search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "activists"

    • நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடக்க உள்ளது
    • எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான்.

    மகாராஷ்டிராவின் பழம்பெரும் கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முன்னதாக சரத் பவாரின் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆனார்.

    சரத் பவார் அணி - அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் பிரிந்து மகாராஷ்டிர அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ள நிலையில் விரைவில் அம்மாநிலத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் அந்த விறுவிறுப்பை இரட்டிப்பாகியுள்ளது.

    இந்த நிலையில்தான் நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை நடக்க உள்ள சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்குப்பின் பாஜகவுடன் உள்ள அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என சரத் பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரசின் முக்கிய தலைவருமான ரோகித் பவார் சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

     

    இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார், எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களின் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் வருபவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

    மாறாக எங்கள் கட்சியை வலுப்படுத்த விரும்புபவர்களாகவும் கட்சியின் கண்ணியத்தை குலைக்காதவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களை ஏற்றுக்கொள்வோம். அதுவும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசித்த பின்னரே அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

     

     

    இதன்மூலம் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் அஜித் பவாரின் எம்.எல்.ஏக்கள்  சரத் பவார் அணிக்குத் தாவ அதிக வாய்ப்புள்ளதாக உறுதிபட தெரிகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

    • தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1ம் தேதி வரை ஜெக்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்.
    • ஆத் ஆத்மி தொண்டர்கள் கெஜ்ரிவாலை கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    அமலாக்கத்துறையின் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1ம் தேதி வரை ஜெக்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், கெஜ்ரிவாலின் மானைவி சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவாலை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    ஆத் ஆத்மி தொண்டர்கள் கெஜ்ரிவாலை கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொண்டர்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் "சர்வாதிகாரத்தை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். சர்வாதிகார சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.

    மேலும், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. " என பேசினார்.

    • அம்மாபேட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • 40 தொகுதிகளையும் நாம் கைபற்ற தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வடக்கு, தெற்கு ஒன்றிய அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயல்வீரர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சாலியமங்களம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஏவி.சூரி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தஞ்சை மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி .

    அம்மாபேரவை மாவட்ட செயலாளர் துரை சண்முகபிரபு, முன்னாள் அமைச்சர் சிவபதி, கலந்து கொண்டு பேசினர்.

    பின்னர் தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ, பேசும் போது வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் நாம் கைபற்ற தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டு கொண்டார்.

    மாவட்ட பொருளாளர் ராம்குமார், இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட துணை தலைவர் திருமாவளவன், மெலட்டூர் நகர செயலர் சின்னதுரை, ஓன்றிய இணை செயலாளர் சுமத்ராமோகன் உள்பட மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அண்ணாகிராம வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் கண்டரக்கோட்டையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் நாகபூஷ்ணம் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    அண்ணாகிராம வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் கண்டரக்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் நாகபூஷ்ணம் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கவுரி பாண்டியன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் எம்.சி.சம்மந்தம் முன்னிலை வகித்தனர். அண்ணாகிராம ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி மற்றும் கிளைக் கழகங்களில் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ப்பது, மேலும் அ.தி.மு.க. பொதுசெயலாளராக எடப்பாடியாரை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பது எனவும், அ.தி.மு.க.வின் பொன்விழா மாநாட்டில் அதிகளவில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் அனைத்து ஊராட்சி கிளைகளுக்கு உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் அவை தலைவர்கள் செல்வராஜ், பாண்டியன், மாவட்ட பிரதிநிதி விஸ்வநாதன், ஒன்றிய பொருளாளர் ஏழுமலை, ஒன்றிய துணை செயலாளர்கள் ரஜினி, உமா துரைராஜ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை நடந்தது.
    • கருணாநிதி நூற்றாண்டுவிழா, உறுப்பினர் சேர்க்கை, சார்பு அணி மற்றும் சமூக வலைதள பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை (26-ந் தேதி) மாலை 3.30 மணி அளவில் ராமநாதபுரம் பாரதிநகர் பீமாஸ் மகாலில் அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இதில் கருணாநிதி நூற்றாண்டுவிழா, உறுப்பினர் சேர்க்கை, சார்பு அணி மற்றும் சமூக வலைதள பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

    ×