மனு கொடுத்தார்.

    இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க சென்னையிலுள்ள மருத்துவ மனை உதவிக்கரம் நீட்டியுள்ளது. எனவே அவர் நேற்று மாலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ×