என் மலர்
நீங்கள் தேடியது "advisory meeting"
- திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அ.ம.மு.க. மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பாலுசாமி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
பொதுக்குழு உறுப்பினர் புல்லட் ரவி, தொழிற்சங்க பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் இறை வெங்கடேஷ், தொழிற்சங்க பேரவை தலைவர் கலியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் சுகம் வீர.கந்தசாமி, ராஜாங்கம், ஜெகதீஷ், நூல்கடை சிவக்குமார், நெருப்பெரிச்சல் பகுதி நிர்வாகி கருப்புசாமி, பாண்டியன்நகர் பகுதி இணை செயலாளர் ஷீபா பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாற்று கட்சிகளில் இருந்து 35 பேர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.
- தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டூவிபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது
- எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினரே உண்மையான அ.தி.மு.க.வினர்
தூத்துக்குடி:
வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தம்-2023, புதிய வாக்காளர் சேர்த்தல் சிறப்பு முகாம்களில் அ.தி.மு.க.வினர் பணியாற்றுவது குறித்த
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டூவிபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் அவைத்தலைவர் திருப்பாற்கடல் தலைமையில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் பேசியதாவது:-
வருகிற 12, 13-ந் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கட்டாயமாக அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு வாக்காளர்பட்டியலை சரிபார்த்து புதிய இளம் வாக்களர்களை சேர்ப்பதில் மும்முறமாக களப்பணியாற்ற வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினரே உண்மையான அ.தி.மு.க.வினர். எனவே எந்த சலசலப்பை கண்டும் குழப்பம் அடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்புச்சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர்.ராஜசேகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, மாவட்ட இணைச் செயலாளர் செரினாபாக்கியராஜ், துணை செயலாளர் சந்தனம், தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி அருண்ஜெயக்குமார், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் மாமன்ற உறுப்பினர் வீரபாகு, மாநகர பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், ராமசந்திரன், விஜயகுமார், ராஜ்நாராயணன், சவுந்திரபாண்டி, மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் நடராஜன், டேக் ராஜா, ஜெ.தனராஜ், பில்லா விக்னேஷ், கே.ஜே.பிரபாகர், அருண்ஜெபக்குமார், திருச்செந்தூர் நகரச் செயலாளர் மகேந்திரன், பேரூராட்சி செயலாளர்கள் ரவிச்சந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வலசை வெயிலுமுத்து, பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், துணை செயலாளர் டைகர் சிவா, வட்ட செயலாளர்கள் முருகன், மனுவேல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட பொறுப்பாளர்களையும் அறிவித்தார்.
- விஜயலட்சுமி, கொண்டம்மாள், ஏ.ஆர். மணிவண்ணன், கார்த்திக், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடுமலை:
திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. சிறுபான்மையினர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உடுமலை குட்டைதிடலில் உள்ள நமதுபிளாசா கலையரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறுபான்மை மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். உடுமலை நகர பா.ஜ.க. தலைவர் கண்ணாயிரம் வரவேற்று பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹீம் கலந்து கொண்டு ஆேலாசனை வழங்கினார். மாவட்ட பொறுப்பாளர்களையும் அறிவித்தார்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும், உடுமலை மண்டல பார்வையாளருமான ஜோதீஸ்வரி கந்தசாமி, மாநில துணை தலைவர் பிஜூ, மாநில செயலாளர் ஜோசன், மாநில செயற்குழு உறுப்பினர் எட்வர்டு, மாவட்ட பார்வையாளர் சிவா, உடுமலை மண்டல் சிறுபான்மை அணி தலைவர் அமீர், நாகமாணிக்கம், தெய்வக்குமார், உமா குப்புசாமி, ஜோதிடர் முருகேசன், பாப்புலர் ரவி, தம்பிதுைர, பழனிசாமி, திருஞானம், செல்வராஜ், செல்வி, பால தண்டபாணி, கண்ணப்பன், விஜயலட்சுமி, கொண்டம்மாள், ஏ.ஆர். மணிவண்ணன், கார்த்திக், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார்.
- நடராஜ், தியாகராஜன், மற்றும் திமுக ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
நாடாளுமன்றத் தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.இந்த நிலையில் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என கடந்த மாதம் 9 ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில்தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். இதை தொடர்ந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என தி.மு.க. தலைமை சார்பில் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பூத் கமிட்டி மற்றும் கிளை கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், பொருளாளர் சாமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவண நம்பி ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசினர். இந்த கூட்டத்தில் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, துணை தலைவர் பாலசுப்பிரமணியம், திமுக கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் சிவக்குமார், முருகன்,கதிஜா பானு, பொருளாளர் கந்தசாமி, மாவட்ட பிரதிநிதிகள் சின்னப்பன், நடராஜ், தியாகராஜன், மற்றும் திமுக ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது
- கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மாடப்பள்ளி, செலந்தம்பள்ளி, அகரம், காக்கணம் பாளையம், ஜம்மணபுதூர், ஜவ்வாது மலை புதூர நாடு புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல்நாடு, உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் என் திருப்பதி தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் புதிய பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் குவைத் தலைவர் கோவிந்தன் இணை செயலாளர் டாஸ்மார்க் நாகராஜன் துணைச் செயலாளர் டாக்டர் திருப்பதி பொரு ளாளர் சிவக்குமார், உட்பட ஊராட்சி செயலாளர்கள் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு
- விவசாய கணக்கெடுப்பு பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
அரக்கோணம்:
அரக்கோணம் தாலுகா வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தாசில்தார் சண்முகசுந்தரம் விவசாய கணக்கெடுப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும், பாரத பிரதமரின் அனைவருக் கும் வீடு வழங்கும் திட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தலைமையிடத்து துணை தாசில்தார் சமரபுரி, வருவாய் ஆய்வாளர்கள் ஜெயபால், பிள்ளையார், யுவராணி, குழந்தை தெரேசா, கிராம நிர்வாக அலுவலர்கள் நெடுஞ்செழியன், ராஜேஷ், லட்சுமி நாராயணன், கார்த்தி, கலைவாணன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- வருகிற 8-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
- கூட்டத்தில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு முதல்-அமைச்சரை வரவேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகிற 8-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்று மாவட்டத்திற்கு முதல் முறையாக அவர் வர இருப்பதால் செங்கோட்டை நகர தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நகர அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு நகரச்செயலாளா் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் வருகிற டிசம்பர் மாதம் 8-ந் தேதி தென்காசி மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வருகை தரும் முதல்-அமைச்சருக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்சிவபத்மநாதன் ஆலோசனையின் பேரில் சிறப்பான வரவேற்பு வழங்கிடும் வண்ணம் செங்கோட்டை குண்டாறு ஆற்றுப்பாலம் முதல் நித்தியகல்யாணி அம்மன் கோவில் ஆற்றுப்பாலம் வரை சாலையின் இரு புறத்திலும் நிர்வாகிகள், பொதுமக்கள் என 3000-த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வரவேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ், நகர அவைத்தலைவர் காளி, நகர துணை செயலாளர்கள் ஜோதிமணி, முத்துசரோஜா, ராஜா, பொருளாளர் தில்லை நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் பீர்முகமது, மணிகண்டன், சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நெல்லை மண்டல தொ.மு.ச. மத்திய சங்க துணைச்செயலாளா் ரவீந்திரன் நன்றி கூறினார்.
- கூட்டத்தில் டாக்டர் அம்பேத்காரின் நினைவு நாளை முன்னிட்டு 2 நிமிடங்கள் மவுனம் கடைபிடிக்கப்பட்டது.
- வருகிற 15-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா நிறைவு சிறப்பு மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
தென்திருப்பேரை:
புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா நிறைவு சிறப்பு மாநாட்டின் ஆலோசனை கூட்டம் மாவட்ட துணை செயலாளர் எல்லை பறவை சுதன் தலைமையில் தென்திருப்பேரையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய செயலாளர்கள் ஆத்தூர் கேசவன் (கிழக்கு), ஆழ்வை செல்வகுமார் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய அணி செய லாளர் தேன்மான்குளம் ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் டாக்டர் அம்பேத்காரின் நினைவு நாளை முன்னிட்டு 2 நிமிடங்கள் மவுனம் கடைபிடிக்கப்பட்டது. வருகிற 15-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடை பெறும் புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா நிறைவு சிறப்பு மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
மேலும் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் முக்கிய தொழிலாக விளங்கும் விவசாய தொழிலை பாதுகாத்திடும் வகையிலும், எளிய விவசாயிகளின் நலன் காத்திடும் வகையிலும் வேளாண்மை துறை அதிகாரிகள் செயல்பட வலியுறுத்துகிறது. கடம்பாகுளம் மற்றும் தென்கரை குளங்களின் கரைகளை பலப்படுத்தி மடைகளை மராமத்து செய்து பாதுகாத்திட பொதுப்பணித்துறையை வலியுறுத்துகிறது.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு முதல் கொற்கை வரை ஜீவநதியான தாமிரபரணி நதியை இயற்கை வளப்பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திட தமிழக அரசை கேட்டுக்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் புளியங்குளம் பரியன், சேகர், ஸ்ரீீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் ராமராஜன், ஆழ்வை பேரூர் கழக செயலாளர் பிரபாகரன், ஆத்தூர் மாரீஸ் மள்ளர், ஆழ்வை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் இராஜபதி ஜெயராமன், குருகாட்டூர் கிளை செயலாளர் ஞானபிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்திருப்பேரை நகர செயலாளர் துர்க்கை யாண்டி நன்றி கூறினார்.
- உலக நெசவாளர் அமைப்பின் தமிழ்நாடு கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி
உலக நெசவாளர் அமைப்பின் தமிழ்நாடு கிளை அமைப்பு ரீதியிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஸ்ரீரங்கம் ராமானுஜ கூட திருமண மஹாலில் நடந்தது. கூட்டத்தில் அமைப்பின் இணை நிறுவனர் ரமேஷ் முனுகுண்ட்ல கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு பத்மசாலியர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.என். தங்கராஜ், மாநில பொது செயலாளர் வெங்கடாசலபதி திருப்பூர் மாவட்ட தலைவர் முத்தழகர், பொறியாளர் வியாபார சங்க தலைவர் லோகநாதன், முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் நாகராஜன், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளர் கஸ்தூரி, திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ், திருச்சி மாவட்ட மகளிரணி தலைவி மகாலட்சுமி, திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி வாசுதேவன், பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவின் சார்பில் அரசு நேதாஜி, மாநில செயலாளர் சதீஷ் குமார், திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட சங்க நிர்வாகிகள், நெசவாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் சேதுபதி பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- ‘‘நமது பள்ளி திட்டம்’’ குறித்து ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
- விரைவில் பொதுமக்கள் பங்களிப்புடன் அடிப்படை வசதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம்
முதல்வரின் நமது பள்ளி திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநகராட்சியின் மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை தாங்கினார். கவுன்சிலர் உசிலை சிவா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சிவகாமி வரவேற்றார்.
திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, மேஜை, நாற்காலி, கட்டிடம் உள்ளிட்டவைகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. விரைவில் பொதுமக்கள் பங்களிப்புடன் அடிப்படை வசதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.
இதில் மாநகராட்சி கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன், தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்ட செயலாளர் ஆறுமுகம், அ.தி.மு.க. பகுதி செயலாளர் முருகேசன், தே.மு.தி.க. செயற்குழு உறுப்பினர் நெடுமாறன் மற்றும் பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க. செயற்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான நெடுமாறன், இந்த பள்ளியை மேம்படுத்துவதற்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.
- ஆய்வுகள் முறையாக நடைபெறுகிறாதா என சோதனை
- எராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் பாமக சோளிங்கர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பூத் கமிட்டி செயல்பாடுகள் குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் இடையூர் கேசவன், சமூக முன்னேற்ற இணை செயலாளர் ஜெகதீஷன் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வுகள் முறையாக நடைபெறுகிறாதா என பாமக கவுரவத்தலைவர் ஜிகே மணி ஆய்வு மேற்கொண்டார்.
இதில் கிராமங்கள் தோறும் கிளைகழகங்களை மேம்படுத்துதல், வாக்குசாவடி தோறும் களப்பணியாளர்கள் அமைத்தல் கிராமங்கள் தோறும் கட்சி கொடி ஏற்றுதல், கிளைகழகங்கள் தோறும் திண்ணை பிரசாரங்கள், மாதந்திர கூட்டங்கள் நடத்தி பாமக கொள்கைகளை மக்களுக்கு எடுத்து கூறி கட்சி நிரந்தர வாக்காளர்களை சேர்த்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாசை முதலமைச்சராக ஆக்க அயராது பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அப்போது மாவட்ட தலைவர் அ.ம. கிருஷ்ணன், மாநில சமூக நீதிப் பேரவை துணை செயலாளர் சக்கரவர்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் ரஜேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், மாவட்ட முன்னாள் வன்னியர் சங்க செயலாளர் மோகன், ஒன்றிய தலைவர் சம்பத், ஒன்றிய அவைத் தலைவர் கேசவன், கிளை கழக தலைவர்கள் மனோகரன் ஆதிகேசவன் விஜயன், தம்பிப்படை திலீப்பவித்ரன் மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
- ராமநாதபுரத்தில் புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
- இதில் கலெக்டர் பங்கேற்று தலைமை தாங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 'முகவை சங்கமம்" என்னும் 5-வது புத்தகத் திருவிழா பிப்ரவரி 9-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் அனைத்து துறை அலுவலர்களுடன் புத்தகத் திருவிழாவின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் அதிகளவு வருகை தந்து புத்தகங்கள் வாங்கிச் செல்லும் வகையில் அலுவலர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். மேலும் புத்தகக் கண்காட்சியையொட்டி தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சி நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அரங்குகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகள் தங்கள் துறையின் மூலம் வழங்கப்பட்ட நலத் திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் வழங்க வுள்ள நலத் திட்டங்களின் விவரம் குறித்து ஒவ்வொரு நாளும் வருகை தரும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து அரசின் திட்டங்களை பெறுவதற்கு துறை அலுவலர்கள் உறு துணையாக இருந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.