search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "times square"

    • நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன. விசாரணையில், அந்தச் சிலை போலி என தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், விராட் கோலியின் உருவச் சிலை டைம்ஸ் சதுக்கத்தில் அமைக்கப்படவில்லை என்ற உண்மை கண்டறியப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், நாளை நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி நன்றாக விளையாடக் கோரி சிலை அமைத்துள்ளோம் டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோவில் விராட் கோலியின் நல்ல உறக்கத்துக்கு டுயூரோபிளக்ஸ் மெத்தை என விளம்பரமும் செய்திருந்தது.

    கம்ப்யூட்டர் அனிமேஷன் மூலம் விராட் கோலியின் சிலை உருவாக்கப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனியின் விளம்பர தூதராக கடந்த ஆண்டு விராட் கோலி நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் வகையில் கலைஞரின் புகைப்படம் பிரதிபலிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

    மறைந்த தி.மு.க தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் வழிவந்த அண்ணாவின் திராவிட அரசியலை 1969 இல் அவரது மறைவுக்குப் பின் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுத்துச் சென்ற கலைஞர் கருணாநிதி பழமைவாதத்தை வேரறுக்கும் பல மகத்தான திட்டங்களை கொண்டுவந்தவர் ஆவார்.

    கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டங்களை கொண்டுவந்தது, எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நிறுவியது, இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்தினருக்கும் சம உரிமை கிடைக்க வழிவகை செய்தது, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளித்தது, விதவைகளுக்கு மறுமண உதவித் திட்டங்களை அளித்தது, கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க நிதியுதவி அளித்தது என கலைஞர் கொண்டுவந்த திட்டங்களின் பட்டியல் நீளும்.

     

    குமரிக்கடலில் திருவள்ளுவர் சிலையை நிறுவி உலக செம்மொழி மாநாட்டை நடத்திக்காட்டினார். கலைஞரின் சாதனைகளுக்காக இன்றளவும் அவர் நினைவுகூறப்டும் நிலையில் அவரின் 101 வது பிறந்தநாளை திமுக தொண்டர்களும் அவரது அபிமானிகளும் கொண்டாடி வருகின்றனர்.

    அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் நியூ யார்க் தமிழ் சங்கத் தலைவருமான கதிர்வேல் குமாரராஜா தனது குடும்பத்துடன் சேர்ந்து கலைஞருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது காசை செலவுசெய்து, நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் முழு அளவிலான விளம்பரப் பலகையில் கலைஞரின் புகைப்படத்தை இடம்பெறச் செய்துள்ளார். அதில் முதல்வர்  மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கதிர்வேல் ராஜாவின் குடும்பத்தினர் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் வகையில் கலைஞரின் புகைப்படம் பிரதிபலிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • 183 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது
    • திருப்பணியில் அமெரிக்காவிலிருந்து 12,500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்

    இந்தியாவிலுள்ள போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா (BAPS) எனும் இந்து மத அமைப்பினால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வரும் அந்நாட்டிலேயே மிக பெரிய இந்து கோயில், வரும் அக்டோபர் 8ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. பிறகு 10 நாட்களுக்கு பிறகு பொது மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    ஏற்கெனவே இந்த அமைப்பினால் 100 ஏக்கரில் உருவாக்கப்பட்ட கோவில் இந்திய தலைநகர் புது டெல்லியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அட்லாண்டிக் கடற்பகுதியிலிருந்து சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் அமெரிக்காவில் உள்ள வடகிழக்கு மாநிலம் நியூ ஜெர்சி. இத்திருக்கோவில் இம்மாநிலத்தின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்திலிருந்து தெற்கே 90 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 183 ஏக்கர் நிலபரப்பில் கட்டப்பட்டுள்ள இத்திருக்கோவிலை கட்டி முடிக்க சுமார் 12 ஆண்டு காலம் ஆனது.

    இதன் கட்டுமான பணியில் அமெரிக்கா முழுவதிலுமிருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

    உலக பாரம்பரிய தளமாக ஐ.நா. கூட்டமைப்பின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட தென்மேற்கு ஆசியாவில் உள்ள கம்போடியா நாட்டின் அங்கோர் வாட் திருக்கோவில், 500 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டது. நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லே டவுன்ஷிப் பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் இந்த அக்ஷர்தாம் திருக்கோவில், அங்கோர் வாட் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது உலகிலேயே மிக பெரிய இந்து கோவிலாகும்.

    அமெரிக்காவில் உள்ள சுவாமிநாரயன் அக்ஷர்தாம் கோவில், பண்டைய இந்திய கலாச்சார முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள், இந்திய இசைக்கருவிகள் மற்றும் நடன வடிவங்களின் செதுக்கல்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இந்து மதத்தில் மூலவர் எனப்படும் முக்கிய தெய்வத்தின் விக்கிரகத்தை தவிர, இத்திருக்கோவிலில் 12 விக்கிரகங்கள் உள்ளன. இக்கோவிலில் 9 சுழல் வடிவ கோபுரங்கள் மற்றும் 9 பிரமிடு வடிவ கோபுரங்கள் உள்ளன. இது பாரம்பரிய கட்டிடக்கலைகளின் சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் மிகப்பெரிய நீள்வட்ட குவிமாடத்தையும் (elliptical dome) கொண்டுள்ளது.

    சுண்ணாம்பு, கிரானைட், இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் பளிங்கு உள்ளிட்ட கிட்டத்தட்ட 20 லட்சம் (2 மில்லியன்) கன அடி கற்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இந்தியா, துருக்கி, கிரீஸ், இத்தாலி மற்றும் சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவை வரவழைக்கப்பட்டன.

    இக்கோவிலில், 'பிரம்ம குண்ட்' என அழைக்கப்படும் ஒரு பாரம்பரிய இந்திய படிக்கிணறு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 300-க்கும் மேற்பட்ட புனித நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 18 முதல் பொதுமக்களின் தரிசனத்திற்காக இத்திருக்கோயில் திறக்கப்படும். அக்ஷர்தாம் என்றால் இறைவனின் புனிதமான இருப்பிடம் என பொருள்படும்.

    • முக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தனர்.
    • இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.

    இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் கோலகாலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு என நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் உலக நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், முக்கிய தலைவர்கள் இந்தியாவுக்கு தங்களின் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில், இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது.

    அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினர். 

    • நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடக்கும் கேரள சபாவின் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார்.
    • அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் அங்கிருந்து அவர் கியூபா நாட்டிற்கு செல்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நாளை அமெரிக்கா செல்கிறார். வருகிற 14-ந் தேதி வரை அமெரிக்காவில் இருப்பார். வருகிற 10-ந் தேதி நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடக்கும் கேரள சபாவின் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார்.

    அதன்பின்பு ஐக்கிய நாட்டு சபை அலுவலகத்திற்கும் செல்கிறார். மேலும் அங்குள்ள தொழில் அதிபர்கள், தகவல் தொழில்நுட்ப துறை வல்லுனர்கள் ஆகியோரையும் சந்தித்து பேசுகிறார். அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் அங்கிருந்து அவர் கியூபா நாட்டிற்கு செல்கிறார்.

    கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுடன் சபா நாயகர் ஷம்ஷீர், நிதி மந்திரி பாலகோபால் மற்றும் அதிகாரிகள் செல்கிறார்கள்.

    நாசா அனுப்பி உள்ள இன்சைட் விண்கலம் இன்று செவ்வாய்க்கிரகத்தில் இறங்கும் நிகழ்வு, டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்ட திரை மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #NASAInSight #MarsLanding
    வாஷிங்டன்:

    அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன் ஓர் அங்கமாக, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை செவ்வாய்க் கிரகம் நோக்கி அனுப்பியுள்ளது. மே 5-ம் தேதி ஏவப்பட்ட அந்த விண்கலம் சுமார் 485 மில்லியன் கி.மீ. தூரத்தைக் கடந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் பயணிக்கிறது.

    இந்நிலையில், இன்சைட் விண்கலம் அமெரிக்க நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்குகிறது. இந்த நிகழ்வு, நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இது நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.


    செவ்வாய்க் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், வெப்பப் பரிமாற்றங்கள் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பு போன்றவற்றை ஆராயும் பொருட்டு இந்த விண்வெளி ஓடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என நாசா தகவல் தெரிவித்து உள்ளது.

    கியூரியாசிட்டி விண்கலத்தை அடுத்து இரண்டாவது விண்கலத்தை நாசா செவ்வாயில் தரையிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #NASAInSight #MarsLanding
    ×