search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Advise"

    • சட்டமன்ற தேர்தல்-கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை.
    • தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    தமிழக பா.ஜ.க. தலைவ ராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறாவிட்டாலும் பல இடங்களில் 2-வது இடத்தை பிடித்ததுடன், வாக்கு சதவீதமும் அதிகரித்தது. இது அண்ணாமலையின் செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என பா.ஜ.க., நிர்வாகிகள் , தொண்டர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்புக்காக அடுத்த மாதம் செப்டம்பர் 1-ந்தேதி லண்டன் செல்ல உள்ளார். அதற்கு முன்னதாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.

    இதற்கான ஆலோசனை கூட்டம் திருப்பூர் பெருமாநல்லூரில் உள்ள கிருஷ்ணா மகாலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அண்ணாமலை தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தமிழக பா.ஜ.க., மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி மற்றும் மாநில நிர்வாகிகள் கேசவ விநாயகம், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், எம்.எல்.ஏ.க்கள் காந்தி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் 66 மாவட்ட தலைவர்கள் , மண்டல தலைவர்கள் என தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நவம்பர் மாதத்தில் கட்சி நிர்வாகிகள் மாற்றம் தொடர்பான பணிகளை தொடங்குதல், கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குதல் , கட்சி வளர்ச்சி, சுதந்திர தின கொண்டாட்டம், மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை மக்களிடத்தில் எடுத்து செல்வது, சட்டமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் வெற்றி பெற வியூகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும் லண்டன் செல்லும் அண்ணாமலை அங்கு 3 மாதம் வரை தங்கி படிக்க உள்ளதால் அதன்பிறகான கட்சி ப்பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ள ப்பட்டது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்க ப்பட்டதாக கூறப்படுகிறது.

    முன்னதாக சுதந்திர தினத்தையொட்டி அண்ணாமலை தலைமை யில் திருப்பூர் குமரன் சிலை முன்பு இருந்து தொடங்கி காந்திநகரில் உள்ள காந்தி அஸ்தி நினைவிடம் வரை தேசிய கொடிகளுடன் இரு சக்கர வாகன ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த ஊர்வலத்துக்கு திருப்பூர் வடக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து திருப்பூரில் உள்ள குமரன் சிலைக்கு பா.ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா, மாநிலச் செயலாளர் மலர்கொடி மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்ததற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். பின்னர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்றனர். அங்கு வந்த அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பும் அளித்தனர்.

    • ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாக கருதப்படுகின்றன.

    ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அவர் மேல்சபை எம்.பி. ஆகிவிட்டதால் அந்த தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது. கடந்த முறை ராகுல் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர் எம்.பி.யாக முடிந்தது.

    இந்த தடவையும் அவர் வயநாடு தொகுதியில் களம் இறங்கி உள்ளார். நேற்று அந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. இந்த நிலையில் அவர் அமேதியிலும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அமேதியில் ராகுலையும், ரேபரேலியில் பிரியங்காவையும் களம் இறக்குவது பற்றி காங்கிரஸ் தேர்தல் மையக்குழு ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அமேதி, ரேபரேலி தொகுதி நிலவரம் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்காவை இந்த தொகுதிகளில் போட்டியிட வைக்க வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.

    இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • கமல்ஹாசன் போட்டியிடுவதற்கு வசதியாக கோவை பாராளுமன்ற தொகுதியைவிட்டுக் கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திட்டமிட்டு உள்ளது.
    • கமல்ஹாசனுக்கு மேல்சபை எம்.பி.பதவியை மட்டும் அளிக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசித்து வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு இடங் கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்ட நிலையில் மற்ற கட்சிகளுக்கும் தொகுதி களை ஒதுக்கி கொடுப்பதில் தி.மு.க. தலைமை தீவிரமாகி வருகிறது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட் டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி 2 தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. கமல்ஹாசன் போட்டியிடுவதற்கு வசதியாக கோவை பாராளுமன்ற தொகுதியைவிட்டுக் கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திட்டமிட்டு உள்ளது.

    அதற்கு பதிலாக தி.மு.க. கடந்தமுறை வெற்றி பெற்ற பொள்ளாச்சி தொகுதியில் களம் இறங்க அந்த கட்சி காத்திருக்கிறது. இதை தொடர்ந்து இன்னொரு தொகுதியாக தென் சென்னை அல்லது மதுரை தொகுதியை கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி மிகுந்த கவனத்தோடு காய் நகர்த்தி வருகிறது.

    இதில் உடன்பாடு ஏற்படாதபட்சத்தில் கோவை தொகுதியில் மட்டுமே களம் இறங்க முடியும் என்கிற இக்கட்டான சூழல் கமல் கட்சிக்கு ஏற்படும். அது போன்ற நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? என்பது பற்றியும் கமல்ஹாசன் தீவி ரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். இது ஒருபுறம்ம இருக்க காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளிலேயே கமல் ஹாசனுக்கு இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு காங்கிரஸ் கட்சி யும் ஒத்துக் கொண்டு உள்ளது. தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட 10 இடங்களை ஒதுக்க தி.மு.க. தலைமை தயாராக உள்ளது.

    இந்த 10 தொகுதியில் கமல்ஹாசனுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கிவிட்டால் மீதம் 8 தொகுதிகள் மட்டுமே இருக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி அதுபற்றி யோசித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளது.

    இதனால் கமல்ஹாசனுக்கு மேல்சபை எம்.பி.பதவியை மட்டும் அளிக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசித்து வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    அதே நேரத்தில் 2 பாராளுமன்ற தொகுதிகள் கிடைக்காவிட்டால் ஒரு பாராளுமன்ற தொகுதி மற்றும் மேல்சபை எம்.பி. பதவியை எப்படியாவது கேட்டுப் பெற்று விட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுதியாக உள்ளது. இது தொடர்பாக 2 அல்லது 3 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • நீலகிரி மாவட்டசெயலாளர் கப்பச்சிவினோத் தலைமை தாங்கினார்
    • மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைசெயலாளர் பாலநந்தகுமார் பங்கேற்பு

    ஊட்டி,

    குன்னூர் சட்டமன்றத்துக்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சிகள் பூத் கமிட்டி புத்தகங்களை நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நகர செயலாளர் சரவணகுமார் ஏற்பாட்டில் நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளளரும், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளருமான பொன்ராஜ் ஆய்வு செய்தார்.

    இதில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தேனாடு லட்சுமணன், பொதுக்குழ உறுப்பினர் மாதன் மற்றும் மாநில, மாவட்ட சார்பணி மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகரிய செயலாளர், பேரூராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • சாயர்புரம் பேரூராட்சி கூட்டம் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் பேரூராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சி கூட்டம் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் துணை தலைவர் பிரியா மேரி, கவுன்சிலர்கள் கண்ணன், எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், ராமமூர்த்தி, முத்துராஜா, முருகேஸ்வரி, ப்ளாட்டினா மேரி, இந்திரா, ஜெப தங்கம், சுமதி, பிரவீனா, அமுதா, முத்துமாரி, சுகாதார மேற்பார்வையாளர் நித்ய கல்யாண் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்சேர்க்கை, பாக முகவர்கள்மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து விவாதம்
    • சேலம் இளைஞரணி 2-வது மாநில மாநாட்டிற்கு வருவோர் பெயர் பட்டியல் படிவம் வழங்கப்பட்டது

    ஊட்டி,

    இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்சேர்க்கைக்கு பாக முகவர்கள்மற்றும் பொறுப்பாளர்களை நியமனம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது நீலகிரி மாவட்ட செயலாளர்பா.மு. முபாரக்கிடம்இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்சேர்க்கைக்கு பாக முகவர்கள்மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்தும், சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டிற்கு கலந்து கொள்ேவார் பெயர் பட்டியல் படிவங்களை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், துணை அமைப்பாளர்கள் நாகராஜ் பத்மநாபன் ஆகியோர் வழங்கினர்.

    நிகழ்ச்சியில்குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாவட்ட சிறுபான்மை அமைப்பின் தலைவர் மு.முபாரக், குன்னூர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்நாதன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் செல்லின்ராஜ், கோத்தகிரி இளைஞரணி மீன்ராஜ் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வரும் கல்வியாண்டு முதல் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது சம்பந்தமாக கருத்துக்கள் கேட்கப்பட்டது.
    • காலை உணவுத்திட்டத்தை 8 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    மங்கலம் :

    தமிழக முதல்வரின் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தினை செயல்படுத்துவது சம்பந்தமாக திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாப ழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தகுமார், பல்லடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அனைத்து வார்டு கவுன்சிலர்கள், சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், சாமளாபுரம் பகுதி மகளிர் கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வரும் கல்வியாண்டு முதல் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது சம்பந்தமாக அனைவரிடமும் கலந்தாலோ சித்து அவர்களுடைய கருத்துக்கள் கேட்கப்பட்டது.கூட்டத்தில் கலந்து கொண்ட வர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டு இந்தத் திட்டத்தை சாமளாபுரம் பேரூராட்சியில் முதலமைச்ச ரின் காலை உணவுத்திட்டத்தை 8 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளிலும் சிறந்த முறையில் நடைமுறைப்படு த்துவது என முடிவு செய்யப்பட்டது.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை பல்சேவை கூட்டுறவு மையங்களாக மாற்ற ஆலோசனை நடந்தது.
    • பொறியியல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையக கூட்ட அரங்கில் மண்டல இணைப்பதிவாளர் பா.செந்தில் குமார் தலைமையில் வேளாண்மை பொறியியல் துறை மற்றும் கூட்டுறவு துறை இணைந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்சேவை மையங்களாக மாற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் வேளாண்மை பொறியியல் துறை கண்காணிப்பு பொறியாளர் டி.டேனிஸ்டன், கூட்டுறவு சங்கங்க ளின்இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர் மற்றும் பணியாளர் அலுவலர் சந்தனராஜ், அருப்புக்கோட்டை சரக துணை பதிவாளர் சு.ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணை பதிவாளர் க.அமுதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் இளங்கோவன், கூட்டுறவுத்துறை மற்றும் சங்க செயலாளர்கள், பொறியியல் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தெருநாய் விஷயத்தில் மட்டுமின்றி செல்லப்பிராணிகளிடம் நாம் கவனமுடன் இருக்க வேண்டும் என்கிறார் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி பொதுமருத்துவத்துறை பேராசிரியர்
    • நாய்கடித்த நாளே தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம்

     திருப்பூர் :

    பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை விட, சாலையில் சுற்றித்திரியும் நாய்களே பிறரை கடிப்பவையாக இருப்பது குறித்து குற்றச்சாட்டு எழுகிறது.தெருநாய் விஷயத்தில் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளிடம் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். தக்க நேரத்தில் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்கிறார் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி பொதுமருத்துவத்துறை இணை பேராசிரியர் செண்பகஸ்ரீ.இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாய்களிடம் குழந்தைகள், கர்ப்பிணிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். நாய் அருகில் குழந்தைகளை தனியே விளையாட விடக் கூடாது. முன்னெச்சரிக்கை முக்கியம்.நாய் கடித்தால் மறைக்காமல், சொல்ல வேண்டுமென பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.நாய் கடித்தது ஆனால் ரத்தம் வரவில்லை. பற்கள் பதியவில்லை, லேசாக நகத்தில் பிராண்டியது என்றாலும், டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    நாய்க்கடிக்கு பொதுவாக முதல்நாள், 3-வது, 7-வது, 14 மற்றும் 28வது நாள் என 5 தடுப்பூசி செலுத்தப்படுகிறது.நாய்கடித்தவர் ஒருமுறை தடுப்பூசி செலுத்துமிடத்தில் பதிவு செய்து விட்டால் மறுமுறை அங்கு தான் வர வேண்டும் என்பதில்லை. பதிவு செய்து பதிவுஅட்டை பெற்று எந்த மருத்துவமனையிலும் வேண்டுமானாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்டாயம் 5 தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும்.நாய்க்கடித்து சரியான நேரத்துக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல், அலட்சியமாக இருந்து விட்டால் 6மாதம் கழித்து கூட தொந்தரவு வர வாய்ப்புள்ளது. எந்த நாயிடம் ரேபிஸ் கிருமி இருப்பது என்பது நமக்கு தெரியாது.

    நாய்க்கடி வேறு, வெறிநாய்க்கடி வேறு. கடித்த நாய்க்கு ரேபிஸ் கிருமி இருந்தால் நமக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.தடுப்பூசி போடவில்லையென்றால், ரேபிஸ் வைரஸ் நரம்புகளில் குடியேறும். வீரியத்தை காட்டும். தண்ணீர் குடிக்க, சாப்பிட பிரச்னை ஏற்படும். நரம்புகள் பாதிப்பதால் உணவு எடுக்க முடியாமல் இறப்பை தழுவ நேரிடலாம்.நாய் கடித்த இடத்தை தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். ரத்த போக்கு குறைந்தவுடன், நாய்கடித்த நாளே தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம்.இவ்வாறு டாக்டர் செண்பகஸ்ரீ கூறினார்.

    • சிபிசிஎல் பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் நடைபெற உள்ளது.
    • நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் நாகூர் சிதம்பரனார் சிறு துறைமுகம் வழியாக கொண்டு வரப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் இந்திய வர்த்தக தொழிற் குழும 55 ஆவது பேரவை கூட்டம் தலைவர் சலிமுதீன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    தலைவர் சலிமுதீன் வரவேற்றார். நிகழ்ச்சியில் செயலாளர் கணேசன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    பொருளாளர் சேகர் 55வது ஆண்டு வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார்.

    கூட்டத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசுகையில், நாகப்பட்டினம் பனங்குடியில் 36 ஆயிரம் கோடி ரூபாயில் சிபிசிஎல் பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் நடைபெற உள்ளது.

    இந்த நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் நாகூர் சிதம்பரனார் சிறு துறைமுகம் வழியாக கொண்டு வரப்படும்.

    அந்த ஒப்பந்தத்தின் படியே விரிவாக்க பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    நாகை -தஞ்சை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வந்தாலும் பழைய சாலையை மேம்படுத்துவதற்கு 110 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.

    தொகுதியில் நீண்ட நாள் செயல்படுத்தாமல் உள்ள திட்டங்கள் குறித்து முதலமைச்சர் கேட்டுள்ள தகவல்கள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசனை செய்து தமிழக அரசிற்கு பட்டியல் அனுப்பிவைக்கப்படும்.

    அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பால பணிகளுக்காக நில எடுப்பு பணிகள் நிறைவு பெற்று இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. பாலம் அமைப்பதற்கு 115 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    மேம்பால பணிகள் தொடங்க டிசம்பர் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும்.

    கடல் உணவு மண்டலம் அமைப்பதற்கான பரிந்துரை அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய இருந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் நல மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட திட்டங்களில் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது..

    மற்ற துறைகளும் மாநில அளவில் முதல் 10 இடங்களில் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழக அரசு தொடங்கியுள்ள மாதிரி பள்ளிகளுக்கு வகுப்பறை மேம்பாட்டிற்கு இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பில் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் கலெக்ட ரிடம் தலைவர் சலிமுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

    தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் கலெக்டர் வழங்கினார்.

    இறுதியில் இணை செயலாளர் முகமது பகுருதீன் நன்றி தெரிவித்தார்.

    • செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • நோய் வராமல் இருக்க ஊட்டச்சத்து மிக அவசியமாக தேவைப்படுகிறது.

    திருப்பூர் :

    ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக ஊட்டச்சத்து உணவு பற்றிய பேரணி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக 15 வேலம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவர் கலைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 7-ந் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும்.துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். நோய் வராமல் இருக்க நமது உடலில் ஊட்டச்சத்து மிக அவசியமாக தேவைப்படுகிறது. சத்தான உணவுகளான ,கீரைகள், காய்கறிகள் இவை அனைத்தும் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் தேவைப்படுகிறது. இவற்றில் அதிகளவில் முக்கிய சத்துக்கள் காணப்படுகிறது.வைட்டமின் -ஏகொண்ட முருங்கை, பப்பாளி போன்ற பழம், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். துரித உணவுகளை எவ்வளவு அதிகம் சாப்பிடுகிறோமோ அவ்வளவு அதிகம் கேடு விளைவிக்கும். சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அனைவரும் சத்தான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வத்தோடு வாழவேண்டும்.ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்றார். இதைத்தொடர்ந்து மாணவ செயலர்கள் அருள்குமார், பூபாலன், அரவிந்தன், பாலசுப்பிரமணியம், சுந்தரம் , பூபதி ராஜா, பாக்கியலஷ்மி ஆகியோர் தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு பேரணியில் கலந்து கொண்டனர்.

    கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறுகையில், தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 1 ந் தேதி தொடங்கி தொடர்ந்து 7 நாட்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை நடத்த வேண்டும். அதன் படி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு- 2 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் காய்கறிகளின் அவசியத்தை எடுத்துக் கூறினார்கள்.தொடர்ந்து ஊட்டச்சத்து மிக்க உணவுகளின் கண்காட்சியினை நடத்த திட்டமிட உள்ளார்கள் என்றார்.

    ×