search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alliances"

    • மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது.
    • சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்.

    மும்பை:

    மராட்டியத்தில் 2019 பேரவைத் தோ்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், முதல்-மந்திரி பதவியைத் தர மறுத்ததால் பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்த சிவசேனா, எதிா்க்கட்சிகளாக இருந்த தேசியவாத காங்கிரஸ்-காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவா் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

    ஆனால், 2022-ம் ஆண்டு சிவசேனா மூத்த தலைவா் ஏக்நாத்ஷிண்டே கட்சியை உடைத்து, பா.ஜனதாவுடன் கைகோர்த்தாா். இதனால், உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை இழந்தாா். ஷிண்டே புதிய முதல்- மந்திரி ஆனார்.

    பா.ஜனதாவின் தேவேந்திரபட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆனார். இதன்பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த சரத்பவாரின் நெருங்கிய உறவினா் அஜித்பவாரும் ஆளும் கூட்டணியில் இணைந்து துணை முதல்-மந்திரி பதவியைப் பெற்றாா்.

    சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி மொத்தமுள்ள 48 இடங்களில், 30 தொகுதிகளில் வென்றது. பாராளுமன்றத் தோ்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு மராட்டியத்தில் ஏற்பட்ட தோல்வியும் முக்கியக் காரணமாக இருந்தது.

    இந்த நிலையில், சட்டசபை தோ்தலில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி ஆளும் கூட்டணிக்கு கடும் சவால் அளிக்க இருக்கிறது.

    இந்த நிலையில் புனேயில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சரத்பவாா் கூறியதாவது:-

    மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. அதை மக்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது எதிா்க்கட்சிகள் கூட்டணியின் கடமையாகும். எனவே, சட்டசபைத் தோ்தலில் (சரத்பவாா் தலைமை) தேசியவாத காங்கிரஸ், (உத்தவ்தாக்கரே தலைமை) சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்.

    தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை இதுவரை தொடங்கப்படவில்லை. எனினும், விரைவில் இது தொடா்பாக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும். பாராளுமன்றத் தோ்தலில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் நல்ல வரவேற்பை அளித்தாா்கள்.

    இடதுசாரிகள், பி.டபிள்யூ.பி. கட்சி ஆகியவையும் எங்கள் கூட்டணியில் உள்ளன. பாராளுமன்றத் தோ்தலில் அக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்க முடியவில்லை. எனினும், சட்ட சபைத் தோ்தலில் அவா்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது எங்கள் கடமை என்றாா்.

    பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி, ஆண்டுக்கு மூன்று எரிவாயு சிலிண்டா் இலவசம் உள்ளிட்ட பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை மராட்டியத்தில் ஆளும் கூட்டணி இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, 'இந்த அறிவிப்புகள் எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும்.

    சில நாட்களுக்கு வேண்டுமானால் இதை வைத்து பரபரப்பாகப் பேச முடியும். கையில் பணம் இல்லாமல் சந்தைக்கு பொருள் வாங்கச் செல்வதுபோல உள்ளது ஆளும் கட்சியின் நிலை.

    இவ்வாறு சரத்பவாா் கூறினார்.

    • நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.
    • விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டா் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன், எம்.பி.க்கள் தனுஷ்குமார், நவாஸ் கனி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசனை செய் யப்பட்டது. இதையடுத்து விருதுநகர் கலெக்டர் அலு வலக வளாகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் தமிழக மக்கள் நலனை கருத் தில் கொண்டு அனைத்து கட்சிகளும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். கர்நாடக அரசு ஆணையத்தின் உத்தரவுப் படி தண்ணீரை திறந்து விடும் நிலையில் அங்குள்ள பா.ஜ.க. முன்னாள் முதல் வர்கள், சிலரை தூண்டி விட்டு பிரச்சினையை பெரி தாக்குகிறார்கள். காங்கிரசை பொருத்த மட்டில் மத்திய மந்திரியிடம் தமிழக மக்களின் நலனை காக்க வேண்டும் என ஜோதி மணி எம்.பி. தலை மையில் மனு கொடுத்துள்ளோம். 2 மாநிலங்களிலும் முதல்வர் களை தரம் தாழ்ந்து விமர் சிப்பதை தவிர்க்க வேண் டும். நாடாளுமன்ற தேர்த லில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    2016-ல் இருந்து தொட ரும் அ.தி.மு.க., பா.ஜனதா உறவு முறிந்து விட்டதாக கூறினாலும் அவர்கள் பிர தமர் வேட்பாளராக மோடியை தான் தெரிவிப்பார்கள். இந்தியா கூட்ட ணியை பொருத்த மட்டில் பிரதமர் வேட்பாளர் தக்க நேரத்தில் முடிவு செய்யப்படும். தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜனதா தவிர்க்கப் பட வேண்டியவை என கூறி வரும் சீமான் தான், தவிர்க்கப்பட வேண்டியவர்.

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தமட் டில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை தேசிய தலை வர் முடிவு செய்வார். விரு துநகர் மாவட்ட கண்கா ணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 சதவீதம் பேர் தொடர்ந்து இணைப்புகள் பெறவில்லை என தெரிவிக் கப்பட்டது.

    விருதுநகர் வடமலை குறிச்சி விலக்கில் சர்வீஸ் சாலை, கலெக்டர் அலுவல கம் முன்பு மேம்பாலம் ஆகிய பணிகள் குறித்து விவாதிக்க தேசிய நெடுஞ் சாலை அதிகாரிகள் வராததற்கு கண்டனம் தெரிவிக் கப்பட்டது. சாத்தூரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×